Home
You Are Here: Home » News » Tamil Nadu » Kanchipuram (Page 2)

மதுராந்தகம் அருகே சாலை விபத்து – 6 பேர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் புறவழிச்சாலையில் இன்று காலை 7 மணியளவில் செஞ்சியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த காரும், அதற்கு முன்னால் தனியார் பேருந்தும் வந்துகொண்டிருந்தன. அப்போது இந்த வாகனங்களுக்கு பின்னால் வந்து ...

Read more

காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக வைக்கப்பட்ட பேனர் கடைக்கு சீல்

காஞ்சிபுரத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக வைக்கப்பட்ட பேனர் விவகாரம் தொடர்பாக பேனர் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மக்களவை தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை வரும் 16ம் தேதிதான் நடைபெற உள்ளது. ஆனால் ஓட்டுஎண்ணிக்கை நடைபெறுவதற்கு இன்னும் 15 நாட்கள் இருக்கும் நிலையில், காஞசிபுரம் ம்ககளவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றுவிட ...

Read more

திருக்கழுக்குன்றம் அருகே வனப்பகுதியில் தீ விபத்து

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சுமார் 5 ஏக்கர் காப்புக்காடு முற்றிலும் எரிந்து சேதமானது. திருக்கழுக்குன்றம் அடுத்துள்ள எடையூர் கிராமத்தில் வனத்துறைக்குச் சொந்தமான காப்புக்காட்டில் பல அரியவகை மூலிகைச் செடிகளும், தைல மரங்களும் உள்ளன. இந்நிலையில் இங்கு திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்‌ தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித் ...

Read more

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தே.மு.தி.க நிர்வாகிகளுடன் கேப்டன் விஜயகாந்த் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டிய முறை குறித்து காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தே.மு.தி.க நிர்வாகிகளுடன் கேப்டன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை கழகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற கேப்டன் விஜயகாந்த், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிர்வாகிகள் உடனடியாக தேர்தல் பணிகளை துவங்க வேண்டும் என்று அறிவுறுத்தினா ...

Read more

அதிமுக வேட்பாளர் கணவர் மீது நில அபகரிப்பு குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதத்தின் கணவர் மீது கோவில் சொத்துக்களை அபகரித்ததாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய தலைவராக இருப்பவர் மரகதம். இவர் காஞ்சிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் குமரவேல், தையூர் ஊராட்சிமன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். குமரவேல் மீது இப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடங்க ...

Read more

பெண் பொறியாளர் கொலை – கைது செய்யப்பட்ட 2 பேரிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி

சென்னையை அடுத்த சிறுசேரியில் பெண் பொறியாளர் கொலை வழக்கில், சென்னையில் கைது செய்யப்பட்ட 2 பேரிடம் 7 நாட்கள் விசாரணை நடத்த சிபிசிஐடி காவல்துறையினருக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, அவர்கள் இருவரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று‌ ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் இருவரையும், வரும் 12-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, சிபிசிஐடி காவல்துறை சார்பில ...

Read more

மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ரோசைய்யா அறிவுரை

ஆசிரியர்கள் கற்றுத்தரும் நன்னடத்தைகளை பின்பற்றி நல்ல மாணவர்களாக திகழ்ந்து தேச நலனுக்காக பாடுபட வேண்டும் என்று பள்ளி மாணவிகளுக்கு ஆளுநர் ரோசைய்யா அறிவுரை வழங்கியுள்ளார்‍. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள புனித மரியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பவளவிழாவில் ஆளுநர் ரோசைய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்‍. அப்போது பேசிய அவர்‌, மாணவர்கள்‌, ஆசிரியர்கள் கற்றுத்தரும் நன்னடத்தைகளை பின்பற்றி நல்ல ...

Read more

சோழிங்கநல்லூர் அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவன்‌ மீது துப்பாக்கி சூடு – காவல் நிலையம் முற்றுகை

சோழிங்கநல்லூர் அருகே போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுவன்‌, துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவதை கண்டித்து காவல் நிலையம் முற்றுகையிடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் அடுத்த வெட்டுவாங்கேணியில் மகாத்மா காந்தி தெருவை சேர்ந்தவர் சபீனா. இவரது மகன் தமீம் அன்சாரியை, திருட்டு வழக்கு தொடர்பாக விசாரிக்க நீலாங்கரை காவல்துறையினர் அழைத்து சென்றனர். விசாரணையின்போது, காவல்துறை ஆய்வாளர் புஷ்பராஜ் துப ...

Read more

திருப்போரூர் அருகே 10 கோடி ரூபாய் செலவில் கிரிக்கெட் மைதானம் திறப்பு

திருப்போரூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் சுமார் 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானத்தை இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே இயங்கிவரும் தனியார் பொறியியல் கல்லூரியில் கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில்தேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மைதானத்தை ரிப்பன் வெட ...

Read more

காஞ்சிபுரத்தில் ரேஷன் பொருட்கள் வினியோம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரத்தில் ரேஷன்கடை திறந்து ஒராண்டு காலமாகியும் பொருட்கள் வினியோம் செய்யாததை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 44வது வார்டு புன்னிய கோடீஸ்வரர் நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி இருந்ததால், கடந்தாண்டு அப்பகுதியில் ரேஷன் கடை கட்டப்பட ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top