Home
You Are Here: Home » News » Tamil Nadu » Pudukkottai

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீனவர்களின் வேலைநிறுத்தப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 4 நாளாக நடந்து வந்த போராட்டத்தை வாழ்வாதாரம் கருதி கைவிட்டனர் மீனவர்கள். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், மீனவர்களுக்கு சொந்தமான 24 விசைப்படகுகள் விடுவிக்கப்படவில்லை. இதனால், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்கவும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் ...

Read more

பெண் குழந்தை உயிரோடு புதைப்பு

புதுக்கோட்டை அருகே பிறந்து சில மணிநேரமேயான பெண் குழந்தையை உயிரோடு புதைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்ட பொதுமக்கள் அந்த குழந்தையை உயிருடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். புதுக்கோட்டை அருகே மலையப்பன் நகரில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் பெண் சிசு ஒன்றின் அழுகுரல் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு பிறந்து சில மணிநேரமேயான பெண் குழந்தை ஒன்று குழிய ...

Read more

விதிமுறைகள் மீறி இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – வருவாய் அதிகாரி எச்சரிக்கை

புது‌க்கோட்டையில், விதிமுறைகளை மீறி இயக்கப்படும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்‍. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 72 தனியார் பள்ளிகளில் மொத்தம் 397 வாகனங்கள் உள்ளன. இதில், புதுக்கோட்டையில் உள்ள 207 வாகனங்களை மாவட்ட வருவாய் அலுவலர் மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்‍. அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட வருவாய் அலு ...

Read more

உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட சமையல் எண்ணெய் பெட்டிகள் பறிமுதல்

புதுக்கோட்டை நகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதியில் உரிய ஆவணம் இன்றி சமையல் எண்ணெய் பெட்டிகளை ஏற்றி சென்ற மினிலாரியை வணிகவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். புதுக்கோட்டையில் உள்ள கடைகளுக்கு எவ்வித ஆவணமும் இன்றி சமையல் எண்ணெய் பெட்டிகள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட வினியோகஸ்தர்கள் சங்கத்தினர் வணிக வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வணிக வரித்து ...

Read more

புது‌க்கோட்டையில் மாநில அளவிலான மாட்டு வண்டி எல்லைபோட்டி

புது‌க்கோட்டையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான மாபெரும் மாட்டு வண்டி எல்லைபோட்டி நடைபெற்றது‌, புது‌க்கோட்டை வம்பனில் உள்ள வீரகாளியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான மாட்டு வண்டி மற்று‌ம் குதிரை வண்டி போட்டிகள் நடைபெற்றது‌. பெரியமாடு, கரிச்சான் மாடு, தேன்சிட்டு மாடு, ஒற்றை மாடு போன்ற பல்வேறு‌ வகையான மாடுகளும், இதே வகையான குதிரைகளும் போட்டியில் கலந்து‌கொண்டன. ...

Read more

ஜெராக்ஸ் கடையில் தீ விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஜெராக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளது. அறந்தாங்கி தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை செயல்பட்டு வந்தது. வழக்கம் போல இரவில் கடையை அடைத்து விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென ஜெராக்ஸ் கடையில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ...

Read more

அறந்தாங்கி அருகே வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலு‌க்கு இது‌வரை 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்‍. அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு சிலருக்கு வைரஸ் காய்ச்சல் வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கிராமத்தி்ல் உள்ள 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட ...

Read more

அறந்தாங்கி அருகே பேருந்தில் கடத்தப்பட்ட 10 கிலோ தங்கம் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தனியார் பேருந்தில் கடத்தப்பட்ட 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அண்மைகாலமமாக ராமநாதபுரம, புதுக்கோட்டை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தங்கம் கடத்தல் சம்பவம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அறந்தாங்கியில் இருந்து சென்னை செல்லும் தனியார் பேருந்தில் தங்கம் கடத்தப்படுவதாக புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அறந்தாங்கி அருகே நேற்று இரவு சோதனையில் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top