Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tiruppur (Page 6)

பேருந்து மீது லாரி மோதி விபத்து

தாராபுரம் அருகே அரசு பேருந்தின் மீது லாரி மோதியதில் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்‍ தேனியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து ஒன்று வரப்பாளையம் சாலை வளைவை கடக்க முயன்ற போது எதிரே வந்த போது லாரி மீது பலமாக மோதியது. இதனால் நிலை குலைந்த பேருந்து, அருகே இருந்த மரத்தின் மீது மோதியுள்ளது. இதில் இருவாகனங்களின் ஓட்டுநர்கள் பலத்த காயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் ...

Read more

சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாட்டம்

திருப்பூரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி வாகன ஓட்டுனர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது. அதே போல திருப்பூரிலும் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் கருப்பண்ணன் தொடங்கி வைத்தார். விழாவில் வாகன ஓட்டு ...

Read more

இறந்த கோழிகளை விற்பனை செய்தவர் கைது

திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையத்தில் கோழிப்பண்ணைகளில் இருந்து இறந்த கோழிகளை வாங்கி பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்த நபரை கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பாண்டி என்பவர்தான் கைதானவர் ஆவார். இவர் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள கோழிப்பண்ணைகளில் இருந்து இறந்த கோழிகளை குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்த மாநகராட்சி அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் முருகம்ப ...

Read more

தொழில் முனைவோருக்கு மானிய டீசல், மா.கம்யூ கூட்டத்தில் கோரிக்கை

தமிழகத்தில் நிலவும் கடும் மின்பற்றாக்குறையால் சிறு, குறு தொழில் செய்பவர்கள் பாதிப்படைவதை தடுக்கும் விதமாக மானியவிலையில் டீசல் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். திருப்பூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். திருப்பூரில் ஏராளமானவர்கள் பின்னலாடை தொழிலில் ஈடுபட்டுள்ளதால்‌, மின் த ...

Read more

2 நாள் வேலை நிறுத்தம் – பிரகாஷ் காரத் தகவல்

உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், வருகிற பிப்ரவரி மாதம் இரண்டு நாட்கள் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய, மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர் பிரகாஷ் காரத் இதனை தெரிவித்தார். 20 மறறும் 21 தேதிகளில் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்துககு, அனைத்து கட்சிகளும் ஆதரவு அள ...

Read more

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரிக்கை

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். திருப்பூரில் பேசிய அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு திருப்பூரில் விரைவில் நடைபெற உள்ளது என்றார். இந்த மாநாட்டில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டு, உணவு பாதுகாப்பு ‌உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக கு ...

Read more

கும்பகோணத்தில் 300 நெசவாளர்கள் கைது

திருப்பூரில் நிலவும் கடுமையான மின்வெட்டு காரணமாக தொழில் நலிவடைந்த நெசவு தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தஞ்சாவூர்‌, திருவாரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சார்ந்த பட்டு கைத்தறி நெசவாளர்கள், 40 சதவீத கூலி உயர்வு, 8.33 சதவீத போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்‍. கும்பகோணம் மகாமக குளக்கரையில் இருந்து பட்டு கைத்தறி நெசவாளர்கள் சுமார் 300பேர்‌, தங்களது கோ ...

Read more

தாராபுரம் தனியார் நூற்பாலையில் தீ விபத்து

திருப்பூர் அருகே தனியார் நூற்பாலையில் மின் கசிவு காரணமாக சுமார் 30 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. திருப்பூர் மாவட்டம் ஆச்சியூரில் உள்ள முருகேசன் என்பவருக்குச் சொந்தமான ஆலையில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உயர் அழுத்த மின்கசிவு காரணமாக இயந்திரங்களுடன் இணைக்கப்பட்டு இருந்த பஞ்சு ரோல்களில் தீப்பிடித்துள்ளது. மளமளவென பற்றிய தீ ஆலையின் அனைத்து இடங்களுக்கும் பரவியுள்ளது. இதனால் ...

Read more

சாலையை கடக்கும் காட்டு யானைகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணைக்கு வரும் காட்டு விலங்குகளைப் பார்ப்பதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் யானை, காட்டெருமை, மான் போன்ற விலங்குகள் மாலை வேளையில் தண்ணீர் குடிக்க வருகின்றன. அமராவதி அணைப்பகுதியில் உள்ள புங்கன் ஓடையில் அருகம்புற்கள் செழித்து வளர்ந்திருப்பதால் அதை யானைகள் விரும்பி சாப்பிடுகின்றன. உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் சா ...

Read more

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் ஆளுநர் ரோசையா பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கினார். மடத்துகுளம் அடுத்துள்ள உடுமலை அருகே உள்ள தனியார் பள்ளியின் 51-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்க வருகை தந்த தமிழக ஆளுநர் ரோசையாவை பள்ளி நிர்வாகிகள் வரவேற்றனர். இதனையடுத்து நடைபெற்ற மாணவ, மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top