Home
You Are Here: Home » News » Tamil Nadu » Krishnagiri (Page 5)

அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லி்க்கட்டு

கிருஷ்ணகிரி அருகே பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளாமல் எருது விடும் விழாவை நடத்தியதால் மாடுமுட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கிருஷ்ணகிரி அருகிலுள்ள இட்டிக்கல் அகரம் என்ற ஊரில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு எருது விடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. எருது விடும் நிகழ்ச்சிக்கு உரிய அனுமதி பெறாததுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளும் சரியாக மேற்கெ ...

Read more

ஊருக்குள் புகுந்த யானைகளை பட்டாசு வெடித்து விரட்டியடிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகளை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் விரட்டினர். சூளகிரி அருகே சினிகரிபள்ளி கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்தன. அங்குள்ள விளை நிலங்களை யானைகள் சேதப்படுத்தியதால் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினருடன் இணைந்து பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், தாரைத்தப்பட்டைகள் அடித்தும் யானைகளை வி ...

Read more

நகராட்சியை முற்றுகையிட்ட துப்புரவு பணியாளர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகராட்சியில் கூடுதலாக பணியாளர் நியமிக்க கோரி துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஓசூர் நகராட்சி விரிவுபடுத்தப்பட்டு 45 வார்டுகளாக தரம் உயர்த்தபட்டது. அதே நேரத்தில் துப்புரவு பணியாளர்களை அதிகமாக நியமிக்கவில்லை என்றும், அதனால் நகரின் பல இடங்களில் குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு அதிகமான ...

Read more

தலைமை ஆசிரியரின் செயின் பறிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து பட்டப்பகலில் 5பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது. ஒசூரை அடுத்த ராயக்கோட்டையில் வசித்து வரும் சுகுணா என்பவரது தங்க சங்கிலியைத்தான் மர்ம நபர்கள் பறித்து சென்றனர். சுகுணா சூளகிரி அருகே உள்ள தொட்டேகவுண்டன் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். காலை அவர் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று திரும்பும் வழியில், இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவர ...

Read more

ஜனவரி 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பணியாளர்கள் பங்கேற்றனர். இதே போன்று ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top