Home
You Are Here: Home » News » Tamil Nadu » Tirunelveli (Page 5)

நெல்லையில் குடிநீரில் கலந்தது சாக்கடை

திருநெல்வேலி அருகே, சாக்கடை கலந்த குடிநீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர், வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மானூர் ஊராட்சிக்குட்பட்ட சங்கம்திரடு கிராமத்தில் கழிவு நீர் ஓடை கட்டும் பணியின் போது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் சாக்கடை நீர் கலந்துள்ளது. இது குறித்து கிராம மக்கள் ஊராட்சி ஒன்றியத்தில் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் கழிவு நீர் ...

Read more

இரு பிரிவினர் இடையே மோதல்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே, இரு பிரிவினர் இடையே நிலவி வந்த முன்விரோதம் காரணமாக, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளதால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஊர்க்காடு மற்றும் கீழ்காலனி பகுதியை சேர்ந்தவர்களுக்கு இடையே சில ஆண்டுகளாக மோதல் நீடித்து வந்தது. இது தொடர்பாக இரு தரப்பினர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், கீழ்காலனியைச் சேர்ந்த மாரியப்பன் ...

Read more

தமிழகத்தில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அடு்த்தடுத்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. சென்னையை கொளத்தூரில் வெளியூருக்கு சென்றிருந்தவர் வீட்டில் ஜன்னலை உடைத்து புகுந்து 15 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை போய் உள்ளது. சென்னை கொளத்தூர் செந்தில் நகரில் வசிப்பவர் கணேசன். அதிமுக பிரமுகரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டைபூட்டிவிட்டு குடும்பத்துடன் டெல்லி சென்றிருந்தார். முன்னதாக வீட்டை அருகில் வசிக்கும் ...

Read more

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – வெள்ளாற்றில் காணும் பொங்கல் கொண்டாட்டம்

நெல்லை மாவட்டம், குற்றாலத்திற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் பொங்கல் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குற்றாலத்திற்கு வருகை தந்தனர். அங்குள்ள அருவி மற்றும் பூங்காக்களில் குடும்பத்துடன் சென்று கண்டு ரசித்தனர். இதே போல் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது. அத்துடன ...

Read more

தென்னிந்திய அளவிலான மகளிர் கபடி போட்டி

தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் கபடி போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் பாளையங்கோட்டையில் வான வேடிக்கையுடன் வண்ணமயமாக தொடங்கியது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெறுகிறது. திருநெல்வேலி மாநகர காவல்துறை ஆணையர் சுனில்குமார்சிங் இந்நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு வான வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வண்ணமயமான வான வேடிக்கைகள் அனைவர ...

Read more

பொங்கல் முதல் சோதனை ஓட்டம்

அணு உலையில் பொங்கல் பண்டிகை முதல் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் அங்கு நடைபெற்ற உயர் மின் அழுத்த சோதனையில் இரண்டு வால்வுகளில் மின் கசிவு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சரி செய்யும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. ஓரிரு நாளில் அந்த பணிகள் நிறைவடைந்த உடன் பொங்கல் பண்டிகை முதல் கூடங்குளம் அணு மின் உற்பத்தி நிலையத்தில் உள்ள முதல் அணு உலையில் சோதனை ஓட்ட ...

Read more

சங்கரன்கோவில் திமுக கிளைச்செயலாளர் ஒருவர் படுகொலை

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அருகே உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக திமுக கிளைச்செயலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் ஒன்றியத்தைச் சேர்ந்த களப்பாளங்குளம் கிராமத்தில் கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வேலுத்தாய் என்ற பெண் சுயேச்சை வேட்பாளராகவும், திமுகவைச் சேர்ந்த பொன்னுக்கொடி என்பவரும் போட்டியிட்டனர். ...

Read more

அறவழிப்போராட்டம் தொடரும்- உதயகுமார்

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான அறவழிப் போராட்டத்தில் ஒரு போதும் வன்முறைக்கு இடம் கிடையாது என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 510 நாட்களாக கூடங்குளம் சுற்றுவட்டார மக்கள் அமைதி வழியில் போராடி வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அந்த போராட்டத்தை கொச்சைப் படுத்தும் முயற்சியில் போலீசாரும், அணு மின் நிலைய அதிகாரிகளும் இறங்கியுள்ளதாக உ ...

Read more

கூடங்குளம் அணுஉலை விரைவில் செயல்படும்

இரண்டு வாரங்களில் கூடங்குளம் அணுஉலை செயல்பட் துவங்கும் என்று அணுசக்தி கழக தலைவர் ரத்தன் குமார் சின்கா உறுதியளித்துள்ளார்‍. கொல்கத்தாவில் பேசிய அவர்‌, அணு உலையில் அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றிய ஆய்வு இறுதிகட்டத்தை அடைந்துள்ளதையடுத்து இன்னும் இரண்டு வாரங்களில் அணு உலை செயல்பட துவங்கும் என்றார்‍. பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள, கூடங்குளம் அணு விஞ்ஞானிகள் பல்வேறு சோதனைகளை மேற்க ...

Read more

ஜெயலலிதா மீது மு.க ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் நிலவும் மின் பிரச்சனையை பற்றி பேச தெம்பி்லாமல் டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டு ஜெயலலிதா கபட நாடகம் ஆடுவதாக திமுக பொருளாளர் மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்‍. திமுக வின் நெல்லை பாராளுமன்ற செயல்வீரர்கள் கூட்டம் பாளையம்கோட்டை அருகே உள்ள ரெட்டி பட்டியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மு.க .ஸ்டாலின், ஜெயலலிதாவால் தமிழ்நாடே இருண்டு கிடப் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top