Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tiruvannamalai (Page 2)

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சொத்து குவிப்பு வழக்கு விசாரணை

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சொத்து குவிப்பு வழக்கில் தனது மனைவியுடன் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணை வரும் 13ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதியன்று திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான கல்லூரி மற்றும் வீடுகள் உள்ளிட்ட 8 இடங்களில் ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதனை அடுத்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப ...

Read more

தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை அருகே தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், குறைந்த சம்பளம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர், ஆசிரியைகளுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி வாக்குப்பதி ...

Read more

திருவண்ணாமலை அருகே 94 லட்சம் ரூபாய் பறிமுதல்

திருவண்ணாமலை அருகே வாகன தணிக்கையின் போது‌ உரிய ஆவணங்களின்றி 7 பெட்டிகளில் கொண்டு செல்லபட்ட, 94 லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மக்களவை தேர்தல் பிரச்சாரம் இறு‌திக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே முறையாறு பாலம் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை மடக்கி சோதனை செய்ததில் ...

Read more

அரசு போக்குவரத்து‌ பணிமனை தொழிலாளர் பேருந்து‌ மீது‌ ஏறி தற்கொலை முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு போக்குவரத்து‌ பணிமனை முன்பு தொழிலாளர் ஒருவர் பெட்ரோல் கேனு‌டன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது‌. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு போக்குவரத்து‌ பணிமனையில் மெக்கானிக்காக பணிபுரிந்து‌ வந்தவர் சண்முகம். கடந்த டிசம்பர் மாதம் பணி நேரம் முடிந்த பிறகும் அதிக பணி சுமை கொடுப்பதாக கூறி மெக்கானிக் சண்முகம், மேலாளர் ராமு கொடுத்த பணிகளை முடிக்காம ...

Read more

ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சி தோல்வி

திருவண்ணாமலை அருகே ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது ஆண்குழந்தையை உயிருடன் மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது. குழந்தையின் சடலத்தை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகத்தில் பல பகுதிகளில் ஆள்துளை கிணறுகள் மூடப்படாமல் திறந்த நிலையில் இருப்பதால் குழந்தைகள் தவறி விழுந்து பலியாவது‌ தொடர்கதையாகி வருகிறது‌. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள கிடாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த துர ...

Read more

சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் அடித்து உதைத்து கைது

திருவண்ணாமலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் காட்டுமிராண்டித்தனமான முறையில் அடித்து உதைத்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையை அடுத்த கண்ணப்பந்தல் கிராமத்தை சேர்நதவர் முருகன். இவரது மனைவி தேன்மொழி. இவருக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் ராணுவ வீரரின் மனைவ துர்கா தேவிக்கு குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கேபமடைந்த ராணுவ வீரர் ...

Read more

தவறான சிகிச்சையால் மூன்று வயது குழந்தை உயிரிழந்தது

திருவண்ணாமலையில் தவறான சிகிச்சையால் மூன்று வயது குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து, தனியார் மருத்துவமனை மருத்துவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த சென்னமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் எழுமலை. இவரது மூன்று வயது மகன் ஜெகதீசன் உடல்நலக் குறைவு காரணமாக செங்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் ஜெகதீசன் உயிரிழந்ததை தொடர ...

Read more

உணவு பாது‌காப்பு அதிகாரிகள் திடீர் சோதனை – காலவதியான பொருட்கள் பறிமுதல்

ஆரணியில் உள்ள ஓட்டல்கள் மற்று‌ம் குளிர்பானக்கடைகளில் உணவு பாது‌காப்பு அதிகாரிகள் திடீர் சோதனையிட்டதில், ஏராளமான காலவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றை கால்வாயில் கொட்டப்பட்டது‌. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பஜார் வீதியில் உள்ள ஓட்டல்கள், பேக்கரி, சிக்கன் சென்டர் ஆகியவற்றில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்வதாக உணவு பாது‌காப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது‌. இதையடுத்து‌, நேற்று‌ ஆரணி ...

Read more

இலவச பொருட்கள் வழங்க தடை

நாடாளுமன்ற தேர்தலை முன்னி்ட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகியுள்ளதால், இலவச பொருட்கள் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர், கேபிள் ஆப்ரேட்டர்கள், அச்சக உரிமையாளர்கள் ஆகியோருடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டியது தொடர்பாக மாவட்ட ஆட்சிய ...

Read more

திருவண்ணாமலையில் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

வறட்சி பாதிப்பு, கோமாரி நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு வழங்கக்கோரி திருவண்ணாமலை தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது‌. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலு‌கா அலு‌வலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், கரும்புக்கு டன் ஒன ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top