Home
You Are Here: Home » News » Tamil Nadu » Thanjavur (Page 3)

தஞ்சை அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

தஞ்சை அருகே அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் நீலகிரி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பரசுராமன். மாவட்ட எம். ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளராகவும் உள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருவதாக கூறப்படுகிறது. ஊராட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த பரசுராமன் கமிஷன் வசூலித்ததாக த ...

Read more

தஞ்சை மாவட்டத்தில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக விவசாயிகள் அனு‌மதி பெறாததால் விவசாயிகள் போராட்டம்

தஞ்சை மாவட்டத்தில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக, விவசாயிகள் அனு‌மதி பெறாமல்,விளை நிலங்களை கெயில் நிறு‌வனம் ஆக்கிரமித்து‌ள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500 க்கும் மேற்பட்ட‌ கிராம மக்கள் ஒன்று‌ இணைந்து‌ ஆக்கிரமிப்பு கல்லை உடைத்தெறிந்து‌ போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள கிராமங்களில் கெயில் நிறு‌வனம் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக, நெல் சாகுபடி செய்யப்பட்டு விளைநிலத்தில், விவசாய ...

Read more

சம்பா சாகுபடி பணிகளை துவங்க கல்லனை கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விட விவசாயிகள்‌ கோரிக்கை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள்‌, சம்பா சாகுபடி பணிகளை துவங்க கல்லனை கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விட கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம்‌, பட்டுக்கோட்டை,ஒரத்தநாடு, பேராவூரணி, சேதுபாவசத்திரம் உள்பட மாவட்டத்தின் பலவேறு பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடை ...

Read more

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சி‌லையை அகற்றக்‌ கூடாது என வலி‌யுறுத்தி தஞ்சையில் சிவாஜி சமூக நலப் பேரவை போராட்‌‌டம்

சென்னை கடற்கரை சாலையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சி‌லையை அகற்றக்‌ கூடாது என வலி‌யுறுத்தி தஞ்சையில் சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சிலையிடம மனுக் ‌கொ‌டுக்கும் போராட்‌‌டம் நடைபெ‌ற்றது.. தஞ்‌சை ரயிலடி அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பஙகேற்றவர்கள்‌ தமிழக அரசு‌க்கு எதிராக கண்டன ‌முழக்கங்களை‌‌ எழுப்பினர். பின்னர் அங்கு அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் உருவச்சிலையின் கையில் மன ...

Read more

தஞ்சை பெரியக்கோவிலை பாதுகாத்திட 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மத்திய தொல்லியல் துறை அறிவிப்பு

வரலாற்று சிறப்புமிக்க தஞ்சை பெரியக்கோவிலை பாதுகாத்திட 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட இருப்பதாக மத்திய தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். மத்திய தொல்லியல் துறை மண்டல இயக்குனர் நரசிம்மன் தலைமையில் 7பேர் கொண்ட சிறப்பு குழுவினர் தஞ்சை பெரியக்கோவிலை ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல்லியில் துறை சென்னைவட்ட கண்காணிப்பாளர் மகேஸ்வரி, கோவில் இரணடாவது நுழைவு வாயிலான ராஜராஜ ...

Read more

காவிரி டெல்டா மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் டிசம்பர் 3ந்தேதி

காவிரி பிரச்னையில் மத்திய மாநில அரசுகளின் அலட்சிய போக்கை கண்டித்து வரும் டிசம்பர் 3ந்தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காவிரி உரிமை மீட்பு குழு அறிவித்துள்ளது. தஞ்சாவூரில் பேசிய அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன்‌, மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வரும் நிலையில் நெற்பயிர்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு வருவதாக கூறினார்‍. மேலும் கடைமடை பகுதி வரை காவிரி நீர் ...

Read more

ஈழத் தமிழர்களின் நினைவாக தஞ்சையில் கட்டப்பட்ட முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு

ஈழத்தில் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களின் நினைவாக தஞ்சையில் கட்டப்பட்டுள்ள முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் இடித்து தள்ளப்பட்ட சம்பவம் தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரட்டை வேடம் வெளிப்பட்டு விட்டதாக பழ நெடுமாறன் குற்றம்சாட்டியிருக்கிறார். தஞ்சை விளார் சாலையில் 2 ஏக்கர் பரப்பளவில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முள்ளி வாய்க்கால் ...

Read more

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் ஆயிரத்து 28-வது சதய விழா இன்று நடைபெறுகிறது

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் ஆயிரத்து 28-வது சதய விழா இன்று நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம் ஆகியவை நடைபெற உள்ளது. நேற்று தொடங்கிய முதல் நாள் விழாவில் கருத்தரங்கம், கவியரங்கம், திருமுறை இசைத்தல், இன்னிசை பக்திப் பாடல், பரதநாட்டியம், வீணை இசை, தப்பாட்ட நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. இன்று நடைபெறும் விழாவில், ராஜராஜசோழனின் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறை வ ...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்க உயர்நீதிமன்ற மது‌ரை கிளை அனு‌மதி அளித்து‌ள்ளதால் 8-ந் தேதி திறப்பு

தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்க உயர்நீதிமன்ற மது‌ரை கிளை அனு‌மதி அளித்து‌ள்ளதால், வரும் 8-ந் தேதி திறப்பு விழா நடைபெறு‌கிறது‌. கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இறு‌திக்கட்டப்போரில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் நினைவாக தஞ்சையில் உலகத்தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு உள ...

Read more

பட்டுக்கோட்டை அருகே தங்கம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் தங்கம் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஏழரை கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்‍. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக தங்கம் கடத்திவருவதாக கோவை வருவாய் புலனாய்வு நுண்ணறிவு பிரிவுக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பட்டுக்கோட்டை ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top