Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanniyakumari (Page 6)

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி இன்று 4 இடங்களில் முற்றுகை போராட்டம்

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி இன்று 4 இடங்களில் முற்றுகை போராட்டம் நடைபெற்று‌ வருகிறது‌. இதையொட்டி, அங்கு பாதுகாப்புக்காக 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலையில் ஏற்பட்ட கசிவு குறித்தும், மத்திய அமைச்சர் நாராயணசாமியின் முன்னுக்கு பின் முரணான அறிக்கையால் ஏற்பட்ட குழப்பங்கள் குறித்தும் மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அணு ...

Read more

ஆரல்வாய்மொழியில் காற்றாலை மின் உற்பத்தியை துவங்க பொதுமக்கள் கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் காற்றாலை உரிமையாளர்களுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகையை அரசு வழங்கி மீண்டும் காற்றாலை மின் உற்பத்தியை துவங்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் மட்டும் 7000-க்கும் அதிகமான காற்றாலைகள் இருக்கும் நிலையில்‌, காற்றாலை உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 60 விழுக்காடு மின்சாரவாரியத்திற்கு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் காற்றாலை உரிமையாளர்க ...

Read more

நாகர்கோயிலில் சதுரங்க போட்டி ஏராளமானோர் கலந்து கொண்டனர்

நாகர்கோயிலில் நடைபெற்று வரும் மாநில அளவிலான சதுரங்க போட்டியில் ஏராளமான பள்ளி ‌மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் மாநில அளவிலான சதுரங்கபோட்டி நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 30‌0 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்‌றனர். 6 சுற்றுகளாக நடைபெற உள்ள இந்தப்போட்டியில், போட்டியாளர்களுக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்ட ...

Read more

குமரி நன்னடத்தை அதிகாரிக்கு கண்டனம் – பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு

குமரி மா‌வட்‌ட நன்னடத்தை அலுவலர் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணை பணிநீக்கம் செய்ததைக் கண்டித்து பல்வேறு ‌அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில்‌ ஈடுபட்டனர். நாகர்கோவிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்‌ற ஆர்ப்பாட்டத்தில், அதிகாரியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். தமக்கு கீழ் வேலை செய்யும் பெண் அலுவலருக்கு நன்னடத்தை அதிகாரி பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். அதிகாரி மீது புகார ...

Read more

போலியான உரங்களால் கருகிய வாழைகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட போலி உரங்களை பயன்படுத்தியதால், வாழை உள்ளிட்ட விளைபொருட்கள் கருகியதை அடுத்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயசீலன் பாபு. இவர் அங்குள்ள மணலோடை அரசு ரப்பர் கழகத்தில் இருந்து 25 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்து, வாழை, நெல், தென்னை உள்ளிட்ட விவசாயம் செய்து வருகிறார். தற்போது 7 ஆயிரத்து 500 வாழைகள் பயிரிட்டு உள்ள ஜெயசீலன் பாபு, அங் ...

Read more

திரைப்பட இயக்குநர்மீது திருமண மோசடி

பிரபல திரைப்பட இயக்குநர் மீது பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த அனிதா பால்நேசன் என்பவர்தான் இயக்குநர் ரவிதம்பி மீது குற்றம் சாட்டி உள்ளார்‍. நாகர்கோயில் காவல்துறையிடம் அளித்துள்ள புகாரில்‌,ரவிதம்பிக்கும் தமக்கும் 1999ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்‍. தங்களுக்கு 13 வயதில் பெண் ...

Read more

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை

சபரிமலை ஐயப்பன் கோவிலில் திங்கட்கிழமை நடைபெற உள்ள மகரஜோதியை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் குடில் கட்டி தங்கி உள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை பிரசித்தி பெற்றது. கடந்த மாதம் 26-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. பின்னர் மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை கடந்த மாதம் 30 -ஆம் தேதி திறக்கப்பட்டது. 31- ஆம் தேதி முதல் நெய் அபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் துவங்கியது ...

Read more

திருவள்ளுவர் சிலை பராமரிக்க கோரிக்கை – பொன். ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையை பராமரிக்க தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பொன்‌.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளுவர் சிலை உரிய பராமரிப்பு இல்லாமலும், ரசாயன பூச்சு இல்லாமலும் பாதிக்கப்பட்டுள்ளது. சிலையின் கற்கள் சிறிது சிறிதாக அரித்து உடைந்து சுற்றுலா பயணிகள் மீது விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக விரைந் ...

Read more

நாகர்கோவில் தி.மு.க பொதுக்கூட்டம் ரத்து

கன்னியாகுமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை முறையாக பராமரிக்க வலியுறுத்தி நடைபெறுவதாக இருந்த தி.மு.க பொதுக்கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவள்ளுவர் சிலையை பராமரிக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தி.மு.க தலைமை கழகம் தெர ...

Read more

அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட தமிழக மக்கள் தயார் – எம்.பி. கனிமொழி

அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட தமிழக மக்கள் தயாராகி விட்டதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்து‌ள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து‌ கொண்ட திமுக எம்.பி. கனிமொழி, மின்வெட்டு பிரச்சனையால், தமிழக தொழில்து‌றையே பின்னோக்கி சென்று‌ வருவதாக குற்றம்சாட்டினார். அதனால், லட்சக்கணக்கானவர்கள் வேலையிழந்து‌ தவித்து‌ வரும் சூழலில், வரும் நாடாளுமன்ற தேர்தலை தமிழக மக்கள் எதிர்பார்த்து‌ காத்திருப்பதாக தெரிவ ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top