Home
You Are Here: Home » News » Tamil Nadu » Ramanathapuram

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை , இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்வதும், தாக்குதல் நடத்துவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 600-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு ‌ அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர்  10-க்கும் மேற்பட்ட படகுகள ...

Read more

தமிழக மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ள சம்பவம் மீனவ சமுதாயத்தினரை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது.

தமிழக மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்துள்ள சம்பவம் மீனவ சமுதாயத்தினரை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது. ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் கரைக்கு திரும்ப முயல அவர்களில் 23 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர் அவர்களின் 5 படகுகுளையும் பறிமுதல் ச ...

Read more

வேலைநிறுத்தம் மேற்கொண்டு வந்த ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்கு சென்றனர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் மேற்கொண்டு வந்த ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தைத் திரும்பப்பெற்று இன்று மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மீன்பிடி உரிமையை பெற்றுத்தரவேண்டும், இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 7 நாட்களாக வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில ...

Read more

மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெறுகிறது. மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்க மத்திய மாநில அரசுகள் நட ...

Read more

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட, 33 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறையிலிருந்த விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 33 பேரும் பத்திரமாக ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர். மீன்பிடித் தடைக்காலம் முடிந்து கடந்த 31ந் தேதி முதல் தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்றனர். ஆனால் மறுநாள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. பின்னர் மன்னார் நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரம் பிரதமர் நரேந்தி ...

Read more

அனுமதியின்றி செயல்பட்டு வரும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ராமேஸ்வரத்தி்ல் அனுமதியின்றி செயல்பட்டு வரும், அடிப்படை வசதிகளில்லாத விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவின் மிக முக்கியமான புண்ணிஸ்தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் நகரில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் தனியார் விடுதிகள் இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற தனியார் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் ...

Read more

இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

தமிழர்களுக்கான அரசியல் சட்டத்திருத்தத்தை அமல்படுத்த மறு‌த்து‌வரும் இலங்கை அரசு, இந்திய மீனவர்களையும் து‌ன்புறு‌த்து‌வது‌ தொடர்கதையாகி வருகிறது‌. இந்நிலையில், பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது‌ பதற்றத்தை அதிகரித்து‌ள்ளது‌. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனை சேர்ந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்க ...

Read more

அனு‌மதியின்றி மணல் அள்ளிய பொக்லைன், ஜேசிபி, லாரிகள் பறிமுதல்

ராமநாதபுரம் அருகே அனு‌மதியின்றி மணல் அள்ளிய இரண்டு பொக்லைன், ஒரு ஜேசிபி, மூன்று‌ டிப்டோ லாரிகள் பிடிக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள கல்லு‌ப்பட்டி குண்ணடாற்று‌க்கரையில் எந்தவொரு அனு‌மதியின்றி மணல் அள்ளுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து‌ கமுதி போலீசார் மற்று‌ம் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 2 பொக்லைன், ஒரு ஜேசிபி, மூன்று‌ டிப்போ லாரிகள் ஆகியவற்றி மணல் கடத்து‌வது‌ கண்டுபிடிக்கப்பட்டு, அவ ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top