Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nagapattinam (Page 7)

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது

நாகை மாவட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பாதைகளை தங்கள் கைகளில் ஏந்தியவாறு ஏராளமான ஊர்வலமாக சென்றனர். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் காயப்பட்டிணத்தில் உள்ள தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப ...

Read more

நாகையில் டீசல் விலை உயர்வுக்கு மீனவர்கள் 3வது நாளாக வேலை நிறுத்தம்

மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் டீசல் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்டம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்‍. 3வது நாளாக மீனவர்கள் கடலுக்குள் செல்லாததால்‌, விசை படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும்‌,மீனவர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதால்‌, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் ...

Read more

நாகை பள்ளி மாணவன் கண்டுபிடிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகார் அருகே சூரிய ஒளி மூலம் இயங்கும் பூச்சி மருந்து தெளிப்பானை கண்டுபிடித்து 8ம் வகுப்பு பள்ளி மாணவன் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளான். பூம்புகார் அருகே பொறையாரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் முருகேஷ் நாராயணன் என்ற ப்ள்ளி மாணவன்தான் இதனை கண்டுபிடித்துள்ளான். தற்போது மின் தட்டுப்பாடு தமிழகமெங்கும் காணப்படுகிறது. எரிபொருளின் விலையும் உயர்ந்து வி ...

Read more

பிப்ரவரி 2-ந்தேதி மனிதசங்கிலி பேராட்டம்

காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளை அலட்சியப்படுத்தும் மத்திய, மாநில அரசை கண்டித்து பிப்ரவரி 2 ந் தேதி மனிதசங்கிலி பேராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். நாகப்பட்டிணத்தில் பேசிய அச்சங்கத்தின் மாநில துணை தலைவர் பாலகிருஷ்ணன், காவிரி டெல்டா மாவட்டங்களை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தியும், விவசாயிகளின் இழப்புக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் இப்போராட்டம் நடைபெற ...

Read more

குடியரசு தினத்தை கருப்புதினமாக கடைபிடிக்க முடிவு

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் தனியார் அனல்மின்நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசுதினத்தை கருப்பு தினமாக கடைபிடிக்க மாணவர்கள் முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனியார் அனல்மின் நிலையம் அமைந்தால் விவசாய நிலங்கள் பாழ்படும்‍, மீன்வளம் அழியும் என்று அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்‍.இதுதொடர்பாக உச்சநீதிமன்றமும் அங்கு கட்டிடம் கட்ட தடைவிதித்து உள்ளது. ஆனால் பல்வேறு ...

Read more

தமிழகத்தில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அடு்த்தடுத்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. சென்னையை கொளத்தூரில் வெளியூருக்கு சென்றிருந்தவர் வீட்டில் ஜன்னலை உடைத்து புகுந்து 15 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணம் கொள்ளை போய் உள்ளது. சென்னை கொளத்தூர் செந்தில் நகரில் வசிப்பவர் கணேசன். அதிமுக பிரமுகரான இவர் கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டைபூட்டிவிட்டு குடும்பத்துடன் டெல்லி சென்றிருந்தார். முன்னதாக வீட்டை அருகில் வசிக்கும் ...

Read more

பொங்கல் கரும்பு விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை

சீர்காழி அருகே தண்ணீர் பற்றாக்குறையால் கரும்புகள் வள‌ர்ச்சி பாதிக்கப்பட்டதை அடுத்து குறைந்த விலைக்கு வியாபாரிகள் வாங்கி செல்வதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். நாகப்பட்டிணம் மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கிராமங்களில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் பொங்கல் கரும்பு பயிரிடப்பட்டு உள்ளது. பருவ மழை பொய்த்து போனதாலும், நீர்வரத்து குறைந்த காரணத்தாலும் கரும்பு வளர்ச்சி பாதிக்கப்பட்டது. ஒரு கரும்பின் விலை 14 ரூபாய் மு ...

Read more

காரைக்காலில் கடலில் குளிக்க சென்ற மாணவன் மாயம்

காரைக்காலில் கடலில் குளிக்க சென்ற மாணவன் மாயமான சம்பவம் அவரது உறவினர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் அன்சாரி, பழனிவேல், சிவக்குமார், உள்ளிட்ட 5 பேர் நேற்று மாலை அங்குள்ள கடலில் குளித்து கொண்டிருந்தனர். அவர்களில் அன்சாரி என்ற மாணவன் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. இது குறித்து சக மாணவர்கள் அளித்த புகாரின் பேரில் கடலில் காணாமல் போன மாணவனை தேடும் ...

Read more

தண்ணீர் இன்றி மஞ்சள் சாகுபடி பாதிப்பு

நாகப்பட்டிணம் மாவட்டம், பூம்புகார் அருகே தண்ணீர் இன்றி மஞ்சள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தை திருநாளான பொங்கல் பண்டிகைக்கு தேவையான மஞ்சள் கொத்து, பூம்புகார் தொகுதியில் பயிரிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதாலும், கடுமையான மின்வெட்டு காரணமாக மோட்டார் மூலம் தண்ணீர் கிடைக்காத காரணத்தாலும் மஞ்சள் சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஒரு கொத்து மஞ்ச ...

Read more

பொங்கலையொட்டி பானை தயாரிக்கும் பணிகள் தீவரம்

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகை மயிலாடுதுறை பகுதிகளில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. காவிரி கடைமடைப்பகுதியான மயிலாடுதுறையை அடுத்த கஞ்சாநகரம் என்ற இடத்தில் தயாராகும் புதுப்பானை சட்டிகளுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. இங்கேயே தயாரிப்பதால் மலிவான விலைக்கு மக்கள் பானை சட்டிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு தயாராகும் பானைகள் மொத்த வியாபாரிகளுக்கும் விற ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top