Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanniyakumari (Page 3)

நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மாவட்ட ஆட்சியர் தங்களை தரக்குறைவாக விமர்சிப்பதாக கூறி, நாகர்கோவிலில் சுமார் 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களை அம்மாவட்ட ஆட்சியர் தரக்குறைவாக பேசுவதாக கூறப்படுகிறது. தேர்ச்சி சதவிகிதம் குறைவாக இருப்பதை காரணம் காட்டி, பள்ளி ஆசிரியர்களை, சக ஆசிரியர்கள் முன்பு அவமானப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து, மாவட்ட முழுவ ...

Read more

பத்மாநாபபுரம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் பத்மாநாபபுரம் நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து நகர்மன்ற உறுப்பினர்கள், இங்குள்ள 60அடி உயர நீர்த்தேக்கதொட்டியில் ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பத்மநாபபுரம் நகராட்சியில் 10வது மற்றும் 12வது வார்டு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபற்றி இப்பகுதி பொதுமக்களும், நகர்மன்ற உ ...

Read more

மார்த்தாண்டத்தில் சேவல் சண்டை போட்டி

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் விவேகாணந்தர் நற்பனி மன்றத்தின் 8வது ஆண்டு விழாவை முன்னிட்டு சேவல் சண்டை போட்டிகள் நடைபெற்றது. மார்த்தாண்டத்தில் நடைபெற்ற இச்சேவல் சண்டை போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 2000ம் மேற்பபட்ட சேவல்கள் பங்கேற்றன. 28 தளங்கள் அமைத்து இப்போட்டிகள் நடத்தப்பட்டன. சேவல்கள் ஒன்றுடன் ஒன்று ஆக்ரோஷமாக மோதிக்கொண்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழகத்தின் ...

Read more

நாகர்கோவில் அருகே சந்தன மரக்கட்டைகளை கடத்திய கும்பல் கைது

நாகர்கோவில் அருகே சந்தன மரக்கட்டைகளை கடத்தி கேரளாவிற்கு கடத்த முயன்ற 6பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ராஜாக்கமங்கலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கேரளா பதிவுஎண் கொண்ட ஆட்டோவை மடக்கி போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பிலான சந்தனகட்டைகள் ஆட்டோவில் மறைத்து வைக்கப்பட்ட ...

Read more

நாகர்கோவிலில் பொதுமக்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகை

இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு போலீசார் உடந்தையாக இருப்பதாக கூறி, பொதுமக்கள் நாகர்கோவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கொல்லம் நீண்டகரையை சேர்ந்த ஆண்டனி என்பவர் புத்தாண்டை கொண்டாடுவதற்காக கன்னியாகுமரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அதே ஊரை சேர்ந்த சிலருக்கும், ஆண்டனிக்கும் இடை ...

Read more

கன்னியாகுமரியில் பாஜகவினர் மீது தொடர்ந்து தாக்குதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பாஜகவினர் தாக்கப்பட்டு வருகின்றனர். அக்கட்சியின் மாநில வர்த்தக அணி துணைச்செயலாளரை மர்ம கும்பல் வழிமறித்து தாக்கியுள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியை அடுத்த தக்கலை பகுதியில் பேக்கரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழி்ல் செய்து வருபவர் ஜெயச்சந்திரன். இவர் பாஜக மாநில வர்த்தக அணி துணைச்செயலாளராக இருந்து வருகிறார். நேற்று மாலை இவர் தனது தோட்டத்துக்கு சென்றுவிட்ட ...

Read more

நாகர்கோவிலில் தேமுதிக பொதுக்கூட்டம் நடைபெற்றது

நாகர்கோவிலில், தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து கேப்டன் விஜயகாந்த் ஆணைக்கிணங்க தேமுதிக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் மத்திய மாநில அரசுகளால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இம்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ரப்பர் பூங்கா அமைக்கப்படும் என, பல்வேறு அரசியல் கட்சியினர் வாக்குறுதிகள் கொடுத்தும் அந்த திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆரல்வாய் மொழி முதல் களியக்காவிளை வரையிலான ...

Read more

நாகர்கோயில் அருகே தியாகி சிதம்பரநாதனின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டிகள் நடைபெற்றது

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் அருகே மொழிப்போர் தியாகி சிதம்பரநாதனின் 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டிகள் நடைபெற்றது. நாகர்கோயில் அடுத்துள்ள பூச்சி விளாகம் பகுதியில் மொழிப்போர் தியாகி சிதம்பரநாதனின் 100-வது பிறந்த தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டியை வர்த்தக காங்கிரஸ் நிர்வாகி வசந்தகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்போட ...

Read more

தக்கலையில் நடைபெற்ற தேமுதிக பொது‌க்கூட்டத்தில் பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது‌

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில் பொது‌க்கூட்டம் தக்கலையில் நடைபெற்றது‌. இதில், ஏராளமான ஏழை பெண்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது‌. கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் தினேஷ் தலைமையில் தேமுதிகவின் பொது‌க்குழு கூட்டம் நடைபெற்றது‌. இதில் அனைத்து மாவட்ட‌ கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து‌ கொண்டனர். வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து‌ விவாதிக்கப்பட்டது‌. இதனிடையே, கிறிஸ்து‌மஸ் பண்டிகை வர ...

Read more

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்கொள்ளையில் ஈடுபட்டு வந்த 4 கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்து 60பவுன் நகைகளை மீட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், மார்த்தாண்டம், கருங்கல் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வந்தன. இந்த வழக்குகளில் கொள்ளையர்கள் பிடிபடாமல் இருந்து வந்தனர். இதில் நாகர்கோவில் சைமன் பகுதியை சேர்ந்த 2 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை நடந்துள்ளது. இதுகுறித்து ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top