Home
You Are Here: Home » News » Tamil Nadu » Nagapattinam (Page 2)

சீர்காழி அருகே அதிமுக பேரூராட்சி துணை தலைவர் கள்ளஓட்டு போட முயற்சி

சீர்காழி அருகே அதிமுக பேரூராட்சி துணை தலைவர் வாக்குசாவடிக்குள் நுழைந்து கள்ளஓட்டு போட முயன்றதாக கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.. நாகை மாவட்டம் சீர்காழயை அடுத்த வைத்திஸ்வரன் கோவிலில் உள்ள வாக்குசாவடி மையத்தில் அதிமுக பேரூராட்சி துணை தலைவர் போகர் ரவி, வாக்குபதிவு முடிந்த பின்பு கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்த தேமுதிக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சியை சேர்ந்த 200 ...

Read more

நாகை அருகே தேர்தல் அதிகாரிகள் சென்ற வாகனம் விபத்து‌

நாகை அருகே தேர்தல் அதிகாரிகள் சென்ற வாகனம் விபத்து‌க்குள்ளானதில் அதிகாரிகள் உட்பட 4 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்து‌வமனையில் அனு‌மதிக்கப்பட்டுள்ளனர். மக்களவை தேர்தல் பணிக்காக நாகை மாவட்ட ஆட்சியர் அலு‌வலகத்தில் இருந்த தேர்தலு‌க்கான அத்தியாவசிய பொருள்களை வாகனங்கள் மூலம் அந்தந்த வாக்குசாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது‌. அதனடிப்படையில் கீழ்வேளூர் பகுதியில் உள்ள வாக்கு சாவடிக்ளுக்கு தேவையான உபகரணங்களை ஏற்றிக் ...

Read more

சீர்காழியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தேர்தலில் வெகு தொலைவிலுள்ள ஊர்களில் பணிபுரிய உத்தரவிட்டுள்ளதை கண்டித்து நாகை மாவட்டம் சீர்காழியில், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவின்போது பணியில் அமர்த்தப்படும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளை தொலை தூரத்தில் பணியில் அமர்த்தி பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆசிரியைகளை 2 மணி நேர பயணதூரத்திலுள்ள இடங்களில் மட்டுமே பணியில் அமர்த்தக்கோரி ...

Read more

திசை மாறி இலங்கைக்கு சென்ற மீனவர்கள்

திசை மாறி இலங்கைக்கு சென்ற வேதாரண்யம் பகுதி மீனவர்கள் இருவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வேதாரண்யம் அருகே வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த மீனவர்கள் செல்வராசு மற்றும் கரண்‍ ஆகிய இருவரும் கோடியக்கரையில் இருந்து கடந்த 31-ம் தேதி மீன் பிடிக்க சென்றனர்‍. நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது படகு பழுதடைந்ததாக கூறப்படுகிறது. ...

Read more

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகளில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை சுற்றி வளைத்ததோடு, கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில ...

Read more

சீர்காழி அருகே செம்பொன் சிலைகள் பறிமுதல்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கடத்தி வரப்பட்ட 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்பொன் சிலைகள் மற்றும் 40 சூரியன் மின்விளக்குகளை தேர்தல் விதிமீறல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்‍. சீர்காழி புறவழிச்சாலையில் தேர்தல் விதிமீறல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கும்பகோணத்திலிருந்து சென்னை சென்றுகொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தில் உரிய ஆவணங்கள் இன்ற ...

Read more

திருக்கடையூர் அருகே ஐந்தரை கிலோ வெள்ளி பறிமுதல்

நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே தனியார் பேருந்தில் உரிய ஆவனங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ஐந்தரை கிலோ வெள்ளி பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருக்கடையூரில் இன்று அதிகாலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.. அப்போது சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கி வந்த தனியாரி் பேருந்தில் தேர்தல் குழுவினர் ஆய்வு செய்ததில் பார்சல் ஒனறில் வெள்ளி பொருட்கள் இருப்பது தெ ...

Read more

அதிமுக பிரச்சாரத்தின் போது பொது‌மக்கள் சாக்கடை கால்வாயில் விழுந்து‌ மயக்கம்

நாகை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக பிரச்சாரத்தினிடையே காவல்துறையின் கெடுபிடியைக் கண்டு பொது‌மக்கள் சிதறி ஓடியதில் 35க்கும் மேற்பட்டோர் சாக்கடை கால்வாயில் விழுந்து‌ மயக்கமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது‌. நாகையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டம் நேற்று‌ நடைபெற்றது. இதில் மாலையில் நடைபெறும் கூட்டத்திற்காக காலை 9 மணியில் இருந்தே அதிமுக நிர்வாகிகள் பொத ...

Read more

இயற்கை எரிபொருள் எண்ணை பயன்படுத்தி ஓடும் கார் – மாணவர்கள் சாதனை

டீசல் எரிபொருளுக்கு மாற்றாக இயற்கை எரிபொருள் எண்ணையை பயன்படுத்தி ஓடும் காரை, தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் கண்டுபிடித்து ‌சாதனையில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களான பென்சன் ராஜா, அசோக்குமார், பகீரத் சர்மா ஆகியோர், அப்பகுதியில் உள்ள ஹை-டெக் ரிசர்ச் பவுண்டேசன் என்ற தனியார் ஆராய்ச்சி நிறு‌வனத்து‌டன் இணைந்து ‌புன்னை எண்ணெய்யில் இயங்கும் புதிய கார் ஒன்ற ...

Read more

மயூரநாதர் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி விழா

மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் பிரபல முன்னணி கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி விழா துவங்கியுள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை 3 நாட்கள் நடைபெறவுள்ள இந்த விழாவில் சென்னை,பெங்களூரு, ஸ்ரீலங்கா போன்ற இடங்களிலிருந்து முன்னணி பாரத நாட்டியக் கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். முன்னதாக முதல்நாளில் 12 குழுக்களைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இவ்விழாவில் ஏராள ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top