Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nagapattinam (Page 4)

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி 6வது நாளாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட அக்கரைப்பேட்டையை சேர்ந்த 111 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, 6வது நாளாக மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 11ம் தேதி கோடியக்கரை அருகே மீன்பிடித்து கொண்டிருந்த நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த 111 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்கள் சென்ற 15 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் மீனவர் ...

Read more

புதுக்கோட்டை மீனவர்கள் 30 பேரை மீண்டும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்

நாகப்பட்டிணம் மீனவர்கள் 100 பேர் நேற்று சிறைபிடிக்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டை மீனவர்கள் 30 பேரை மீண்டும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தில் இருந்து 486 விசைப்படகுகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக கொண்டிருந்த போது, இலங்கை கடற்படை சுற்றி வளைத்துள்ளது. இதனை அடுத்து ...

Read more

மாதி புயல் வலுவடைந்திருப்பதால் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

மாதி புயல் மீண்டும் வலுவடைந்திருப்பதால் நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள மாதி புயல் சென்னைக்கு 400 கிமீ தொலைவில் மத்திய வடக்கு வங்கக் கடலில் மையம் கொண்டு இருந்தது. வடக்கு நோக்கி மாதி புயல் நகரும் என்று எதிர்பார்த்த நிலையில், காற்று முறிவின் காரணமாக, தென்மேற்கு திசையில் திரும்பிய புயல் இன்று அல்லது நாளை தமிழ்நாடு மற்றும் ...

Read more

நாகப்பட்டினத்தில் கடல் சீற்றம் காரணமாக விசைப்படகு கடலில் கவிழ்ந்து விபத்து மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

நாகப்பட்டினத்தில் கடல் சீற்றம் காரணமாக விசைப்படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக அதிலிருந்த 8 மீனவர்கள் காயங்களுடன் நீந்தி கரை சேர்ந்துள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலானதால், நாகையில் கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் கடலில் மீன் பிடிக்க சென்ற அக்கரைப்பேட்டை மீனவர் தன்ராஜ் என்ப ...

Read more

காவிரி உரிமை மீட்பு குழு மத்திய அரசுக்கு எச்சரிக்கை

காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக செயல்படும் அனைத்து சக்திகளையும் வரும் பாராளுமன்ற தேர்தலில் தோற்கடிக்கப்படும் என்று காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்‍. நாகப்பட்டினம் மாவட்டம் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்‌, மத்திய அரசு காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறைக்குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க ...

Read more

திருவாரூரில் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 40 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

திருவாரூரில் ஆன் லைன் வர்த்தகம் மூலம் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி 40 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்‍. நாகை மாவட்டம் கேதாரிமங்களம் பகுதியை சேர்ந்தவர் அக்பர் அலி. இவர் லைன் வர்த்தகம் மூலம் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கேதாரிமங்களம்‌, ஏனாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 800க்கும் மேற்பட்டவர்கள் இவரை நம்பி பணத்தை இழந்ததாக தெரிய வ ...

Read more

சீர்காழியில் தஞ்சை மண்டல அளவிலான கராத்தே போட்டி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்

சீர்காழியில் நடைபெற்ற தஞ்சை மண்டல அளவிலான கராத்தே போட்டியில் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நாகை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற தஞ்சை மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் கும்பகோணம், திருவாரூர், புது‌க்கோட்டை, நாகை உள்ளிட்ட கல்வி மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இது‌குறித்து‌ நாகை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கூறு‌கையில், இப்போட்டியில் 6 கல்வி மாவட்டத்தை சேர் ...

Read more

ஓசூரில் தனியார் நிறு‌வன ஊழியரை தாக்கி 15 லட்சம் ரூபாய் கொள்ளை

ஓசூரில் தனியார் நிறு‌வன ஊழியரை தாக்கி 15 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது‌. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவரும், நிறு‌வனத்தின் மற்றொரு ஊழியருமான முனியப்பாவும் நிறு‌வனத்தின் வசூல் தொகை 15 லட்ச ரூபாயை எடுத்து‌க்கொண்டு நிறு‌வனத்தின் உரிமையாளரிடம் ஒப்படைக்க சென்று‌ள் ...

Read more

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதற்கு ஜிகே வாசன் கண்டனம்

உலக மீனவர் தினத்தன்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் ஜிகே வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது நடைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். காங்‌கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என பா.ஜ.க.கூறுவது குறி‌த்து பொதுமக்களே பதில் அளிப்பார்கள் என்ற ...

Read more

கடலில் உயிருக்கு போராடி கொண்டிருந்த மூன்று மீனவர்களை, தனுஷ்கோடி மீனவர்கள் மீட்டனர்

விசைப்படகு பழுதாகி கடலில் உயிருக்கு போராடி கொண்டிருந்த மூன்று மீனவர்களை, தனுஷ்கோடி நாட்டு படகு மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டிணத்திலிருந்து கடந்த 13ம் தேதி சரவணன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மூன்று மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, படகு பழுதாகி தனுஷ்கோடி பகுதியில் கரை ஒதுங்கின. இதனை கண்ட தனுஷ்கோடி நாட ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top