Home
You Are Here: Home » News » Tamil Nadu » Madurai (Page 5)

மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் சேதம்

இடி தாக்கியதில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுரம் சேதமடைந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் வராலற்று சிறப்பு மிக்க மீனாட்சியம்மன் கோவில் உள்ளது. புராதனமிக்க இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் நேற்று மாலை திடீரென்று கிழக்கு ராஜகோபுரத்தின் மீது இடி தாக்கியது. இதில் கோபுரத்தின் மீதிரு்ந்த ராஜகாளியம் ...

Read more

மேலூர் அருகே கார்த்திகை பூத்தட்டு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள வீரகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற கார்த்திகை பூத்தட்டு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மேலூர் அருகே உள்ள கீழவளவில் அமைந்துள்ள வீரகாளியம்மன் கோவிலி்ல் கார்த்திகை மாத பூத்தட்டு திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் பெண்கள் ஆயிரக்கணக்கானோர் பூத்தட்டு ஏந்தி பேரணியாக வந்து அம்மனுக்கு பூக்களை காணிக்கையாக செலுத்தினர். திருவிழாவில் வீரகாளியம்மன் சு ...

Read more

சோழவந்தான் அருகே நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளில் நெல்லை விளையாட்டு விடுதி அணி சாம்பியன்

சோழவந்தான் அருகே நடைபெற்ற டாஃபே சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டிகளில் நெல்லை விளையாட்டு விடுதி அணி சாம்பியன் பட்டம் வென்றது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள பாண்டியராஜபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற போட்டிகளில் 12 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் பாண்டியராஜபுரம் அரசு பள்ளியும், நெல்லை விளையாட்டு விடுதி அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் நெல்லை விளையாட்டு விடுதி அணி ...

Read more

வாடிப்பட்டி அருகே மாநில அளவிலான பள்ளிக்கூட மாணவர்களுக்கான ஹாக்கிப்போட்டி நடைபெற்றுவருகிறது

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மாநில அளவிலான பள்ளிக்கூட மாணவர்களுக்கான ஹாக்கிப்போட்டி தொடங்கியது. இதில், சென்னை, திருச்சி உள்பட 12 மாவட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் விளையாடி வருகின்றனர். மதுரையை அடுத்த வாடிப்பட்டி அருகே உள்ள பாண்டியராஜபுரத்தில் மாநில அளவிலான ஹாக்கிப்போட்டி நேற்று தொடங்கியது. இதில் சென்னை, திருச்சி, நெல்லை உள்பட 12 மாவட்டங்களை சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்கள் கலந்துகொண்டு விளையா ...

Read more

தெற்காசிய விளையாட்டு போட்டியில் தங்கம்,வெள்ளிப்பதக்கங்களை வென்ற மதுரை வீராங்கனைக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

தெற்காசிய விளையாட்டு போட்டியில் இரண்டு தங்கம் ஒரு வெள்ளிப்பதக்கம் வென்ற மதுரை வீராங்கனைக்கு கிராம மக்கள் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பளித்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரை சேர்ந்தவர் அர்ச்சனா. இவர் அண்மையில் நடந்து முடிந்த தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டு 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்ட பந்தயங்களில் கலந்து கொண்டு இரண்டு தங்க பதக்கங்களை வென்றார். இதன் மூ ...

Read more

மதுரையில் நடைபெற்று வரும் சணல் கண்காட்சியை ஏராளமான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்

மதுரையில் சணல் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்று வரும் கண்காட்சியை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். மதுரை காமராஜர் சாலை பகுதியில் சணல் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இந்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் விற்பனை கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, உத்திரபிதேசம் உள்ளிட்ட 25 மாநிலங்களை சேர்ந்த சணல் தொழிலாளர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளது. இக்க ...

Read more

மதுரை அருகே கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் தங்க நகைகள் கொள்ளை

மதுரை அருகே புதுமணதம்பதியினரிடம் கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலூர் அருகே ஊத்தப்பன்பட்டியில் நள்ளிரவு நான்குபேர் கொண்ட கும்பல், தவமணி என்பவரின் வீட்டில் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதை தொடர்ந்து கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் அங்குள்ள காலனிப்பகுதியில் புகுந ...

Read more

மதுரையில் ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபரின் மகனை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்

மதுரையில் ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட தொழில் அதிபரின் மகனை புதுக்கோட்டை அருகே கடத்தல்காரர்களை துப்பாக்கியால் சுட்டு, காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். மதுரை தபால் தந்தி நகரில் வசித்து வரும் தொழில் அதிபர் ரவிக்குமாரின் மகன் கிரன்ரோகித் தேவ் என்ற 14வயது மாணவர் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பியபோது கடத்தப்பட்டார். காரில் வந்த மர்ம கும்பல் அவரை கடத்திச்சென்றது. பின்னர் சில மணி நேரத்தில் மாணவர ...

Read more

சமயநல்லூர் அருகே இளம்பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே இளம்பெண் ஒருவர், எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். சமயநல்லூர் மின்வாரிய அலுவலகம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு, இளம்பெண் ஒருவர் எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட இளம்பெண் ராமநாதபுரம் மாவட்ட ...

Read more

பாலியல் வன்கொடுமையை கண்டித்து திருநங்கைகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரையில் பாலியல் வன்கொடுமையை கண்டித்து திருநங்கைகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு‌ இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தியாவில் பெருகி வரும் பாலியல் வன்கொடுமை குற்றங்களை கண்டித்தும்‌, பாலியல் பலாத்காரம் எனும் கொடூர நிகழ்வில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனிடையே திருவாரூரில் மாற்று‌தி ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top