Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanchipuram (Page 4)

செங்கல்பட்டு அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

செங்கல்பட்டு அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதி்ல் ஒரு லட்சத்து 7ஆயிரத்து 630 ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 12 இடைத்தரகர்களிடம் இரவு முழுவதும் விசாரணை நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை சென்னை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் திடீர் சோதனையி ...

Read more

செங்கல்பட்டு ரயில்நிலையத்தில் ஜல்லி கொட்டும் இயந்திரம், தண்டவாளத்தின் நடுவே தடம் புரண்டதால் ரயில்கள் தாமதம்

செங்கல்பட்டு ரயில்நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜல்லி கொட்டும் இயந்திரம், தண்டவாளத்தின் நடுவே தடம் புரண்டதால், சென்னைக்கு வரும் தென்மாவட்ட ரயில்கள் தாமதமாக வந்து‌ சேர்ந்தது‌. செங்கல்பட்டு ரயில்நிலையத்தில், தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஈடுபட்டிருந்த ஜல்லி கொட்டும் ராட்சஷ இயந்திரம், தண்டவாளத்தின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், தென்மாவட்டங்களில் இருந்து செங்க ...

Read more

ஆவடி அருகே பட்டா பெயர் மாற்றம் செய்து தருவதற்கு லஞ்சம் வாங்கிய கிராம நி்ர்வாக அதிகாரி கைது

சென்னையை அடுத்த ஆவடி அருகே பட்டா பெயர் மாற்றம் செய்து தருவதற்காக 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நி்ர்வாக அதிகாரியை லஞ்சஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் தனது உறவினரான ரவி என்பவருடன் சேர்ந்து ரியல்எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் இவர் ஆவடி அருகே மோரை என்ற கிராமத்தில் வாங்கிய நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக சம்பந ...

Read more

செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 11 சிறுவர்கள் தப்பியோடியுள்ளனர்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிறுவர்கள் 11 பேர் தப்பியோடியுள்ளனர். செங்கல்பட்டு நகர் பகுதியில் சிறுவர் சீர்திருத்த பள்ளி உள்ளது. இங்கு, பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 சிறுவர்கள், சீர்திருத்த பள்ளியின் மதில் சுவரை இடித்துவிட்டு தப்பியோடியுள்ளனர். இதையறிந்த, ...

Read more

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் தே.மு.தி.க தமிழகம் முழுவதும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழகம் முழுவதும் தே.மு.தி.க செயல்வீரர்களின் கூட்டம் நடைபெற்றது நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயார்படுத்திடகூட்டத்தை நடத்திடவேண்டும் என்று கேப்டன் விஜயகாந்த் தேமுதிகவினருக்கு உத்தரவிட்டார். அவரது ஆணைக்கிணங்க காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், உளுந்தூர் பேட்டை மாநாடு பற்றியும் ஆலோசிக்க ...

Read more

காஞ்சிபுரம் பார்சல் லாரி ஒன்று‌ தீபிடித்து

காஞ்சிபுரம் அருகே மும்பையைச் சேர்ந்த பார்சல் லாரி ஒன்று‌ திடீரென தீபிடித்து கொண்டதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. மும்பையில் இருந்து விளையாட்டு பொருட்கள், எலக்டாரனிக் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னைக்கு சென்றுகொண்டிருந்தது. காஞ்சிபுரம் அருகே வெள்ளைகேட் பகுதியில் வந்தபோது திடீரென லாரியின் பின்பக்கம் தீபிடித்து எரிந்ததாக கூறப்பட ...

Read more

கவுல்பஜார் ஊராட்சி தேமுதிக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் கவுல்பஜார் ஊராட்சி தேமுதிக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தேமுதிக 9ம் ஆண்டு துவக்க விழா மற்றும் கேப்டன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கவுல்பஜார் மாங்காளி அம்மன் கோவில் அருகே தேமுதிக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினரும், காஞ்சி வடக்கு மாவட்ட கழக ...

Read more

மாயமான பெண் காவல் உதவி ஆய்வாளர் கலைவாணியின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது

கடந்த 2010ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் பாதுகாப்பு பணிக்கு சென்று மாயமான பெண் காவல் உதவி ஆய்வாளர் கலைவாணியின் எலும்புக்கூடு நேற்று மாலை கண்டுபிடித்து காஞ்சிபுரம் அருகே மீட்கப்பட்டுள்ளது. கலைவாணியின் கள்ளக்காதலர் வெங்கடேசன் அளித்த தகவலின் பேரில் காஞ்சிபுரம் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் உள்ள பாலாற்று மணலில் அவரது எலும்புக்கூடு கண்டறியப்பட்டுள்ளது. மூக்குத்தி உள்ளிட்ட அவர் அணிந்தி ...

Read more

திருப்போரூர் ஒன்றியம் தேமுதிக சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது‌.

திருப்போரூர் ஒன்றியம் தேமுதிக சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது‌. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் நடைபெற்ற தேமுதிக ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட செயலாளரும், செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏவுமான அனகை முருகேசன் கலந்து‌ கொண்டு சிறப்புரையாற்றினார். தேமுதிக நிறு‌வனத்தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடுவது‌ குறித்து‌ம், புதிய உறு‌ப்பினர்களை சேர்த்து‌ கட்சியை பலபடுத்த ...

Read more

விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாமகவினரின் வன்முறை

விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாமகவினரின் வன்முறை காரணமாக அரசு பேருந்துகள் சேவை குறைக்கப்பட்டுள்ளதால் வெளியூர் செல்லும் பயணிகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரிதவித்தனர். மரக்காணம் பகுதியில் நடந்த கலவரம் பற்றி சிபிஐ விசாரணை நடத்த கோரி தடையை மீறி நேற்று விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது கட்சியின் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு எதிர ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top