Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tiruchirappalli (Page 7)

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வலிறுத்தல்

தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி வெஸ்லி பள்ளி மைதானத்தில் இருந்து 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், விவசாய சங்கங்களின் பிரநிதிகளை அழைத்து பேசிய பிறகே நிவரண ...

Read more

சமயபுர மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சக்தி தலங்களில் மிகவும் புகழ் பெற்று விளங்கும் இக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பெருமாள் சீர்வரிசை கொடுக்கும் தைப்பூசத் திருவிழா நடைபெறும்‍. மூலஸ்தானத்தில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்ட அம்மன் கொடி மண்டபத்திற்கு வந்தார். அப்போது மேள தாளங்கள் முழங்க கொடி ஏற‍்றப்பட்டது. இந்நிகழ்ச்சியை காண கோயி ...

Read more

வாடகை கட்டாத கடைகள் சீல்வைப்பு

திருச்சி மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமாக 41 கடைகள் உள்ளன. இதில் டெண்டர் மூலம் எடுக்கப்பட்ட கடைகளில் 16 கடைகளின் உரிமையாளர்கள் வாடகையைத் தரவில்லை.இதனால் மாநகராட்சிக்கு 1 கோடியே 55லட்சம் வாடகை வரவேண்டி இருந்தது.இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது ...

Read more

திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்திக்க விவசாயிகள் தர்ணா போராட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது‌. திருச்சி உய்யங்கொண்டான், கட்டளை மேட்டுவாய்க்கால் உள்பட 17 காவிரி ஆற்றின் கிளை வாய்க்கால்களின் மூலம் பாசன வசதி பெற்று‌ வரும் 2 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள், நீரின்றி வாடி வருகின்றன. அவ்வாறு கருகி வரும் பயிர்கள் மற்றும் வாழை இலைகளை கையில் எ ...

Read more

பார்வர்டு பிளாக் கட்சியினர் உண்ணாவிரதம்

தமிழக அரசால் போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி திருச்சியில் பார்வர்டு பிளாக் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்‍. திருச்சி ரயில் நிலையம் முன்பு இப்போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் மாநிலத் தலைவர் சந்தானம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஷின் பிறந்த தினமான ஜனவரி 23ஆம் தேதியை தேசபக்தி தினமாக அறிவிக்க வேண்டும்‌ என்றார்‍. மேலும் மீனவர்களின் நலன் கருதி கச்சத்தீவை மீட்க வேண்டு ...

Read more

மலைக்கோட்டை விரைவு ரயில் ஓட்டுனர் திடீர் வேலை நிறுத்த போராட்டம்

திருச்சியில் ரயில் ஓட்டுனர் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் மலைக்கோட்டை விரைவு ரயில் புறப்பட தாமதமானது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலை ஓட்டி வந்த ரயில் ஓட்டுனரை காரைக்கால் ஸ்டேஷன் மாஸ்டர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சக ரயில் ஓட்டுனர்கள் திருச்சி ரயில்வே ஜங்சன் முன்பு இரவு 9 மணிக்கு திடீரென வேலை நிறுத்த போராட்ட ...

Read more

திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்

டி.டி.எச்சில் வெளியிட உள்ள நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபத்தை திரைப்படத்திற்கு திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக திருச்சியில் திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது ...

Read more

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பூலோக சொர்க்கம் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வைகுண்ட ஏகாதசியான இன்று, அதிகாலை 3.15 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பாடல்களுடன் நிகழச்சி துவங்கியது. தொடர்ந்து ரத்தின அங்கி, கிளிமாலை, பாண்டியன் கொண்டை அலங்காரத்துடன் மூலஸ்த ...

Read more

ராமதாசைக் கைது செய்ய கோரி உண்ணாவிரதம்

தர்மபுரி சாதி கலவரத்திற்கு காரணமானவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்‍. போராட்டத்தில் தர்மபுரி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கலவரத்தைத் தூண்டிவிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ...

Read more

திருச்சியில் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டலை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தப்பட்ட சம்பவத்தால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு சோதனை கருவிகளுடனும், மோப்ப நாயுடனும் சத்திரம் பேருந்து நிலையம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பின் மூலம்‌ சத்திரம் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திரு ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top