Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanniyakumari (Page 5)

கன்னியாகுமரியில் சூறைகாற்று வீசியதில் ஆயிரக்கண்ககான வாழைகள் முறிந்து லட்சக்கணக்கான ரூபாய் சேதம்

கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரம் பகுதியில் வீசிய சூறைகாற்றில் ஆயிரக்கண்ககான வாழைகள் முறிந்து விழுந்தன. இதில் லட்சக்கணக்கான ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசு நிவாரண உதவி வழங்கவேண்டுமாறு கோரியுள்ளனர். குமரி மாவட்டம் அழகியபாண்டியபுரம் குளத்தியரை, சீதப்பால் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் வாழைத் தோட்டம் சாகுபடி செய்துள்ளனர். இதில் 2500க்கும் மேற்பட்ட வாழைகள் குலைதள்ளி அறுவ ...

Read more

கன்னியாகுமரியில் தேமுதிக தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்க உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேமுதிக தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அடையாள அட்டைகளை மாநில தொழிற்சங்க துணைச்செயலாளர் ஆதிலிங்கபெருமாள் வழங்கினார். குமரி மாவட்டம் முளகுமூடு, கல்லுவிளை ஆகிய பகுதிகளைச்சேர்ந்த தேமுதிக தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு மாநில தேமுதிக தொழிற்சங்க துணைச்செயலாளர் ஆதில ...

Read more

நாகர்கோவிலில் பொறியியல் கல்லூரி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி காவல்நிலைம் முற்றுகை

நாகர்கோவிலில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவியை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவியின் உறவினர்கள் பூதப்பாண்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. கவிதா என்ற மாணவி கல்லூரி விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று முன்தினம் இரவு மாணவி விடுத ...

Read more

கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு ஆபரேசன் ஆம்லா சோதனை நடைபெறுகிறது

கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தமிழகத்தில் தாக்குதல் ‌நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு ஆபரேசன் ஆம்லா என்ற பெயரில் தீவிர சோதனை நடைபெற உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுறுவி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது ...

Read more

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரில் வைக்கப்பட்டிருந்த 1,25,000 ரூபாய் பணம் மாயம்

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரயில்வே ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறில் உள்ள நாகர்கோவில் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் மத்திய ரயில்வே போலீசார் ப ...

Read more

நாகர்கோயில் சென்ற கேப்டன் விஜயகாந்தை காண ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால், ஆத்திரமடைந்த போலீசார் அத்து‌மீறி தடியடி

தமிழக அரசின் அவதூறு‌ வழக்கு ஒன்றில் ஆஜராக நாகர்கோயில் சென்ற கேப்டன் விஜயகாந்தை காண ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால், ஆத்திரமடைந்த போலீசார் அத்து‌மீறி தடியடி நடத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது‌. தமிழக அரசின் அவதூறு‌ வழக்கில் நேரில் ஆஜராவதற்காக தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று‌ நாகர்கோயில் சென்றிருந்தார். அவரைக் காண தேமுதிக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் நீதிமன்றத்தின் முன்பு குவிந் ...

Read more

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறித்துவ தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறித்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்‍.

சென்னை சாந்தோம் கிறித்துவ தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறித்தவர்கள் கலந்து கொண்டனர்‍. கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பிரார்த்தனை பாடல்களை அவர்கள் பாடினர்‍. மக்களின் பாவத்தை போக்குவதற்காக மரித்த இயேசு கிறிஸ்து மக்களின் நன்மைக்காக மீண்டும் உயிர்த்தெழுந்த நாள்தான் ஈஸ்டர் தினம்‍. இந்த நாள் மகிழ்ச்சிக்குரிய நாளாக கிறிஸ்தவர்ள் கொண்டாடி வருகினறனர்‍. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈஸ்டரை முன ...

Read more

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பில் தமிழகத்தின் உள்ள அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தேமுதிக எம்எல்ஏக்கள் விசி,சந்திரகுமார், பார்த்தசாரதி, அனகை முருகேசன், நல்லதம்பி, அருள்செல்வன், செந்தில்குமார் ஆகிய 6 பேரை பழிவாங்கும் நடவடிக்கையாக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக அரசு சஸ்பெண்ட் செ ...

Read more

கன்னியாகுமரி அருகேயுள்ள 7 கிராமங்களில் தொடர்ந்து‌ 3 நாட்களாக நில அதிர்வு

கன்னியாகுமரி அருகேயுள்ள 7 கிராமங்களில் தொடர்ந்து‌ 3 நாட்களாக நில அதிர்வு ஏற்பட்டதில், வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது‌. இதனால், அப்பகுதி பொது‌மக்கள் வீடுகளை காலி செய்து‌விட்டு ஆலயங்களில் தஞ்சமடைந்து‌ள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த வெள்ளிக்காடு, இருதயபுரம், அடையான்கால் உள்ளிட்ட 7 கிராமங்களில், கடந்த 3 நாட்களாக தொடர்ந்து‌ நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த அதிர்வினால், அப்பகுதியில் உள்ள வீடுகளிலிலு ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top