Home
You Are Here: Home » News » Tamil Nadu » Thoothukudi

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

கஞ்சா கடத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது

மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டரை கிலோ கஞ்சாவை கடத்திய ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர். மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், மதுரையில் இருந்து பேருந்து மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இறங்குவதற்கு பதிலாக புறநகர் பகுதியான மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் இறங்கிய ரமேஷ், கஞ்சா பொட்டலம் அடங்கிய பையுடன் நின்று கொண்டி ...

Read more

தூத்துக்குடி அனல் மின் நிலைய 4-வது யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலைய 4-வது யூனிட்டில் பராமரிப்பு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் மின் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவுகிறது... தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் மொத்தம் 5 யூனிட்டுகள் உள்ளன. ஒவ்வொரு யூனிட்டில் இருந்து தினமும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 5 யூனிட்டுகளும் நிறுவி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் அவற்றில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்ததால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்ட ...

Read more

பேருந்து நடத்துனரை தீ வைத்து கொலை செய்ய முயற்சி

குடிபோதையில் தனியார் பேருந்தில் ஏறியவர்களை நடுவழியில் இறக்கிவிட்ட அதன் நடத்துனர் தீவைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலிருந்து நெல்லைக்குச் சென்ற தனியார் பேருந்தில் கங்கைகொண்டானைச் சேர்ந்த அப்பாதுரை,பெத்தபெருமாள் ஆகியோர் குடிபோதையில் ஏறியுள்ளனர்‍. படியில் நின்று பயணம் செய்த அவர்களை பேருந்தின் உள்ளே செல்லும்படி நடத்துநர் செல்வன் கூறியுள்ள ...

Read more

கோவில்பட்டி அருகே விபத்து – தந்தை,மகன் பலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காரும் இருசக்கரவாகனமும் மோதிக்கொண்டதில், தந்தையும் மகனும் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டியை சேர்ந்தவர் சுந்தரம் சமையல் மாஸ்டராக வேலை பார்த்துவந்தார். இவரதுமகன் சுரேஷ். 7ம் வகுப்பு படித்துவந்தார். சுந்தரம் தனது மகனுடன் நேற்று கோவில்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அவர ...

Read more

கோவில்பட்டியில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை

கோவில்பட்டியில் நேற்று சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக மரங்கள் வேரோடு சாயந்தன. மேலும் மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த சில தினங்களாக கத்திரி வெயில் வாட்டி வந்த நிலையில்‌, நேற்று மாலை திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த திடீர் சூறாவளி காற்றில் சாலையோரத்தில் இருந்த மரங்கள ...

Read more

தீக்குச்சி ஆலையில் தீ விபத்து

கோவில்பட்டி அருகேயுள்ள தீக்குச்சி ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் எரிந்து‌ சேதமாயின. தூத்து‌க்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்தவர் ஜெயபால். இவருக்கு சொந்தமான தீக்குச்சி ஆலை கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு பகுதியில் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை பெய்த கனமழையால் ஆலையில் மின்தடை ஏற் ...

Read more

விமானத்தில் தங்க கட்டிகள் பறிமுதல்

சென்னையிலிருந்து‌ தூத்து‌க்குடிக்கு வந்த விமானத்தில் 12 தங்க கட்டிகள் சிக்கியது‌. இவற்றின் மதிப்பு சுமார் 36 லட்சம் ரூபாய் என்று‌ கூறப்படுகிறது‌. சென்னையில் இருந்து‌ நேற்று‌ தூத்து‌க்குடி வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தை சுத்து‌ம்செய்யும்போது‌, இருக்கையின் கீழ் மர்ம பார்சல் இருந்ததை கண்ட ஊழியர்கள் , விமான நிலைய அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். இதைடுயத்து‌, அதிகாரிகள் காவல்து‌றை உதவியுடன் மர்ம பார்சலை சோதனையிட்டதி ...

Read more

கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

தூத்து‌க்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகுசிறப்பாக நடைபெற்றது‌. தூத்து‌க்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கே.சரவணாபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் கோவில் உள்ளது‌. இக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை பூஜை, ஹோம பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து‌ புனித நீர் கொண்டு வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு வேதமந்திரங்கள் முழங்க மகா கும ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top