Home
You Are Here: Home » News » Tamil Nadu » Salem (Page 5)

பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை

பால் கொள்முதல் விலையை தமிழக அரசு வருகிற டிசம்பர் 13ந்தேதிக்குள் உயர்த்தி தராவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் செங்கோட்டுவேல்‌, பால் கொள்முதல ...

Read more

சேலம் அருகே இன்று அதிகாலை வீட்டில் இருந்த சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 3 பேர் பலி

சேலம் அருகே இன்று அதிகாலை வீட்டில் இருந்த சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் தாய்-மகன் உள்ளிட்ட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை அடுத்த ஆட்டையாம்பட்டி மேட்டுக்காடு பகுதியில் தங்கவேல் என்பவர் வீடு கட்டி வாடகைக்கு விட்டு உள்ளார். இதில் கீழ் தளத்தில் 5 குடும்பங்களும், மேல் தளத்தில் 4 குடும்பத்தினரும் வசித்து வருகிறார்கள். மேல் தளத்தில் சேலம் லைன் மேடு பகுதியை சேர்ந்த அகமத ...

Read more

ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் இன்று வெளியிடு

ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கு வரும் டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடந்த 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது. அதிமுக சார்பில் சரோஜா, திமுக சார்பில் மாறன் மற்றும் சுயேட்சைகள் உட்பட 35 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்‍. ஆனால்‌, இவற்றில் 12 மனுக்கள் மட்டுமே ...

Read more

ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் பரிசீலனை இன்று‌ நடைபெறு‌கிறது‌

ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று‌ நடைபெறு‌கிறது‌. ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 9-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. 16-ஆம் தேதி வரை நடைபெற்ற மனு தாக்கலில் திமுக சார்பில் வெ.மாறன், அதிமுக சார்பில் பெ.சரோஜா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். மேலும், சுயேச்சை வேட்பாளர்களாக கே ...

Read more

ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முகம்மது அனிபாவை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீனின் கூட்டாளி தென்காசி முகம்மது அனிபாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நிலக்கோட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீஸ் பக்ருதீன் கூட்டாளி தென்காசி முகம்மது அனிபா பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தார்‍. வத்தலகுண்டில் பதுங்கி இருந்த போது கைது செய்யப்பட்டு நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்‍. அப்போது விசாரணையை வருகிற 2 ...

Read more

ஏற்காடு இடைத்தேர்தலில் மாவட்ட ஆட்சியர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக திமுக புகார்

ஏற்காடு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் திமுக சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி கூறினார்‍. சேலத்தில் பேசிய அவர்‌, ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவினர் விதிமுறைகளை மீறி அதிகார துஷ்பிரயோகம் செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார்‍. மேலும் இந்த இடைத்தேர்தலில் காவல்துறையினர் மற்று ...

Read more

ஏற்காடு இடைத்தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குவதையடுத்து பாதுகாப்பு படையினர் வந்தனர்

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடஙகுகிறது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் போலீசார் நேற்று சேலம் வந்தனர். சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியில் வரும் டிசம்பர் 4ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கி 16ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தே ...

Read more

இடைத்தேர்தலையொட்டி சேலம் முழுவது‌ம் குடிநீர் பாட்டிலில் உள்ள முதல்வர் படத்தை மறைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

இடைத்தேர்தலையொட்டி, சேலம் மாவட்டம் முழுவது‌ம் அரசு குடிநீர் பாட்டிலில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை மூடி மறைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது‌. ஏற்காடு தொகுதி இடைத் தேர்தலில், ஆளும் கட்சிக்கு ஆதரவாக, அரசு அதிகாரிகள் செயல்படுவதாக, தேர்தல் ஆணையரிடம் புகார் வந்து‌ள்ளது‌. இதனால், பொது வினியோக திட்டம், அரசு மினரல் வாட்டர் திட்டம் உள்ளிட்டவைகளில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை மறைக்க வேண்டும் என, தேர்த ...

Read more

ஏற்காடு இடைத்தேர்தலில் இலவச பொருட்களை தடுக்க தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனை

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அதிமுக வேட்பாளர் சரோஜா சென்ற வாகனம் மற்றும் அதிமுகவினர் சென்ற வாகனங்களையும் நிறுத்தி சோதனையிட்டனர். ஏற்காடு தொகுதியில் வரும் டிசம்பர் 4ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. ஏற்காட்டில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியுள்ளநிலையில் வாக்களாளர்களுக்கு பணம் க ...

Read more

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் இரண்டு கிராம மக்கள் புறக்கணிக்க முடிவு

ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்கப்போவதாக இரண்டு கிராம மக்கள் அறிவித்துள்ளனர். தங்கள் கிராமத்துக்கு 17 ஆண்டுகளாக சாலை அமைத்து தராததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதியில் வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் ஏற்காடு தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். இந்நிலையில் ஏற்காடு தொகுதியில் இன்னும் பல க ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top