Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tiruvannamalai

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

திருவண்ணாமலை அருகே பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி ஊராட்சி மன்ற தலைவரை கிராம மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட கண்டியாங்குப்பம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கிராம மக்கள் அனைவரும் பங்கேற்றனர். அப்போது, எவ்வித பணியும் நடைபெறாமல் ஆறு லட்சம் ரூபாய் ஊராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி, ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணனை மு ...

Read more

கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்யப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்

திருவண்ணாமலையில் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 3 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். தமிழகத்தில் தற்போது மாம்பழம் சீசன் களைகட்டியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்க ...

Read more

தெரு விளக்குகள் எரியாததற்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

வந்தவாசி அருகே 10 நாட்களாக தெரு விளக்குகள் எரியாததற்கு கண்டனம் தெரிவித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மெழுகுவர்த்தி மற்றும் தீப்பந்தத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டை பகுதி 2வது வார்டு பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், இப்பகுதியில் கடந்த 10 நாட்களாக தெருவிளக்குகள் செயல்படவில்லை. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்க ...

Read more

திருவண்ணாமலையில் வியாபாரி படுகொலை உறவினர்கள் சாலை மறியல்

திருவண்ணாமலையில் கடை முன்பு மது அருந்தியதை தட்டி கேட்ட வியாபாரியை, படுகொலை செய்த 5 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்துள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அதே பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 17-ந் தேதி இரவு, அப்பகுதியை சேர்ந்த 5 பேர் செல்வராஜ் கடையின் முன்பு மது அருந்தியதாக கூறப்படுகிறது. இதனை செல்வராஜ் தட்டி கேட்ட போது, 5 பேரும் செல்வராஜை கத்திய ...

Read more

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர்‍. திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் மிக முக்கிய திருவிழாக்களில் சித்ரா பவுர்ணமி திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு சித்திரை மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் வருவதால் இக்கோயிலின் ஆகம விதிகளின்படியும், நடைமுறை வழக்கங்களின்படியும் இரண்டாவதாக வரும் பவுர்ணமியே சித்ரா பவுர்ணமியாகக் கொண்டா ...

Read more

செய்யாறு அருகே ஆசிரியர் வீட்டில் கொள்ளை

செய்யாறு அருகே ஆசிரியர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 25 சவரன் நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணப்பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வேல்சோமசுந்தரம் பகுதியைச் சேர்ந்தவர் யாசோதா. அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், ஆரணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே ...

Read more

செங்கம் காய்கறி மார்க்கெட்டில் வெடிகுண்டு மிரட்டல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காய்கறி மார்க்கெட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்மநபர்கள் தொலைபேசியில் மிரட்டல் விடுத்த சம்பவம் பொது‌மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது‌. சென்னை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களுக்கும் அடுத்தடுத்து‌ வரும் வெடிகுண்டு மிரட்டலால் பொது‌மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று‌ அதிகாலை எப்போது‌ம் பரபரப்பாக காணப்படும் செங்கம் காய்கனி மண்டிக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் வந்த ...

Read more

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சொத்து குவிப்பு வழக்கு விசாரணை

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சொத்து குவிப்பு வழக்கில் தனது மனைவியுடன் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணை வரும் 13ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதியன்று திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான கல்லூரி மற்றும் வீடுகள் உள்ளிட்ட 8 இடங்களில் ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதனை அடுத்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top