Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tiruchirappalli (Page 2)

மணப்பாறை அருகே காலிகுடங்களுடன் பொது‌மக்கள் சாலை மறியல்

மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பொது‌மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால், 5 மணி நேரம் போக்குவரத்து‌ பாதிக்கப்பட்டது‌. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள அணைக்கரைபட்டி, களத்து‌ப்பட்டி, சக்கம்பட்டி, சீத்தப்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் வசதி செய்து‌கொடுக்கப்படவில்லை என்று‌ கூறப்படுகிறது‌. இது‌குறித்து‌ மாவட்ட நிர்வாகம் மற்று‌ம் வையம்பட்டி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை புக ...

Read more

கிறிஸ்தவ சபைக்குரிய 100கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் போலி ஆவணம் தயாரித்து விற்பனை

திருச்சியில் உள்ள கிறிஸ்தவ சபைக்குரிய 100கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக முன்னாள் பேராயர் உள்பட 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக சுவிசேஷ லூத்தரன் திருச்சபை திருச்சியை தலைமையிடமாக இயங்கி வரும் கிறிஸ்தவ சபையாகும். இந்த சபைக்கு தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. இந்த நிறுவனத ...

Read more

மணப்பாறை அருள்மிகு வேப்பிளை மாரியம்மன் கோவிலில் 29ம் ஆண்டு பூச்சொரிதல் விழா

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அருள்மிகு வேப்பிளை மாரியம்மன் கோவிலில் 29ம் ஆண்டு பூச்சொரிதல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மணப்பாறை நகரின் மத்தியில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு வேப்பிளை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள அம்மன் சமயபுரம் மாரியம்மனின் சகோதரியாக அழைக்கப்படுகிறார்.. இந்நிலையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைதிருவிழா நேற்று பூச்சொரிதல் விழாவுடன் துவங்கியது. இத ...

Read more

திருச்சி தேமுதிக வேட்பாளர் ஏ,எம்.ஜி விஜயகுமாரை ஆதரித்து வைகோ பிரச்சாரம்

தேசிய ஜனநாயக கூட்டணி 320 இடங்களில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் 100 இடங்களை கூட நெரு்ங்முடியாது எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில் தேமுதிக நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் ஏ,எம்.ஜி விஜயகுமாரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், இமையம் முதல் குமரி வரை மோடிஅலை வீசுவதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி 320 இடங்களில் வெற்றி பெற ...

Read more

சொத்துக் குவிப்பு வழக்கை ஜெயலலிதா இழுத்தடிப்பது ஏன் ? – கேப்டன் விஜயகாந்த் கேள்வி

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா 15 ஆண்டுகளுக்கு மேலாக வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடிப்பது ஏன்? என்று கேப்டன் விஜயகாந்த் கேள்வி விடுத்தார். நாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதிரித்து திருவாருரிலும்,‌ சிதம்பரம் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் சுதா மணிரத்னத்தை ஆதிரித்து காட்டு மன்னார் கோவிலிலும் கேப்டன் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்‍. அப்போது பேசிய அவர், ஜ ...

Read more

ஸ்ரீ ரங்கம் நம்பெருமாள் கோயில் யானை தாக்கி ஒருவர் படுகாயம்

திருச்சி ஸ்ரீ ரங்கம் நம்பெருமாள் கோயில் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த நபர் மருத்து‌வமனையில் சிகிச்சைக்காக அனு‌மதிக்கப்பட்டுள்ளார். திருச்சி ஸ்ரீ ரங்கம் நம்பெருமாள் கோயிலில் தற்போது‌ ஆதிபிரமோற்சவம் வைபவம் நடைபெற்று‌ வருகின்றது‌. கடந்த 5ம் தேதி கொடியேற்றத்து‌டன் விழாவில் நம்பெருமாள் நாள்தோறு‌ம் பல்வேறு‌ வாகனங்களில் உபநாச்சியார்களுடன் வலம் வருகிறார். இந்நிலையில் 3-ம் திருநாளான நேற்றைய விழாவல்‌ கோயில் ...

Read more

திருச்சி போலீசார் தேர்தல் ஒத்திகை

தேர்தலின்போது கலவரம் மூண்டால் அதனை தடுக்கும் ஒத்திகையில் திருச்சி போலீசார் ஈடுபட்டனர். நாடாளுமன்ற தேர்தலின்போது கலவரம் ஏற்பட்டால் கலவரத்தில் ஈடுபடுவோரை தடுப்பது என்பது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலவரக்காரர்களை போல கற்களையும், பாட்டில்களையும் வீசி நடித்தனர். அவர்களுக்கு முன்பாக கலவரக்காரர்களை ஒடுக்குவதுபோல எச்சரிக்கை குரல்கொடுத்து அணிவகுத்து வந்த போலீசார் கலவரத்தில் ஈடுபடுவது ...

Read more

திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தீ விபத்து

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிகாலையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் அலு‌வலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான கோப்புகள் எரிந்து சேதமானது. திருவெறும்பூர் சார்பதிவாளர் அலவலகத்தில் இன்று‌ அதிகாலை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அருகிலிருந்த பொது‌மக்கள் விரைந்து செயல்பட்டு அலுவலக கதவையும் ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். மேலு‌ம் தீயணைப ...

Read more

சிமெண்டு சாக்குகளை ஏற்றிச்சென்ற லாரி தீ விபத்து

திருச்சியை அடுத்த துறையூர் அருகே சிமெண்டு சாக்குகளை ஏற்றிச்சென்று லாரி ஒன்று டீசல் டேங் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதில் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து‌ சாம்பலானது. மராட்டிய மாநிலம் நாகபுரி அருகே உள்ள சந்தராப்பூரில் இருந்து சிமெண்ட் பேக்கிங் செய்யும் காகிதப்பை சாக்குகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருச்சி அருகே உள்ள திருவெள்ளக்கரை என்ற இடத்துக்கு சென்றுகொண்டிருந்தது. இன்று காலை அந ...

Read more

திருச்சியில் மாநில அளவிலான ஹாக்கி போட்டி

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் 30 அணிகள் பங்கேற்றன. மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் தமிழக அணிக்கான வீரர்கள் தேர்வு செய்ய உள்ளனர்‍. இதன் ஒரு பகுதியாக திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் ஹாக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு ஹாக்கி யூனிட் இணைந்து மாநில அளவிலான ஹாக்கி போட்டியை நடத்தியது‌. முதல் போட்டியில் கன்னியாகுமரி அணியுடன் விருதுநகர் அணி மோதியது. சிறப்பு நடுவர்களின் கண்காணிப்பில் இ ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top