Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tiruchirappalli (Page 4)

திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தை முற்றுகை

திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அண்ணா நகரில் வசிப்பவர் சாந்தி. இவர் தனது கணவர் சண்முகவேலுவுடன் சேர்ந்த ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இதில் சீட்டுப் பணத்தை திருப்பிக்கொடுக்காமல் இருந்து வ்நத அவர் லட்சக்கணக்கான பணத்துடன் திடீரென்று தலை ...

Read more

கால்நடைகளை தாக்கும் கோமாரி நோயை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து‌ தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கால்நடைகளை தாக்கும் கோமாரி நோயை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து‌ தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் மாடு, ஆடு போன்ற கால்நடைகளுக்கு வேகமாக பரவி வரும் கோமாரி நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து‌ திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றிய தேமுதிக சார்பில் ஸ்ரீ ரங்கம் தொகுதிக்குட்பட்ட மரவனூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது‌. திருச்சி தெற்குமாவட்ட செயலாளர ...

Read more

திருச்சியில் மாநில அளவிலான யோகா போட்டியில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிபடுத்தினர்

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில் மாணவ, மாணவிகள் நிகழ்த்திய யோகாசானங்களை பார்வையாளர்கள் வியந்து‌ பாராட்டினர். தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் மாநில அளவிலான யோகா மாநாடு திருச்சியில் 10 நாட்களுக்கு நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று‌, உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்போட்டிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில், கரூர், கோவை, ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட ம ...

Read more

முசிறியில் தந்தையை கொலை செய்த வழக்கில் மகன்கள் உள்பட 7 பேருக்கு ஆயுள்தண்டனை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

திருச்சி மாவட்டம் முசிறியில் தந்தையை கொலை செய்த வழக்கில் மகன்கள் உள்பட ஏழு நபர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கி திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. முசிறி பகுதியை சேர்ந்த சேகர்‍, கடந்த 2011-ம் ஆண்டு மர்மநபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார்‍. இந்த கொலை சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சேகரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொணட்னர்‍. இதில் சே ...

Read more

அனுமதியின்றி மணல் கடத்திய ஒன்பது லாரிகள் பறிமுதல்

விளாத்திகுளத்தில் அனுமதியின்றி மணல் கடத்திய ஒன்பது லாரிகளை வருவாய்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்‍. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சூரங்குடி பகுதியில் ஆட்சியர் ரவிக்குமார் உத்தரவுபடி வருவாய்துறை அதிகாரிகள் மணல் லாரிகளை நிறுத்தி திடீர் ஆய்வு மேற்கொண்டனர்‍. அப்போது திருச்சி மாவட்டம் கல்லணை மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் கோவிலடி ஆகிய பகுதிகளில் இருந்து மணல் ஏற்றி கொண்டு லாரிகள் வந்தது. மேலும் அனுமதியின் ...

Read more

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப்போட்டியில் திருச்சி தபால்துறை அணி வெற்றி

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கபடிப்போட்டியில் திருச்சி தபால்துறை அணி வெற்றி பெற்று சுழல்கோப்பையை வென்றது. திருப்பூர் அணி இரண்டாம் பரிசை பெற்றது. திருச்சியில் மாநில அளவிலான நிறுவனங்களுக்கு இடையேயான கபடிப்போட்டி இங்குள்ள ஆர்விஎஸ் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் காவல்துறை அணிகள் உள்பட 12 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இறுதிப்போட்டியில் திருச்சி தபால்துறை அணியும், திருப்பூர் பாரத் பிரிண்டர்ஸ் அண ...

Read more

திரு்ச்சியில் டாக்டரைப்போல் நடித்து கொள்ளையடித்த கணவன்-மனைவி கைது

திரு்ச்சியில் டாக்டரைப்போல நடித்து 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்கள், லேப் டாப் ஆகியவற்றை நூதனமுறையில் கொள்ளையடித்துச் சென்ற கணவன்-மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை சிங்காநல்லூர் நஞ்சப்பர் காலனியை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவரது மனைவி சோனியா இவர்கள் குடும்பத்துடன் திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு செல்போன் வாங்க வந்துள்ளனர். அப்போது கணவன்-மனைவி இருவரும் தங்களை டாக்டர் என்று அறிமு ...

Read more

முசிறி பேரூராட்சி 16-வது வார்டு தேமுதிக கவுன்சிலர் தனசேகரன் நூதன போராட்டம்

முசிறி பேரூராட்சிக்குட்ப்பட்ட 16-வது வார்டு தேமுதிக கவுன்சிலர் தனசேகரன், சாக்கடை கழிவுகளை அகற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. முசிறி பேரூராட்சிக்குட்பட்ட கைகாட்டியில் பயணிகள் நிழற்கூடம் அருகே பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் போதுமாக தண்ணீர் வசதியோ, வடிகால் வசதியே பேரூராட்சி நிர்வாகத்தால் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் கழிவு ...

Read more

தமிழ்நாட்டில் மின்னல் தாக்கி 3 பெண்கள் உள்பட 6 பேர் பலி

தமிழ்நாட்டில் மின்னல் தாக்கி 3 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்துள்ள அயன்பொருவாய் ஊராட்சியில் உள்ள சின்னாரம்பட்டி புதுக்குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை நூறு நாள் வேலை திட்ட பெண் பணியாளர்கள் செய்து வந்தனர்‍. இந்த நிலையில் அங்கு இடி,மின்னலுடன் கடும் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் கூலித்தொழிலாளர்கள் மீனாட்ச ...

Read more

ஜனசதாப்தி விரைவு ரயில் 5 மணி நேரம் தாமதம் பயணிகள் ரயில் மறியல் போராட்டம்

திருச்சி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதை அடுத்து ஜனசதாப்தி விரைவு ரயில் திருச்சியில் நிறுத்தப்பட்டதால், பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது. இதன் காரணமாக கோவையில் இருந்து திருச்சி வழியாக மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் ஜனசதாப்தி விரைவு ரயில் 5 மணி நேரம் தாமதமாக திருச்சி வந்தது. பின்னர் பயணிகள் அனைவரையும் இறங்கிவிடும் படி கூறிய ரயில்வே ந ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top