Home
You Are Here: Home » News » Tamil Nadu » Madurai (Page 9)

அலங்கநால்லூர் ஜல்லிக்கட்டு பணிகள் துவக்கம்

புகழ்பெற்ற அலங்கநால்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு விழாவிற்கான முதற்கட்ட பணிகள் பூமி பூஜையுடன் துவங்கியுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான இடைக்கால தடையை சிலவாரங்களுக்கு முன்பு, உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதனை அடுத்து அலங்கநால்லூர் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கியது. இதனை அடுத்து அலங்கநால்லூர் மற்றும் பாலமேட ...

Read more

தி.மு.க. தலைவர் பதவிக்கு மு.க.அழகிரி போட்டியிட வேண்டும் என்று‌ அவரது‌ ஆதரவாளர்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தி.மு.க. தலைவர் பதவிக்கு மு.க.அழகிரி போட்டியிட வேண்டும் என்று‌ அவரது‌ ஆதரவாளர்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். சென்னையில் நேற்று நடந்த விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசுகையில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் மேன்மைக்காக, எழுச்சிக்காக தமது‌ ஆயுள் இருக்கும்வரை பாடுபட இருப்பதாகவும், அதன்பிறகு தம்பி ஸ்டாலின் அதற்காக பாடுபடுவார் என்று‌ம் கூறினார். கருணாநிதியின் இந்த கருத்து தி.மு.க.வினர் மத்தியில் பெரும் ப ...

Read more

அனுமதியின்றி கட்டப்பட்ட பி.ஆர்.பி. நிறுவன கட்டிடங்களுக்கு சீல்வைப்பு

மதுரை மாவட்டம், மேலூர் அருகே விதிமுறைகளை மீறி புதியதாக கட்டப்பட்ட பி.ஆர்.பி. கிரானைட் தொழிற்சாலை கட்டிடங்களுக்கு சீல் வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலூர் அடுத்துள்ள தெற்குத்தெரு கிராமத்தில் பி.ஆர்.பி. கிரானைட் எக்ஸ்போர்ட் தொழிற்சாலை கட்டப்பட்டுள்ளது. பல ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள கட்டிடங்களுக்கு நகர்ப்புற ஊரமைப்பு துறையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும். ஆனால் எவ்வித அங்கீகாரம் பெறாமல் கட்டிட ...

Read more

பெரியகுளத்தில் புதிதாக சிறப்பு நீதிமன்றம் திறப்பு

நில அபகரிப்பு வழக்குகளை விசாரணை செய்ய பெரியகுளத்தில் புதிதாக சிறப்பு நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தை நீதிபதி அருள்ராஜ் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி அருள்ராஜ், மாவட்டம் முழுவதிலும் இருந்து வரும் அனைத்து நில அபகரிப்பு வழக்குகளும் இந்த சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச் ...

Read more

மத்திய அரசின் நேரடி நேரடி மானிய திட்டம் மதுரை உள்பட நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் இன்று முதல் அமல்

மத்திய அரசின் நேரடி மானிய திட்டம், முதற் கட்டமாக மதுரை உள்பட நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் இன்று முதல் அமல்படுத்தப்படவுள்ளதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்து‌ள்ளார். புது‌டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசுத் திட்ட மானியங்கள் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுவதாகவும், முதல் கட்டமாக, 26 திட்டங்களுக்கான மானியத்தொகை நேரடியாக வழங்கப்படும் என்று‌ம் கூறினார ...

Read more

ஆட்டோ ஓட்டுனர் மர்மநபர்களால் கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீழப்புதூரை சேர்ந்த பிரபாகரன் என்பவர்தான் கொலையானவர். ஆட்டோ ஓட்டுனரான இவர் காலையில் வீட்டை விட்டு சென்றுள்ளார். இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் வடக்கு எஸ். ஏ நகரில் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடப்பதாக தகவல் வந்துள்ளது. இறந்தவரின் உடலை கைபற்றிய காவல்த ...

Read more

நெருங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

தடைகள் அகன்றதால், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை கோலாகலமாக நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தென் மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டில் உலகப் புகழ் பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், காளைகள் வெளியே வரும் வாடிவாசல், மக்கள் பாதுகாப்பாக அமர்ந்து பார்க்கும் வகையில் இடங்களை தேர்வு செய்தல், பல்வேறு கிராமங்களுக்கும் சென்று மாடு பிடி வீரர்களுக்கு அழைப்பு விடுத்தல் ...

Read more

தண்ணீரில்லாமல் கருகும் மஞ்சள், விவசாயிகள் கவலை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் பொங்கலுக்கு தயாராகும் கொத்து மஞ்சள் தண்ணீரின்றி வாடி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு தேவையான கொத்து மஞ்சள் செடிகளை எர்ரம்பட்டி, கோணப்பட்டி, அய்யூர் உள்ளிட்ட கிராமங்களில் 100 ஏக்கருக்கு மேல் பயிரப்பட்டுள்ளது. பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்னதாக மஞ்சள் செடிகளை விவசாயிகள் அறுவடை செய்வது வழக்கம். தற்போது பருவமழை பொய்த்ததாலும்‌, வறட்சியால் கிணற ...

Read more

துரை தயாநிதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

கிரானைட் முறைகேடு வழக்கு தொடர்பாக மேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்த துரை தயாநிதி, விசாரணைக்காக மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காலை ஆஜராக உள்ளார் ...

Read more

துரை தயாநிதிக்கு மதுரை போலீசார் சம்மன்

மு. க. அழகிரியின் மகன் துரைதயாநிதி நாளை, மதுரையிலுள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, மு. க. அழகிரியின் மகன் துரைதயாநிதி மீது அதிமுக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் துரைதயாநிதி முன்ஜாமீன் வாங்கியிருக்கும் நிலையில்‌, நாளை மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் துரைதயாநிதிக்கு சம் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top