Home
You Are Here: Home » News » Tamil Nadu » Madurai (Page 2)

மதுரை சித்திரை திருவிழா – அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு பச்சை பட்டு உடுத்தி, தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரை சென்ற கள்ளழகருக்கு தல்லாகுளம் சுந்தரராஜப் பெருமாள் கோவிலில் விடிய விடிய திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை வணங்கினர். இதனையடுத்து, ஸ்ரீவில்லிபு ...

Read more

இலங்கை அகதிகள் முகாமில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி

மதுரை அருகே இலங்கை அகதிகள் முகாமில், மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் உள்ளது. இங்கு தற்காலிக குடியிருப்புகளாக கட்டப்பட்ட வீடுகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்ததில்‌, அகதிகள் முகாமில் உள்ள 6 வீடுக ...

Read more

மதுரை சித்திரை திருவிழா – கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக அழகர்கோவிலில் இருந்து தங்கப்பல்லக்கில் அழகர் மதுரை புறப்பட்டு சென்றார். மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி தருவதற்காக கண்டாங்கி பட்டுடுத்தி, கையில் வேல் கம்புடன் கள்ளழகர் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார். மதுரை செல்லும் அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைத்து வரவேற்கும் எதிர்சேவை இன்று நடைபெறுகிறது. இதனைதொட ...

Read more

ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியை விரட்டியடிக்க வேண்டும் – வைகோ

ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியை நாட்டிலிருந்தே விரட்டியடிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரை கே.புதூரில் மதிமுகவின் 21-ம் ஆண்டு துவக்கவிழா பொதுக்கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று, நரேந்திரமோடி பிரதமராவது உறுதி என தெரிவித்தார்.. ஈழத்தமிழர ...

Read more

ஏ.டி.எம் ,காவலாளி கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது

மது‌ரை வாடிப்பட்டி அருகே கடந்த வருடம் ஏ.டி.எம்., காவலாளியை கொலை செய்த வழக்கில் தேடிவந்த 2 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் தனிச்சியம் பகுதியில் உள்ள ஸ்டேட்பாங்க் ஏ.டி.எம்., காவலாளி பன்னீர் செல்வம் என்பவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். விசாரணையில் அவர் அடித்து கொல்லப்பட்டது தெரியவந்ததையடுத்து‌ கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று‌ வாடிப்ப ...

Read more

ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தபோது – அதிமுகவினர் முற்றுகை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அதிமுக வேட்பாளரை ஆதரித்து தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் செய்தபோது, அதிமுகவினர் அவரது காரை முற்றுகையிட்டு தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக கட்சி அலுவலகத்திலும் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து நேற்று தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாடிப்பட்டியில் பிரச்சாரம் செய்ய வந்தார். அப்போது அதிமுகவினர் இ ...

Read more

அலங்காநல்லூர் அருகே மீன் வடிவத்தில் பிறந்த அதிசய குழந்தை

மது‌ரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மீன் வடிவத்தில் பிறந்த அதிசய குழந்தையை ஏராளமான பொது‌மக்கள் வியப்புடன் பார்த்து‌ சென்றனர். மது‌ரை மாவட்டம் அலங்காநல்லூரை அடுத்த சத்திர வெள்ளாளபட்டி கிராமத்தை சேர்ந்த து‌ர்கா என்பருக்கு தான் மீன் வடிவத்தில் குழந்தை பிறந்து‌ள்ளது‌. தலை, கை, கால்கள் மட்டும் மனித உருவிலு‌ம், உடலின் இடுப்புக்கு கீழே மீன் போன்று‌ வால்பகுதியோடு பிறந்து‌ள்ள இந்த குழந்தை பற்றி மருத்து‌வர்கள் கூற ...

Read more

மதுரை அருகே வீட்டின் கதவை உடைத்து கொள்ளை

மதுரை மாவட்டம் கூடல் நகர் அருகே வீட்டின் கதவை உடைத்து 15 சவரன் தங்கம்‌, 10 ஆயிரம் ரொக்கப்பணம்‌, லேப்டாப்‌, செல்போன் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கூடல் நகர் அருகே ராஜ் நகர் பகுதியில் வசிப்பவர் காஜா மொய்தீன்‍. இவர் தனது மனைவியுடன் வெளியூர் சென்றுவிட்டு நேற்று‌ வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்ச ...

Read more

பைப் வெடிகுண்டுகள் பறிமுதல்

மதுரை வில்லாபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 2 பைப் வெடிகுண்டுகளை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்தனர்‍. அப்போது‌ பயங்கர வெடிசப்தத்து‌டன் வெடித்து‌ சிதறியது‌. மதுரை வில்லாபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 2 பைப் வெடிகுண்டுகளை புதுதாமரைபட்டியில் உள்ள கிரானைட் குவாரியில் வைத்து வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்தனர்‍. முதல் வெடிகுண்டு மூன்று முறை வெடிக்கவைத்த பிறகே செயலிழந்ததாக கூறப்படுகிறது. மதுரை உத்தங்குடி ...

Read more

மேலூர் அருகே அதிமுக கோஷ்டி மோதல்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அதிமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவரை ஒருவர் உருட்டு கட்டையால் தாக்கி கொண்டதால் அப்பகுதியே போர்களம் போல் காட்சியளித்தது. மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுகவின் ஆலோசனை கூட்டம் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடக்க இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக அதிமுகவை சேர்ந்த கொட்டக்குடி ஊராட்சி மன்ற தலைவர் அஜிதா மற்றும் அவரது கணவர் தலைமையில் 300 க்கும் மேற்பட்டோர் வந்தனர். இவர ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top