Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tiruppur (Page 5)

தமிழ்நாடு முழுவதும் தே.மு.தி.க மகளிர் அறப்போராட்டம் நடந்தது

பாலியல் வன்கொடுகளை கண்டித்தும், மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், விலைவாசி உயர்வை கட்டுபடுத்த தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தேமுதிக மகளிர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதுமுள்ள மாவட்ட தலைநகரங்களில் நேற்று மாபெரும் அறப்போராட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தேமுதிக மகளிரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி செயலாளர் சூடாமணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்ப ...

Read more

தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு 200க்கு மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி தாராபுரத்தில் நடைபெற்றது. ஜனவரி 30ம்தேதியை தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக இந்திய அ‌ரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில், தொழுநோயின் அறிகுறிகள், தொழுநோயினை கட்டுப்படுத்தும் முறைகள் ஆகிய ...

Read more

உடுமலைப்பேட்டையில் இலவச மடிக்கணினி வழங்க கோரிக்கை – மாணவர்கள் சாலை மறியல்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைபேட்டை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இலவச மடிக்கணினி வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் 2500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தக் கல்லூரியின் 3ஆம் ஆண்டு மாணவர்கள், தங்களுக்கு இலவச மடிக் கணினி வழங்காமல் 2ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கி வருவதைக் க‌ண்டித்து கல்லூரியின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.மே ...

Read more

திருப்பூரில் முதலீட்டு பணத்தை திரும்ப பெற கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

பைன் பியூச்சர் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்த முதலீட்டாளர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் பைன் பியூச்சர் நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனர். திடீரென அந்நிறுவனம் முதலீடு செய்தவர்களுக்கு பணம் திருப்பி தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து திருப்பூர், பல்லடம், அவினாசி, மடத்துக்குளம், உடுமலை பகுதியை சேர்ந்த ...

Read more

கடலை வியாபாரியின் முன்ஜாமீன் மனு

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்த கடலை வியாபாரி ராமலிங்கம் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 28-ந்தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த தொழில் அதிபர் ராமலிங்கம். அமெரிக்க கடன் பத்திரங்களை சென்னையில் உள்ள ஒரு வங்கியில் மாற்ற முயன்றார். அப்போது சந்தேகம் அடைந்த வங்கி அதிகாரிகள் இதுபற்றி வருமான வரித்துறையிடம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்த ...

Read more

திருப்பூரில் சிறப்பு தற்காப்பு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது

பாலியல் வன்கொடுமையில் இருந்து மாணவிகள் மற்றும் பெண்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக திருப்பூரில் சிறப்பு தற்காப்பு பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மணாவிகள் மற்றும் பெண்களுக்கான இந்த முகாமை திருப்பூர் கராத்தே கிளப் தொடங்கியுள்ளது. முகாமில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பற்றி செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 4 வயது சிறுமிகள் மாணவிகள் மற்றும் பெண ...

Read more

தென்னந்தோப்பினை சூறையாடிய யானைக்கூட்டம்

ஒட்டன்சத்திரம் அருகே 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை யானைக்கூட்டங்கள் சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்‍. ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாட்சி மலைப்பகுதியில் பழனிச்சாமி, தங்கராஜ் ஆகியோருக்கு சொந்தமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. இந்நிலையில் தென்னந்தோப்பிற்குள் புகுந்த யானைக்கூட்டங்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து நாசப்படுத்தியுள ...

Read more

திருப்பூர் பஞ்சு ஆலை தீவிபத்தில் 15லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பஞ்சு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொழிற்சாலையில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. தகவல் அறிந்த தீ அணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்‍.இரண்டு தீ அணைப்பு வண்டிகள் மூலம் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்‍. விபத ...

Read more

மின்வெட்டைக் கண்டித்து திருப்பூரில் ஆர்பாட்டம்

மின்வெட்டால் நலிந்து வரும் ஆடைத் தொழிலைக் காப்பாற்ற திருப்பூருக்கு தனிமின்நிலையம் அமைத்து தர வேண்டும் என கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இருளில் மூழ்கடித்து வரும் மின்வெட்டை சீர்செய்யக்கோரி கொங்குநாடு முன்னேற்றகழகம் சார்பில் திருப்பூர் மங்கலம் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசுக்கு எதிரான கண்டன முழங்கள் அப்போது எழுப்பப்பட்டது. ‍பின்னர் பேசிய அக்கட்சியி ...

Read more

ஓய்வு எடுப்பதே முதலமைச்சரின் சாதனை – மு.க. ஸ்டாலின்

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கொட நாட்டில் ஓய்வு எடுப்பதே தமிழக முதலமைச்சரின் சாதனை என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். திருப்பூரில் பேசிய அவர், தமிழகத்தில் 3 மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா, இதுவரை மின்உற்பத்திக்கான திட்டங்களை நிறைவேற்றவில்லை என்றார். மின் உற்பத்திக்கான திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் தான் கொண்டு வரபட்டது என்று தெ ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top