Home
You Are Here: Home » News » Tamil Nadu » Krishnagiri (Page 2)

அனுமதியின்றி ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்த 3 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி டெட்டனேட்டர்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி அடுத்துள்ள மேலுமலை பகுதியில் கியூ பிரிவு காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுப்பிரமணி என்பவரை காவல்துறையினர் மடக்கி விசாரணை நடத்தினர். இதில் அனுமதியின்றி 280 எலெக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள் மற்றும் 172 ஜெலட் ...

Read more

ஓசூரில் போலி வரைவோலை வழங்கி கார் திருட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் போலி வரைவோலை வழங்கி உரிமையாளரிடமிருந்து‌ கார் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது‌. ஓசூர் மாருதி நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் கல்சிற்ப தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஹோண்டாசிட்டி காரை விற்பனை செய்வதற்காக தனியார் இணையதள முகவரியில் பதிவு செய்து‌ள்ளார். இணையதளத்தில் விளம்பரத்தை பார்த்த பெங்களூர் கோராமங்கலா பகுதியை சேர்ந்த அஜய் ...

Read more

பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் கைப்பற்றி நடவடிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் அதிரடியாக கைப்பற்றி நடவடிக்கை எடுத்தனர். தமிழக கர்நாடக எல்லைப்பகுதி நகரமான ஓசூர் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாகும். இங்கு தினமும் தொழில் சம்பந்தமாக இரு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதனால் இங்குள்ள பேருந்து நிலையம் தினமும் பரபரப்பாக கா ...

Read more

ஓசூர் அருகே லாரி மீது 2 கார்கள் மோதி விபத்து – 7 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது 2 கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. இன்று அதிகாலை நடந்துள்ள இந்த விபத்தில், காவல்துறை அதிகாரி, அவரது மனைவி மற்றும் மகள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலியாகினர். வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் வேலூர் மாவட்டம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவரும், இவரது குடுமபத்தினர் 12 பேரும் நேற்று ...

Read more

ஓசூர் அருகே ஏழு லட்சம் ரூபாய் கொள்ளை

ஓசூர் அருகே வீட்டின் பூட்டை ‌உடைத்து, பீரோவில் வைத்திருந்த ஏழு லட்சம் ரூபாய் மதிப்பலான நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள பேளகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்வர் லட்சுமிஅய்யா. இவர் தனது குடு்மபத்துடன் வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றனர். பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்த போது, வீ்ட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து ...

Read more

தானியங்கி பண இயந்திரத்தில் கள்ள நோட்டுகள் – பொதுமக்கள் புகார்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் தனியார் வங்கி ஒன்றின் தானியங்கி பண இயந்திரத்தில், கள்ள நோட்டுகள் வந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூளகிரி நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் தனியார் வங்கிக்கு சொந்தமான தானியங்கி பண இயந்திரம் உள்ளது. இங்கு பொது மக்கள் சிலர் பணம் எடுக்கச் சென்றனர். அப்போது அந்த இயந்திரத்தில் 100 ரூபாய் கள்ள ...

Read more

பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்சணப்பள்ளியில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வரட்சனப்பள்ளி கிராமத்திலுள்ள வீடு ஒன்றில் அனுமதியின்றி வெடிமருந்துகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கந்திகுப்பம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அந்த வீட்டை போலீசார் சோதனையிட்ட போது, துப்பாக்கி ரவை தயாரிக்கப்படும் கந்தகம் உள்ளிட்ட 22 கிலோ வெடி மருந்துகள்‌, அ ...

Read more

ஓசூரில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் படுகொலை

கிருஷ்ணகிரி மாவட்டம ஓசூரில் இன்று காலை காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் முன்விரோதம் காரணமாக ஓடஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் நஞ்சுண்டேஸ்வரர் நகரை சேர்ந்தவர் கபூர்அகமது. இவரது மகன் முஸ்தாக் என்பவர்தான் கொலைசெய்யப்பட்டவர். காங்கிரஸ்கட்சி பிரமுகரான இவர் ஓசூர் ராம்நகரில் இரும்புக்கடை நடத்தி வந்தார். இன்று காலை 9 மணியளவில் முஸ்தாக் இங்குள்ள சுங ...

Read more

ஓசூர் அருகே வனத்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்

ஓசூர் அருகே காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்காத வனத்துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த உத்தனப்பள்ளி அருகே உள்ள சானமாவு, போடூர்பள்ளம் காடுகளில் சுமார் 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக அங்குள்ள விவசாய பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், காட்டு யானைகளை வனப்பகுதிக ...

Read more

கிருஷ்ணகிரி அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்தனர்

கிருஷ்ணகிரி அருகே விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டுகள் அமைத்து பிடித்தததால், விவசாயிகளும், பொது‌மக்களும் நிம்மதி அடைந்து‌ள்ளனர். கிருஷ்ணகிரி அருகே உள்ள மேகலசின்னம்பள்ளி, மகராஜகடை, நாரலப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் அங்குள்ள தென்னை மரங்கள் உள்ளிட்ட விவசாய நிலங்களையும் குரங்குகள் சேதப்படுத்தி வந ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top