Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tiruchirappalli (Page 5)

மணப்பாறை ரயில்வே மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்ககோரி தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கட்டிமுடிக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்ககோரி தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணப்பாறையில், திருச்சி சாலை ரயில்வே கிராசங்கில் சுமார் 28 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்றது. மேம்பாலம் கட்டும்பணி முடிவடைந்த நிலையில், மேம்பாலத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும் என்ற ...

Read more

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் தே.மு.தி.க தமிழகம் முழுவதும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க செயல்வீரர்களின் கூட்டம் நடைபெற்றது நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயார்படுத்திடகூட்டத்தை நடத்திடவேண்டும் என்று கேப்டன் விஜயகாந்த் தேமுதிகவினருக்கு உத்தரவிட்டார். அவரது ஆணைக்கிணங்க காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், உளுந்தூர் பேட்டை மாநாடு பற்றியும் ஆலோசிக்க ...

Read more

பணி நிரந்தரம் செய்ய கோரி மத்திய அரசின் பெல் நிறுவன ஊழியர்கள் மாபெரும் உண்ணாவிரதம்

பணி நிரந்தரம் செய்ய கோரி மத்திய அரசின் பெல் நிறுவன ஊழியர்கள் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி திருவெறும்பூரில் செயல்பட்டு வரும் பெல் நிறுவனத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 35 ஆண்டு காலமாக உழைத்து வரும் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி இன்று பெல் நிறுவன நுழைவாயில் முன்பு தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொ ...

Read more

நரேந்திர மோடி நாளை திருச்சி வருகிறார்.

திருச்சியில் நடைபெறும் பாஜக இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி நாளை திருச்சி வருகிறார். 2014-ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பாஜக பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி செப்டம்பர் 13-ஆம் தேதி அறிவிக்கப்பட்டார்.அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.அதன் ஒரு பகுதியாக நாளை திருச ...

Read more

காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடாமல் பாசாங்கு செய்வதாக அதிமுக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடாமல் பாசாங்கு செய்வதாக அதிமுக அரசு மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. திருச்சி பாலக்கரை சகாயமாதா மக்கள் மன்றத்தில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜரின் 111வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு பேசிய விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, காமராஜர் பிறந்தநாளான ஜூலை 16ம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக கடந்த ஆட்சியி்ல் ஆணை ...

Read more

திருச்சி பிறந்து ஒருநாளே ஆன பெண் குழந்தை கடத்தல்

திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து ஒருநாளே ஆன பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி முசிறி ஆவூரை சேர்ந்தவர் கூலிதொழிலாளி செல்வம். இவரது மனைவி தெய்வானை பிரசவத்திற்காக பூவாளுர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று இரவு தெய்வானைக்கு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிரசத்திற்கு பின்னர் தெய்வானையில் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனைக் ...

Read more

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தி சேகரிக்க சென்ற கேப்டன் செய்தியாளர்களை அதிமுக குண்டர்கள் தாக்கியுள்ளனர்

மக்களை பிரச்சனைகளை கேப்டன் தொலைக்காட்சி விருப்பு வெறு‌ப்பின்றி ஒளிபரப்பு செய்து‌ வருவதால், அதிமுக அமைச்சர்கள் பலரும் வெறு‌ப்படைந்து‌ள்ளனர். திருச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தி சேகரிக்க சென்ற கேப்டன் செய்தியாளர்களை அதிமுக குண்டர்கள் தாக்கியுள்ளனர். திருச்சியில் உள்ள காயிதே மில்லத் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து‌ கொள்வதற்காக அதிமுக அமைச்சர்கள் மற்று‌ம் எம்.எல்.ஏ.க்கள் வந ...

Read more

திருச்சி அருகே கத்திமுனையில் 100 சவரன் நகைகள் மற்றும் நாலேகால் லட்சம் ரூபாய் கொள்ளை

திருச்சி அருகே கத்திமுனையில் 100 சவரன் தங்க நகைகள் மற்றும் நாலேகால் லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் துரை. இவர் அப்பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். நள்ளிரவில் இவரது‌ வீட்டின் பின்புறம் சுவர் ஏறிக்குதித்த மர்ம கும்பல் ஒன்று‌ பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்தனர். தூங் ...

Read more

திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் பிரமுகர்களை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் தஞ்சாவூரில் சாலை மறியல்

திருச்சியில் மாணவர்களை தாக்கிய காங்கிரஸ் பிரமுகர்களை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்கள் தஞ்சாவூரில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் பேருந்து நிலையம் முன்பு தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்‌பை சேர்ந்த மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‌அப்போது காங்கிரசாருக்கு எதிராக அனைவரும் முழக்கம் எழுப்பினர். திருச்சியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ் பிரமுகர்களை உடனடிய ...

Read more

திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கண்டனம்

திருச்சியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவத்திற்கு ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். திருச்சியில் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் பேசிய அவர், திருச்சியில் ஈழத்தமிழர்களுக்காக போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் கண்டனத்திற்கு உர ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top