Home
You Are Here: Home » News » Tamil Nadu » Salem (Page 7)

ராஜபக்சேவை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்

இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்தும், அந்நாட்டு அதிபர் ராஜபக்சே மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஐ.நா மன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக பல்வேறு நாடுகள் அறிவித்துள்ள நிலையில், இந்தியா மட்டும் தொடர்ந்து மவுனம் காத்து வரு ...

Read more

சேலத்தில் பெண்களை துரத்தியதாக மனநலம் பாதிக்கப்பட்டவரை அடித்து துன்புறத்திய சம்பவம்

சேலத்தில் பெண்களை துரத்தியதாக கூறி, மனநலம் பாதிக்கப்பட்டவரை காவல்துறையினர் முன்பாகவே பொதுமக்கள் அடித்து துன்புறத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சேலம் மாநகரில், சாலைகளில் சுற்றிதிரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சேலம் முக்கிய பகுதிகளில் ஒன்றான ஐந்துரோடு பகுதியில், நின்று கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர், திடீரென சாலையில் நடந்து செ ...

Read more

தொடர் மின்வெட்டை கண்டித்து‌ மாணவ மாணவியர் கையில் மெழுகு வர்த்தி ஏந்தி படித்து‌ நூதன போராட்டம்

அதிமுக அரசின் தொடர் மின்வெட்டை கண்டித்து‌ சேலத்தில் மாணவ மாணவியர் கையில் மெழுகு வர்த்தி ஏந்தி படித்து‌ நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் நிலவும் தொடர்மின்வெட்டை கண்டித்து‌ பொது‌மக்கள் மற்று‌ம் மாணவ மாணவிகள் பல்வேறு‌ போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொது‌தேர்வு நடைபெறு‌ம் இந்த வேளையில் இரவு நேரத்தில் பல மணி நேரம் நீடிக்கும் மின்வெட்டால், தேர்வுக்கு படிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் கடுமை ...

Read more

சேலம் ரயில்வே கோட்டத்தை கேரளாவுடன் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை ராகேஷ் மிஸ்ரா

சேலம் ரயில்வே கோட்டத்தை கேரளாவுடன் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்‍. சேலம், திருப்பத்தூர் இடையிலான ரயில் பாதையை ஆய்வு செய்த பின்னர் பேசிய அவர் இதனைக் கூறியுள்ளார்‍. சேலம்-கரூர் இடையே அகல ரயில்பாதை அமைக்கும் பணி நிறைவுபெற்றுள்ளதாகவும்‌, இப்பாதையில் பயணிகள் ரயில் விரைவில் இயக்கப்படும் என்றும் ராகேஷ் மிஸ்ரா குறிப்பிட்டார்‍. சேலம் ரயில்வே கோட்டத்தை ப ...

Read more

அதிமுக அமைச்சருக்கு, பாஜக மாநிலத்தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்

விவசாயிகளை தரக்குறைவாக பேசிய அதிமுக அமைச்சருக்கு, பாஜக மாநிலத்தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கையில் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதற்கான புகைப்படங்கள் மிக பெரிய சாட்சி என்று கூறினார். எனவே ஐநாவில் இலங்கைக்கு எதிராக, அமெரிக்க கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுகொண்டார். தமிழகத்தில் நிலவி வரும் மின் ...

Read more

சேலத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சாலைமறியல்

சேலத்தில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். சே‌லம் மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் நடைபெற்ற மறியலில் காவல்துறையினரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். கந்தசாமி என்ற ஆட்டோ ஒட்டுநரை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. காவல்துறையினரின் தாக்குதலால் கந்தசாமிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ‌ஆட ...

Read more

சேலம் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

சேலம் அருகே முறையாக குடிநீர் வழங்காத உடையாப்பட்டி ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொது மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடையாப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கக்கன் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள்தான் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதியில் 20 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வழங்கப்படாததைத் தொடர்ந்து உடையாப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் மேகலா ரவி என்பவரிடம் முறையிட்டுள்ளனர். அதற்கு ...

Read more

சேலத்தில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டு தீ – மூலிகை செடிகள் எரிந்து சேதம்

சேலம் அருகே ஊத்துமலையில் பரவி வரும் காட்டு தீயில் அங்குள்ள அரியவகை மூலிகை செடிகள் எரிந்து சாம்பாலனது. ஊத்துமலையின் ஒரு பகுதியில் திடீரென தீ பற்றியது. இந்த தீ மளமளவென்று மற்ற இடங்களுக்கும் பரவியதால், மலையில் உள்ள மூலிகை செடிகள் தீயில் கருகியது. மேலும் அப்பகுதியில் பலத்த காற்று வீசிவருவதால் தீ கட்டுகடங்காமல் மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவியது. இதனால் மலை முழுவதும் பல்வேறு இடங்களில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. ...

Read more

டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் 5 பேர் நீக்கம்

சேலம் மாவட்டத்தில் விற்பனை இலக்கு எட்டாத டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் 5 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இம்மாதம் விதித்துள்ள விற்பனை இலக்கை எட்டாத டாஸ்மாக் பணியாளர்கள் 5 பேரை டாஸ்மாக் நிர்வாகம் தற்காலிக பணி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து ஊழியர்கள் அனைவரும் சந்தியூர் பகுதியில் ‌செயல்பட்டு வரும் தமிழ்நாடு ...

Read more

கெங்கவல்லியில் ஜல்லிக்கட்டு பணிகள் தீவிரம்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கூலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டிற்காக காளைகளை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவது விளையாட்டு ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீதிமன்ற நெறிமுறைகளை பின்பற்றி விழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.இங்கு நடக்கும் போட்டியில் பெரம்பலூர்‌, திருச்சி, துறையூர்‌, சேலம்‌, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கின்றன. காளைகளு ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top