Home
You Are Here: Home » News » Tamil Nadu » Thiruvarur (Page 2)

திருவாரூர் நெல் கொள்முதல் நிலையம் முற்றுகை

திருவாரூர் மாவட்டம் தப்பளாம்புலியூரில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் நேரடி நெல் கொள்முதலை வலியுறுத்தி விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவா‌‌ரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தப்பாளம்புலியூர் மற்றும் சோழிங்க நல்லூர் ஆகிய 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கொள்முதல் நிலையங்களுக்கு வெளி மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ...

Read more

வர்மா பரிந்துரைகளை நிறைவேற்ற கோரிக்கை

பெண்கள் பாதுகாப்பு குறித்த வர்மா அளித்த பரிந்துரைகளை மத்திய மாநில அரசுகள் உடனே நிறைவேற்றவேண்டும் என மனித உரிமைகள் கழக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவாரூரில் நடைபெற்ற இந்த மாநாட்டில், டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவேண்டும். பயிர் கருகியதால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரண உதவியை உடனே வழங்கவேண்டும்‍. நதிகளை தேசியமயமாக்க வேண்டும்‌, மற்றும் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத ...

Read more

வலங்கைமான் அருகே மணல்லாரி மோதி கணவன் மனைவி பலி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே மணல்லாரி மோதியதில் கணவன் மனைவி அதே இடத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மகன் திருமணத்திற்கான அழைப்பிதழ் கொண்டு சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருவாரூர் அருகே உள்ள வலங்கைமானை அடுத்த செம்மங்குடியை சேர்ந்தவர் பன்னீ்ர்செல்வம். இவரது மனைவி கிரிஜா. கணவன் மனைவி இருவரும் தங்கள் மகன் திருமண நிச்சயதார்த்த அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக இருசக ...

Read more

தடுப்பணை மற்றும் பாலம் கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.99 கோடி நிதி ஒதுக்கீடு – முதலமைச்சர் உத்தரவு

குடிநீர் திட்டங்களுக்காக ஆறுகளில் தடுப்பணை அமைத்தல் மற்றும் பாலம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, 99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்காக கிருஷ்ணா நதி நீரை சேமிக்க திருவள்ளூர் மாவட்டம் திருக்கண்டலம் கொற்றலையாற்றில் தடுப்பணை கட்ட 35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ...

Read more

3-வது நாளாக தொடர்கிறது விவசாயிகளின் போராட்டம்

காவிரி டெல்டா விவசாயிகளின் போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. திருவாரூர்‌,தஞ்சாவூர்‌,நாகை உள்ளிட்ட மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி காவிரி அந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள்‌, ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்‍. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன்னரே சமைத்து, சாப்பிட்டு, தங்களது போராட்டத்தை அவர்கள் தொ ...

Read more

பொங்கல் திருநாள் விவசாயிகளுக்கு கருப்புநாள்

பொங்கல் திருநாளை கருப்பு தினமாக கொண்டாட முடிவு செய்திருப்பதாக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் நிர்வாக்குழு கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. பின்னர் பேசிய அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் காவிரி தனபாலன்‌,தமிழக விவசாயிகளுக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வரும் மத்திய அரசைக்கண்டித்தும்‌,சாகுபடி பயிர் கருகியதால் விவசாயிகளின் உயிரிழப்புக்கு துக்கத்தை அனுசரிக்கும் விதமாக பொங்கல் த ...

Read more

வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மழை – ரமணன் அறிவிப்பு

இலங்கை அருகே வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குனர் ரமணன்,காற்றழுத்த தாழ்வு நிலையானது தமிழகம் மற்றும் ஆந்திரா அருகே மையம் கொண்டு உள்ளதாகவும், இதன் காரணமாக தென் தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் காவிரி டெ ...

Read more

பிரதமர் மன்மோகன்சிங்கின் உருவ பொம்மை எரிப்பு

தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்றுத்தராத மத்திய அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் விவசயிகள் பிரதமரின் உருவபொம்மையை எரித்து போராடடத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். தங்கள் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் பிரதமர் மன்மோகன்சிங்கின் உருவ பொம்மையை விவசாயிகள் எரித்தனர். திருவாரூர்மாவட்டம் திருத்துறை பூண்டியில் ...

Read more

1000 இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு

தமிழகத்திற்கு காவிரியில் உரிய பங்கினை பெற்றுத்தராத மத்திய அரசை கண்டித்து வரும் 27 ம் தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக காவிரி டெல்டாவிவசாயிகள் அறிவித்துள்ளனர். தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகளின் கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மற்றும் காவிரிநதிநீர் ஆணையம் பலமுறை தமி ...

Read more

தண்ணீர் கேட்டு விவசாயிகள் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி அருகே விவசாயத்திற்கு தண்ணீர் கேட்டு விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேலூரில்தான் இந்த சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆலத்தம்பாடி கீராந்தி அணையில் நீர்பாசன உதவியாளராக பணிபுரியும் மோகன், அணையில் உள்ள தண்ணீரை வெவ்வெறு இடங்களுக்கு திறந்துவிட்டதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதனால் வேலூர், மணலி, தண்டலச்சேரி, பரப்பாகரம், மாராச்சேரி உள்ளிட ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top