Warning: mysqli_query(): (HY000/1030): Got error 28 from storage engine in /home/captainn/public_html/wp-includes/wp-db.php on line 1924
Tiruchirappalli – Captain News Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tiruchirappalli

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

திருச்சியில் கட்டுமான பணியின் போது கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்த வழக்கில், வீட்டு உரிமையாளர் உட்பட 4 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் உத்தரவீதி பகுதியில்  பழைய வீடு ஒன்றை  இடித்துவிட்டு, புதிதாக 2 அடுக்கு மாடி கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இதில் மணச்சநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  நேற்று  பணியில் ஈடுபட்டிருந்தபோது, பக்கத்து வீட்டின் சுவர் சரிந்து, வீட்டின் மீது விழுந்ததில், மேற்கூரை இடிந்து, தொழிலாளர்கள் 9 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்  நசுங்கி ப ...

Read more

தனியார் கரும்பு ஆலை உரிமையாளர்கள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு

கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 650 ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டும், தனியார் கரும்பு ஆலை உரிமையாளர்கள் வழங்க மறுப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். திருச்சியில் விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாய சங்க பிரதிநிதிகள், கரும்புக்கு டன் ஒன்றுக்கு 2 ஆயிரத்து 650 ரூபாய் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டும், தனியார் கரும்பு ஆலை உரிமையாளர்கள் ...

Read more

திருச்சியில் செல்லப்பிராணிகளுக்கான போட்டி நடைபெற்றது

திருச்சியில் நடைபெற்ற செல்லப்பிராணிகளுக்கான போட்டியில் பல்வேறு நாய்கள் பங்கேற்றதோடு, போலீஸ் நாய்களும் கலந்துகொண்டு நெருப்பு வளையத்திற்குள் தாண்டி சாகசம் செய்தது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. தனியார் பிராணிகள் மையம் சார்பில், திருச்சியில் நடைபெற்ற இக்கண்காட்சியில் செயின்ட்பிராண்ட்‌, கோல்டன் ரெட்ரீவர்‌, ஜெர்மன் ஷெப்பர்டு, டாபர்மேன்‌, சிப்பிப்பாறை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. நாய்களி ...

Read more

துறையூர் அருகே மாணவியை நரபலி கொடுக்க முயற்சி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே புதையலுக்கு ஆசைப்பட்டு 12ம் வகுப்பு படிக்கும் மாணவியை தந்தையே நரபலி கொடுக்க முயற்சி செய்யப்பட்ட கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கோனேரிபட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது வீட்டில் புதையல் உள்ளதாக பூசாரி ஒருவர் கூறியுள்ளார். இதனை அடுத்து, பூசாரியுடன் இணைந்து வீட்டில் புதையலை தோண்டும் பணியில் அனைவரும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ...

Read more

லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் மற்றும் போர்மென் கைது

திருச்சியில் மின் இணைப்பை துண்டிக்க இரண்டாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் மற்றும் போர்மென் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில் வசித்து வருபவர் அப்துல் அஜிஸ். இவர் சுந்தர் நகர் பகுதியில் மீன்கடை நடத்தி வந்தார். பல்வேறு காரணங்களால் அப்பகுதியில் இருந்த‌ மீன் கடையை அவர் வேறு இடத்திற்கு மாற்றம் செய்தார். இதனிடையே, சுந்தர்ந ...

Read more

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

திருச்சி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது‌. தேமுதிக நிறு‌வனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் ஆணைக்கிணங்க தேமுதிகவினர் சார்பில் தமிழகம் முழுவது‌ம் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஏழை, எளிய மக்களுக்கு தண்ணீர் பந்தல், நீர் மோர், தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட மணிகண்டம் ஒன்றிய தேமுதிக சார்பில் பொது‌ மக்களின் ...

Read more

இறைச்சிக்காக விற்கப்படும் ஜல்லிக்கட்டுகாளைகள்

மணப்பாறை மாட்டுச்சந்தைக்கு விற்பனைக்காக வந்த பெருமளவு ஜல்லிக்கட்டுகாளைகள், இறைச்சிக்காக அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டது‌. சமீபத்தில் ஜல்லிக்கட்டு காளைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது‌. இதன் எதிரொலியாக ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் தங்களது‌ காளைகளை விற்று‌ வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், மணப்பாறை வாரச்சந்தையில், ஜல்லிக்கட்டு காளைகள் இறைச்சிக்காக அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்யப்பட்டது ...

Read more

மணப்பாறை அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

மணப்பாறை அருகே சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்‍. திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட மஞ்சம்பட்டி, தீராம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த பல மாதங்களாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தபட்ட அதிகாரிகளுடன் புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவி ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top