Home
You Are Here: Home » News » Tamil Nadu » Salem (Page 8)

நியாயவிலைக் கடை முற்றுகையிட்ட பொதுமக்கள்

சேலம் அருகே நியாயவிலைக் கடையில் முறையாக பொருட்கள் விநியோகிக்கவில்லை என்பதால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் மிட்டாபுத்தூர் கிராமவாசிகள் தான் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள நியாயவிலைக் கடையில் முறையாக பொருட்கள் விநியோகம் செய்யப்படவில்லை என்று அவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். 2 கடைகளுக்கு ஒரே ஒரு பெண் விற்பனையாளர் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பெ ...

Read more

சேலத்தில் ஜன-17ல் ஜல்லிக்கட்டு – கூடுதல் கிராமங்களை அரசிதழில் அறிவிக்க‌ கோரிக்கை

சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மேலும் சில பகுதிகளை அரசிதழில் வெளியிட வேண்டும் என ஜல்லிக்கட்டு பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம்‌ மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்‌ ‌வருவாய்த்துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில்‌ சேலம் மாவட்டத்தில் சூளைமேடு என்னும் கிராமத்தில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி‌ வழங்‌கப்பட்டு ...

Read more

உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவருக்கு தேமுதிகவினர் ஆதரவு

உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவருக்கு தேமுதிகவினர் ஆதரவு அளித்துள்ளது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. சேலம் சீலநாயக்கன்பட்டி பெருமாள்கோவில்மேட்டைச் சேர்ந்த முதியவர் குப்புசாமி என்பவர் தான் மீட்கப்பட்டவர் ஆவார்‍. உறவினர்களால் கைவிடப்பட்ட அவர் தனிமையில் வசித்து வந்தார்‍. இந்நிலையில் விபத்து ஒன்றில் காயம்பட்ட குப்புசாமி தங்குவதற்கு இடமின்றி அங்குள்ள சுடுகாட்டில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த ...

Read more

சேலம் அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலு‌வலகத்தை முற்று‌கை போராட்டம்

சேலம் அரசு அம்பேத்கர் கல்லூரி மாணவர் விடுதியில் முறையாக உணவு வழங்காததை கண்டித்து,‌ மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலு‌வலகத்தை முற்று‌கையிட்டு போராட்டம் நடத்தினர். சேலம் மரவனேரி பகுதியில் உள்ள அம்பேத்கர் அரசு கல்லூரி மாணவர் விடுதியில் சேலம், நாமக்கல், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு‌ மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி பயின்று‌ வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுவதில்லை என்று‌ குற ...

Read more

என்ஜின் பழுதால் பாதியில் நின்ற ரயில் – பயணிகள் அவதி

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ரயில் என்ஜின் பழுதடைந்து பாதி வழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். கெங்கவல்லி அருகே உள்ள தலைவாசல் புத்தூரில், விருத்தாசலத்தில் இருந்து சேலம் செல்லும் பயணிகள் ரயில் என்ஜின் பழுதடைந்ததால் வனப்பகுதியில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் கடும் அவதிக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளனர். ரயில் நின்று பலமணி நேரம் ஆகியும் வேறு என்ஜின் வர காலத ...

Read more

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் நிகழ்ந்த பல்வேறு சாலை விபத்துகளில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்‍. சேலம் மாவட்டம் அம்மாபாளையத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் தமது மனைவி மற்றும் மகளுடன் ஆத்தூரில் உள்ள தமது உறவினரது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்‍. அப்போது அம்மம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்‍. இத ...

Read more

சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் உருவப்படம் திறப்பு விழா

சேலம் மாவட்ட தி.மு.க.தொண்டர்களுக்கு, பாதுகாப்பு அரணாக விளங்கியவர் வீரபாண்டி ஆறுமுகம், என்று தி.மு.க.பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். சேலத்தில் நடைபெற்ற, முன்னாள் தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உருவப்பட திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர் இதனை தெரிவித்த்தார். தி.மு.க. தலைமை இடும் கட்டளைகளை ஏற்று திறம்பட செயலாற்றியவர் அவர் என்றும் குறிப்பிட்டார். சட்ட மன்றமாக இருந்தாலும், கட்சி நிர்வாகிகள் கூட்டமா ...

Read more

ராமதாஸ் சேலம் வருவதற்கு தடை

சேலம் மாவட்டத்திற்குள் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், வருவதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தலித் அமைப்பு நிர்வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த தலித் அமைப்பு நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அம்மனுவில், தமிழகம் முழுவதும் சாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேசி வரும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸை சேலம் மாவட்டத்திற்கு வர தடை விதிக்க வேண்டும். அதனை மீறி ராமத ...

Read more

சேலம் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்துக்கு கேப்டன் விஜயகாந்த் கண்டனம்

சேலம் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்துக்கு தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மேட்டூர் தொகுதிக்குட்பட்ட மேச்சேரியை அடுத்த செங்காட்டூர் என்ற இடத்தில் பட்டாசு குடோனில் வெடி விபத்தில் சிறுவர்கள் உள்பட 7 பேர் இறந்துள்ளதுடன், 8 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். பட்டாசு விபத்துக ...

Read more

சேலத்தில் குழந்தையைக் கடத்திய பெண் கைது

சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை, கடத்தபட்ட ஒருமணிநேரத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது குழந்தை தான் கடத்தப்பட்டது. பிரசவத்திற்றிகாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவரது மனைவியான கிருஷ்ணவேணிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அறிமுகமான காஞ்சனா என்பவரிடம் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top