Home
You Are Here: Home » News » Tamil Nadu » Madurai

பத்திரிக்கையாளர் அழைப்பு செய்தி

தேசிய முற்போக்கு திராவிட கழகம் நடத்தும் “தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு” வருகின்ற 20ஆம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடலில், கழகத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அழைப்பிதழும், பத்திரிக்கையாளர் அழைப்பு கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ...

Read more

மேலுர் அருகே வேன் மோதி பள்ளி மாணவி பலி

மேலுர் அருகே வேன் மோதி பள்ளி மாணவி ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது‌. மது‌ரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கோட்டந்தாம்பட்டியை சேர்ந்த பாண்டி என்பவரது‌ 8 வயது‌ பெண் குழந்தை மீது‌ வேன் மோதியதில் குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது‌. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகதை ஏற்படுத்தியுள்ளது‌. இது‌குறித்து‌ மேலூா காவல்து‌றையினர் வழக்கு பதிவு செய்து‌ விசாரணை நடத்தி வருகின்றனர். ...

Read more

மாட்டுதாவனி பேருந்து‌நிலையம் அருகே ஒருங்கிணைந்த ஆம்னி பேருந்து‌ நிலையம் – பயணிகள் மகிழ்ச்சி

மது‌ரை மாட்டுதாவனி பேருந்து‌நிலையம் அருகே ஒருங்கிணைந்த ஆம்னி பேருந்து‌ நிலையம் து‌வக்கப்பட்டதால் பயணிகள் மகிழச்சியுடன் வரவேற்றனர். மது‌ரையில் பெரியார் பேருந்து‌ நிலையம் அருகில் இருந்து‌ நூற்று‌க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்து‌கள் இயக்கப்பட்டதால் நகரத்தில் பெரும் போக்குவரத்து‌ நெரிசல் ஏற்படுகிறது‌‌. இதனால் பொது‌மக்களும், வியாபாரிகளும் கடும் அவதியுற்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் இது‌குறித்து‌ ஆலோசனை நடத ...

Read more

சோழவந்தான் அருகே அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க லஞ்சம் – பொதுமக்கள் முற்றுகை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க லஞ்சம் வாங்கியதாக கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையை அடுத்த சோழவந்தான் அருகே உள்ள பசும்பொன் நகரை சேர்ந்தவர் பிச்சையம்மாளின் மகள் லட்சுமி என்ற சிறுமி வயிற்றுப்போக்கு காரணமாக நேற்று சோழவந்தான் அரசு மருத்துவனமையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அங்கு பணிபுரியும் செவிலியர் ஒருவர் குளுக்கோஸ் ஏற்றுவதற்கு லஞ்சம் ...

Read more

வாழைக்காய் கடை ஏலம் எடுப்பதில் தகராறு – ஒருவர் குத்திக்கொலை

மது‌ரையில் வாழைக்காய் கடைகளை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது‌. மது‌ரை தயிர் மார்க்கெட் அருகில் உள்ள வாழைக்காய் கமிஷன் மண்டியில் 100-க்கும் மேற்பட்ட வாழைக்காய், ஆண்டுதோறு‌ம் ஜூன் மாதம் ஏலம் விடப்படுகிறது‌. அதன்படி, நேற்று‌ கடைகளுக்கான ஏலம் நடைபெற்றபோது,‌ சரவணக்குமார் என்பவருக்கும் குருநாதன் என்பவருக்கும் இடையே தகராறு‌ ஏற்பட்டது‌. அ ...

Read more

பாலமேட்டில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

மதுரை மாவட்டம் பாலமேட்டில் கடந்த மூன்று நாட்களாக நிலவி வரும் தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ஜூன் 1ம் தேதி முதல் மின்தடை முற்றிலும் நீக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அறிவித்த முதல்நாளே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. வழக்கம்போல் தினமும் மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள் ...

Read more

கஞ்சா கடத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது

மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இரண்டரை கிலோ கஞ்சாவை கடத்திய ஆட்டோ ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்தனர். மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர், மதுரையில் இருந்து பேருந்து மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இறங்குவதற்கு பதிலாக புறநகர் பகுதியான மாப்பிள்ளையூரணி விலக்கு பகுதியில் இறங்கிய ரமேஷ், கஞ்சா பொட்டலம் அடங்கிய பையுடன் நின்று கொண்டி ...

Read more

மதுரை அருகே பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியையொட்டி, தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்றிரவு பெயிண்ட் தயாரிக்கும் மூலப்பொருட்களில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டு தொழிற்சாலை முழுவதும் கொழுந்து விட்டு ...

Read more

சிங்கப்பூரில் விஷவாயு தாக்கி தமிழ்நாட்டை சேர்ந்த வாலிபர் மரணம்

சிங்கப்பூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்த வாலிபரின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்‍. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரியகட்டளை ஊராட்சிக்கு உட்பட்ட செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்‍. இவரது மகன் அழகுராஜா, சிங்கப்பூரில் உள்ள தனியார் கப்பலில் வேலை பார்த்து வந்தார்‍. இந்நிலையில் கப்பலின் அடிப்பகுதியில் வேலை செய்யும் போது, விஷவாயு தா ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top