Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tiruvannamalai (Page 4)

ஆரணி பகுதியில் அனுமதி பெறாமல் மணல் எடுத்துச் சென்ற 32 மாட்டுவண்டிகள் பறிமுதல்

ஆரணி பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக, அனுமதி பெறாமல் மணல் எடுத்துச் சென்ற 32 மாட்டுவண்டிகளை அதிகாரிகள் மடக்கிப்பிடித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்று வட்டாரப்பகுதிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுவதாக ஆரணி தாசில்தார் மணிமேகலைக்கு தகவல் வந்தது. இதையடுத்து தாசில்தார் தலைமையில் 15 பேர் கொண்ட வருவாய் துறை அதிகாரிகள் குழுவினர் விண்ணமங்கலம்‌, மேல்சீசமங்கலம்‌, ரெட்டிப்பாளையம்‌, கண்ணமங்கலம் ஆகிய பகுதிகள ...

Read more

திருவண்ணாமலையார் கோவிலில் கொடியோற்றத்துடன் தீப திருவிழா துவங்கியது

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையார் கோவிலில் கொடியோற்றத்துடன் தீப திருவிழா துவங்கியது. இந்த ஆண்டு கார்த்திகை தீபவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்ச மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடத்தப்பட்டது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், அண்ணாமலையார், அம்மன், சண்டீகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு ...

Read more

அதிமுக அரசு தொடர்ந்த அவதூறு‌ வழக்கு விசாரணை தொடர்பாக திருவண்ணாமலை நீதிமன்றத்தில் இன்று‌ ஆஜரானார்

சட்டத்திற்கு எப்போதும்‌ மதிப்பளிக்கும் தேமுதிக நிறு‌வனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த், அதிமுக அரசு தொடர்ந்த அவதூறு‌ வழக்கு விசாரணை தொடர்பாக திருவண்ணாமலை நீதிமன்றத்தில் இன்று‌ ஆஜரானார். திருவண்ணாமலை நீதிமன்றம் சென்ற கேப்டன் விஜயகாந்த், நீதிமன்ற வளாகத்திற்குள் நு‌ழைய முடியாத அளவிற்கு பொது‌மக்கள் மற்று‌ம் தொண்டர்கள் அங்கு குவிந்து‌ காணப்பட்டனர். நீதிமன்ற விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் விஜயகாந்த் ...

Read more

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது தேமுதிக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது தேமுதிக உறுப்பினர் எல்.வெங்கடேசன் திருக்கோவிலூர் ரயில்நிலையம் அருகே மேம்பாலம் அமைக்கப்படுமா? என்று எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார் தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது தேமுதிக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். விழுப்புரம் தொகுதி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் எல்.வெங்கடேசன், திருக்கோவிலூர் ரயில் நிலையம் அருகே ...

Read more

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பில் தமிழகத்தின் உள்ள அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தேமுதிக எம்எல்ஏக்கள் விசி,சந்திரகுமார், பார்த்தசாரதி, அனகை முருகேசன், நல்லதம்பி, அருள்செல்வன், செந்தில்குமார் ஆகிய 6 பேரை பழிவாங்கும் நடவடிக்கையாக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக அரசு சஸ்பெண்ட் செ ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

மயான கொள்ளை திருவிழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வேலூர் தோட்டபாளையம், மக்கான், ஓல்டு டவுன், காகிதப்பட்டரை உள்ளிட்ட பகுதிகளில் மயான கொள்ளை விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலிருந்து காளியம்மனை அலங்கரித்து பாலாற்றங்கரைக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அப்போது பக்தர்கள் காளிவேடமிட்டு பக்திப்பரவசத்துடன் காட்சியளித்தனர். பின்னர் அங்குள்ள மாயனக ...

Read more

திருவண்ணாமலையில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மருத்துவ காப்பீடு அட்டையை புதுப்பித்து வழங்கக்கோரி நெடுஞ்சாலைதுறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்‍. திருவண்ணாமலை கோட்டப்பொறியாளர் அலுவலகத்தின் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்‌,சாலைப்பணியாளர்களுக்கு தளவாடச் சாமான்கள் வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாததற்கு அப்போது கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சாலைப்பணியாளர் நிர்வாகத்திற்கு எதிராக அப்போது கண்டன மு ...

Read more

கூடுதல் பேருந்து இயக்ககோரி போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து முற்றுகை இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செய்யாறு அடுத்த திருமுண்டி கிராமம் வழியாக செல்லும் ஒரே ஒரு அரசு பேருந்து சரியான நேரத்தில் வராததால் அக்கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் அதிகாரிகளிடம் இருந்து எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள், சென்னை செல்லும் பேருந்தை சிறைபிடித்தனர். அந்த கிரா ...

Read more

செஞ்சியில் மக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியில் மின்சாரம் வழங்கக்கோரி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கடலாடிக்குலம் கூட்டு ரோட்டில் சாலை மறியல் நடைபெற்றது. தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர்‍. சாலைமறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்‍. ஆனால் மக்கள் இதனை ஏற்கவில்லை. இதனைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்‍. தடியடி காரணமாக மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஒடியதால ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top