Home
You Are Here: Home » News » Tamil Nadu » Salem (Page 3)

சேலம் மாநகராட்சி கூட்டம் – திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில், நிதிநிலை அறிக்கை ஏட்டளவிலேயே இருப்பதாக குற்றஞ்சாட்டி அதன் நகலை திமுக கவுன்சிலர்கள் கிழித்தெறிந்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாநகராட்சியின் 2014-15ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயர் சவுண்டப்பன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில ...

Read more

சேலத்தில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்

அகில இந்திய விவசாய கண்காட்சிக்கு தமிழக அரசு சார்பில் அழைத்து செல்லப்பட்ட விவசாயிகளுக்கு சிறப்பு ரயிலில் இடவசதி ஏற்படுத்தி தராததை கண்டித்து சேலத்தில் விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். நாக்பூரில் அகில இந்திய விவசாய கண்காட்சி 5 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதற்காக சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் நாக்பூர் செல்வதற்காக சேலம் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். திருச்சி உள்ளிட்ட பல்வேறு ம ...

Read more

சேலத்தில் பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி உரிமையாளருக்கு பொதுமக்கள் தர்ம அடி

சேலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மழலையர் பள்ளி உரிமையாளரை பொதுமக்களே விரட்டி சென்று பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ஐந்து ரோடு பகுதியில் மழலையர் பள்ளி நடத்தி வருபவர் ஏசுராஜ். இவர் தனது பள்ளியில் படித்து வரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், மது அருந்திவிட்டு பள்ளியின் முன் நின்றுகொண்டிருந்த ஏசுராஜ், அவ்வழியாக சென்ற 1 ...

Read more

சேலத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி செவிலியர்கள் தொடர்ந்து போராட்டம்

சேலத்தில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி செவிலியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.அப்போது மாணவிகளை நிர்வாகத்தினர் சிறைவைத்து காவல்துறையினர் மூலம் மிரட்டியதாக எச்சரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் அரசு பணி நியமனங்களுக்கு தேர்வாணையம் மூலம் தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெறும் செவிலியர் மாணவிகளை தேர்வு செய்ய தமிழகஅரசு உத்தரவு வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு மருத ...

Read more

சேலத்தில் விமான பயிற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தார்

சேலத்தில் விமான பயிற்சியில் ஈடுபட்ட கல்லூரி மாணவி பாராசூட் செயலிழந்ததால் 10 ஆயிரம் அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவனமைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் விமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்று பெங்களூருவை சேர்ந்த கல்லூரி மாணவ ...

Read more

ஆத்தூர் அருகே பொங்கலை பண்டிகையையொட்டி நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில் 4பேர் படுகாயம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பொங்கலை பண்டிகையையொட்டி நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டியில் மாடு பிடி வீரர் உட்பட 4பேர் படுகாயமடைந்தனர். ஆத்தூர் அருகே உள்ள சூலமேடு பகுதியில் பொங்லை பண்டிகையொட்டி ஜல்லிகட்டு போட்டிகள் நடைபெற்றது இதில் மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்த வந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் அடக்கியது பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது 200க்கும் மேற்ப்பட்ட காளைகள் பங்கு பெற்றன. இப்போட்டியில் காளைகளை அ ...

Read more

காங்கிரஸ் ஆட்சிக்கு மக்கள் சரியான பாடம் புகுட்டுவார்கள் – பழ. நெடுமாறன்

இலங்கையில் ஈழத்தமிழர்களை கொன்றுகுவிக்க உதவியாக இருந்த காங்கிரஸ் ஆட்சிக்கு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகுட்டுவார்கள் என்று உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முள்ளி வாய்க்கால் நினைவு மண்டபத்தின் சுற்றுச்சுவரை எந்தவி முன் அறிவிப்புமின்றி தமிழக அரசு இடித்ததை நினைவு கூர்ந்தார். ஈழத்தமிழர் பிரச்சனையில் தமிழக அரசு இரட்டை வேட ...

Read more

சேலத்தில் போலி முகவரி பயன்படுத்தி சிம்கார்டு தயாரித்து விற்பனை செய்தவர்கள் கைது

சேலத்தில் போலி முகவரி மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான சிம்கார்டுகளை தயாரித்து விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழில்அதிபர் ஒருவர் வீட்டில் 120 கிலோ கொண்ட நடராஜர் சிலை கொள்ளை போனது. இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க போலீசார் விசாரணை மேற்கொண்டபோது போலியான சிம்கார்டுகள் ...

Read more

ஏற்காட்டில் இரண்டாம் பருவ மலர்க்கண்காட்சி விழா

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இரண்டாம் பருவ விழாவை முன்னிட்டு நடைபெற்ற மலர்க்கண்காட்சியை ஏராளமானோர் கண்டு களித்தனர். ஏற்காடு மலையில் இரண்டாம் பருவ விழாவையொட்டி நேற்று மலர்க்கண்காட்சி தொடங்கியது. மலர்கண்காட்சியை, மாவட்ட ஆட்சியர் மகரபூசனம் துவங்கி வைத்தார்‍. இதில் ஆயிரக்கணக்கான மலர் வகைகள் அணிவகுத்து வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கலைநிகழ்ச்சியுடன் துவங்கியுள்ள இந்த விழாவில் பாரம்பரிய நடனம் மற்றும் கொழு கொழு கு ...

Read more

சேலத்தில் 23 லட்சம் மதிப்புள்ள போலி செல்போன்கள் பறிமுதல்

சேலத்தில் பிரபல நிறுவனத்தின் பெயரில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 23 லட்சம் மதிப்புள்ள போலி செல்போன்கள், இதர பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த சாம்சங் நிறுவனத்தின் போலி செல்போன்கள், அதற்கான பயன்பாட்டு பொருள்களை சென்னையில் போலீஸார் அண்மையில் பறிமுதல் செய்தனர். பிரபல நிறுவனங்களின் பெயரில் போலிகளைத் தடுக்கும ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top