Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nagapattinam (Page 3)

தியாகி வள்ளியம்மையின் நினைவு நாள் மாலை அணிவித்து மரியாதை

நாகை மாவட்டம் பூம்புகாரை அடுத்த தில்லையாடியில் அமைந்துள்ள தியாகி வள்ளியம்மையின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் அருட்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தென்னாப்பிரிக்காவில் தேசபிதா காந்தியடிகள் வெள்ளையர்களின் நிறவெறி ஆதிக்கத்தை எதிர்த்து போராடியதைப்போல, தமிழகத்தை சேர்ந்த தில்லையாடி வள்ளியம்மையும் நிறவெறிக்கொள்கையை எதிர்த்து போராடி அந்நாட்டில் சிறைசென்று ...

Read more

நாகையில் சுற்றுலா விழா

தமிழர்களின் பாரம்பரியத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் விதமாக நாகையில் சுற்றுலா விழா வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டது. உலகின் மூத்த குடி மக்களாக கருதப்படும் தமிழர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள் குறித்து நாகையில் ஆண்டுதோறும் சுற்றுலா விழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா தரங்கம்பாடியில் உள்ள டேனிஸ் கோட்டையின் மைதானத்தில் துவங்கியது. அப்போது பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அழகிய கலைய ...

Read more

நாகை அருகே மீனவ பெண் கொலை

நாகை அருகே 15 நாட்களுக்கு முன் காணாமல் போன மீனவ பெண் ஒருவர், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை அக்கரைப்பேட்டை திடீர்குப்பம் மீனவ பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலன். இவரது மகள், சூர்யாவும், அப்பகுதியை சேர்ந்த ஞானவேல் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த ஜனவரி 15ம் தேதி சூர்யா திடீரென காணாமல் போயுள்ளார். இதுகுறித்து சூர் ...

Read more

வேளாங்கண்ணி அருகே அத்துமீறி மீன்பிடித்தக்கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் கைது

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே அத்துமீறி மீன்பிடித்தக்கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து 5 விசை படகுகளில் வந்த 25 இலங்கை மீனவர்கள், இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியான நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்திய கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 5 விசைப்படகுகளையும், 25 மீனவர்களை சிறைப் ...

Read more

நாகை கடற்கரையோர கிராமங்களில் மர்மகாய்ச்சல் – 10பேர் பலி

நாகை கடற்கரையோர கிராமங்களில் வேகமாக பரவி வரும் மர்மகாய்ச்சலுக்கு இதுவரை 10பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்திலுள்ள காமேஸ்வரம், விழுந்தமாவடி, புதுப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் மர்மகாய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மர்மகாய்ச்சலுக்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10பேர் உயிரிழந்துள்ளதா ...

Read more

பூம்புகார் அருகே கடலோரப் பகுதியில் ஆலிவ் ரிட்லி வகை ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிது

நாகை மாவட்டம், பூம்புகார் அருகே கடலோரப் பகுதியில் ஆலிவ் ரிட்லி வகையைச் சேர்ந்த அரியவகை கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய வண்ணம் உள்ளது. இந்திய கடற்பகுதியில் ஆலிவ் ரிட்லி, பச்சை ஆமை பல வகையான அரியவகை ஆமைகள் காணப்படுகிறது. கடல் ஆமை இனங்கள் இனப்பெருக்க காலங்களில், கருத்தரிக்கும் பெண் ஆமைகள் கரைக்கு சென்று மணலில் குழி தோண்டி முட்டையிட்டு செல்வது வழக்கம். பின்னர், இயற்கையாகவே குஞ்சுகள் வெளிவந்து கடலுக் ...

Read more

மயிலாடுது‌றையில் நடைபெற்ற தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் உறு‌தி மொழி ஏற்பு

உளுந்தூர்பேட்டை மாநாட்டையொட்டி, நாகை மாவட்டம் மயிலாடுது‌றையில் நடைபெற்ற தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில், ஒன்று‌படுவோம், ஊழலை ஒழிப்போம் மத்திய அரசை தீர்மானிப்போம், மாநில அரசை வென்றெடுப்போம் என்று‌ உறு‌தி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது‌. நாகை வடக்கு மாவட்டம் தேமுதிக கிளை சார்பில் மயிலாடுது‌றையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், பண்ருட்டி தேமுதிக எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து‌, மயிலாடுது‌றை தேமுதிக எம்.எல்.ஏ. ...

Read more

நாகை மாவட்ட ஆட்சியர் அலு‌வலகத்தில் மீனவர்கள் தீக்குளிக்க முயற்சி

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்கக்கோரி, நாகை மாவட்ட ஆட்சியர் அலு‌வலகத்தில் மீனவர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 111 பேர் இன்று விடுவிக்கப்படவுள்ளனர். இதனிடையே மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிப்பது குறித்து இலங்கை அரசு உத்தரவு ஏதும் பிறப ...

Read more

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் – சல்மான் குர்ஷித்

இலங்கை சிறையிலுள்ள நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் அடுத்த மாதம் 20 ஆம் தேதிக்குள் விடுவிக்கப்படுவார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் உறுதியளித்துள்ளார்-. டெல்லியில் அவரைச் சந்தித்த மீனவ பிரதிநிதிகளிடம் இந்த உறுதி மொழியை அவர் அளித்துள்ளார். தமிழகம் மற்றும் இலங்கை மீனவர்களிடையேயான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை, வரும் 20 ஆம் தேதி நடைபெறுவதாகவும்‌, அத ...

Read more

சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி 7-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி அக்கரைப்பேட்டை மீனவர்கள் 7-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் 110 பேரையும், 15 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்து சென்றது. இதனைக்கண்டித்து மீனவர்களை விடுதலை செய்யக் கோரி அக்கரைப்பேட்டை மீனவர்கள் தொடர்ந்து 7-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top