Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nagapattinam (Page 5)

மயிலாடுதுறையில் நடைபெற்ற துலா உற்ச்சவ தீர்த்தவாரி நிகழ்ச்சியில் பக்தர்கள் புனித நீராடினர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற துலா உற்ச்சவ தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடினால் புனிதம் என்பார்கள் ஆனால் அந்த காவிரியே தனது பாவங்களை போக்கி கொள்ள மயிலாடுதுறை துலாகட்ட காவிரியில் நீராடியதாக ஐதீகம். இதனை ஒட்டி ஆண்டுதோறும் துலாகட்ட தீர்த்தவாரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த வருடமும் சிறப்பாக துவங்கிய இவ்விழாவில் ஆயிரக ...

Read more

காற்றழுத்த தாழ்வு நிலை நாகை அருகே கரை கடந்தது‌ வட கடலோர மாவட்டங்களில் கனமழை

வங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை நாகை அருகே கரை கடந்ததை அடுத்து தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது‌. நேற்று‌ மதியம் புயல் சின்னம் நாகை அருகே கரையைக் கடந்த போது மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் காரணமாக நாகை, மற்றும் கடலூரில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. புயல் கரையைக் கட ...

Read more

நீதிமன்ற வளாகத்தில் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் கைது

நாகை நீதிமன்ற வளாகத்தில் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக பாங்கள் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் மீது வெளிப்பாளையம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. பல வருடங்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கை விரைந்து முடிப்பதாக கூறி காவல் துணை ஆய்வாளர் பக்கிரிசாமி என்பவர் ஐ ...

Read more

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வதை தடுக்க மீனவ பிரதிநிதிகள் பிரதமரை சந்தித்து பேச உள்ளனர்

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கை சிறைபிடித்து செல்வதை தடுக்க வலியுறுத்தி மீனவ பிரதிநிதிகள் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச உள்ளனர்‍. தமிழகத்தின் பாரம்பரிய மீன் பிடி பகுதிகளில், தமிழக மீனவர் மீன் பிடிக்கும் போது, இலங்கை கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தி தமிழகம்-புதுச்சேரி மீனவர் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள, நாகை, த ...

Read more

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேர், இந்திய கடற்படையி‌னரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும், பிற்பகல் 3 மணியளவில் ராமேஸ்வரம் கடற்கரைக்கு வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கடந்த 5-ம் தேதி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 30 பேருக்கு, நவம்பர் 19-ம் தேதி வரை சிறைக்காவல் விதிக்கப்பட்டுள்ளது. அவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வ ...

Read more

இலங்கை கடற்படை மீண்டும் அட்டுழியம் தமிழக மீனவர்கள் 35 பேர் கைது‌

ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரும், புது‌க்கோட்டை ஜெகதாபட்டினம் மீனவர்கள் 30 பேரும் இலங்கை கடற்படையினரால் கைது‌செய்யப்பட்டுள்ளதால், மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவி வருகிறது‌. இலங்கை நட்பு நாடு என்று ‌மத்திய அரசு நிமிடத்திற்கு ஒரு முறை கூறிவரும் வேளையில், இந்திய மீனவர்களின் கைது‌ படலம் மட்டும் நட்பு நாட்டினால் தொடர்ந்து‌ அரங்கேற்றப்பட்டு வருகிறது‌. ராமேசுவரத்தில் இருந்து 69 விசைப்படகுகளில் நேற்று காலை மீனவர்கள் ...

Read more

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்

நாகைமாவட்டம் கோடியக்கரை அருகே மீன் பிடித்துகொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் நடத்திய தாக்குதல் சம்பவம் மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் 2 விசைபடகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் அனைவரும் கோடியக்கரை அருகே மீன் பிடித்துகொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர் ...

Read more

தமிழக மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் நடத்திய தாக்குதலில், மீனவர் ஒருவர் படுகாயம்

தமிழக மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் நடத்திய தாக்குதலில், மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்‌. இந்த தாக்குதல் சம்பவம் நாகை மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் கிராமத்திலிருந்து மீனவர்கள் கடந்த பத்தாம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்‌. கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான படகில், ராஜமாணிக்கம்‌, கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று நள்ளிரவு கோடியக்கரை அருகே மீன ...

Read more

காரைக்காலில் நடைபெற்ற மாவட்ட தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம்

காரைக்காலில் நடைபெற்ற மாவட்ட தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் மயிலாடுதுறை கழக சட்டமன்ற உறுப்பினர் பாலஅருட்செல்வன் மற்றும் புதுவை மாநில பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். காரைக்கால் மாவட்ட தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் நெடுங்காடு தொகுதி செயலாளர் கலியபெருமாள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மயிலாடுதுறை தொகுதி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பாலஅருட்செல்வன், புதுவை மாநில பொறுப்பாளர்கள் செல்வராஜ், அசோக்பாபு ஆக ...

Read more

நாகை, காரைக்கால் மீனவர்கள் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க வலியுறுத்தி நாகை, காரைக்கால் மீனவர்கள் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களின் இந்த வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து 2 ஆயிரம் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. விசைப்படகு மீனவர்கள் மட்டும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈட ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top