Home
You Are Here: Home » News » Tamil Nadu » Erode (Page 6)

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் – பிப். 24ந் தேதி 2வது‌ கட்ட முகாம்

போலியோ நோய் தடுப்பு தினத்தையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள ஆரம்ப சுகாதாரா நிலையத்தில், சுகாதராத்துறை அமைச்சர் விஜய் பங்கேற்று, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுத்து முகாமை தொடங்கி வைத்தார். அபபோது, இது போன்று தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் முகாம்களில் சொட்டு மருந்து கொடுக்கும் பணி நடந்து வ ...

Read more

ஈரோடுக்குள் நுழைய ராமதாசுக்கு எதிர்ப்பு

அனைத்து சமுதாய கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஈரோடு வந்த ராமதாசை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்தததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.‌ ஆதிக்க சாதி எதிர்ப்பு கூட்டியக்கத்தின் சார்பில் 50 க்கும் மேற்‌பட்டோர் கருப்புச் சட்டை அணிந்து ஈரோடு பேருந்துநிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், காதல் திருமணத்திற்கும் ‌எதிராக தொடர்ந்து பேசி வரும் பா.ம.க நிறுவனர் ராம ...

Read more

விஜயகாந்த் மீதான பொய்வழகு,மின்வெட்டு கண்டித்து ஆர்ப்பாட்டம்

தே.மு.தி.க நிறுவனத்தலைவர் விஜயகாந்த் மீது பொய் வழக்கு போடுவதைக் கண்டித்து அந்தக்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்‍. ஈரோடு மாவட்டம் சென்னிமலையி்ல் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்‌, தமிழக அரசைக்கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொ ...

Read more

ஈரோடில் அனுமதியின்றி இயங்கிய 3 சாயப்பட்டறைகள் அகற்றம்

ஈரோடில் அனுமதியின்றி இயங்கி வந்த 3 சாயப்பட்டறைகளை, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அகற்றினர். சூளை பகுதியில் இந்த சாயப்பட்டறைகள் முறைகேடாக இயங்கி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்தனர். விசாரணையில் அனுமதி பெறாதது உண்மை என தெரிய வந்ததையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் சாயப்பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டன. பட்டறையிலிருந்து கழிவுநீரை வெளிக் கொண்டு செல்லும் குழாய்களும் அடித்து உடைக்கப்பட்ட ...

Read more

பாகிஸ்தானை கண்டித்து கொடி எரிப்புப் போராட்டம்

இந்திய ராணுவ வீரர்களை கொன்ற பாகிஸ்தான் மீது உலக நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பாக ஈரோட்டில் கொடி எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். உலக நாடுகள் பாகிஸ்தானுடனான உறவைத ...

Read more

பாரியூர் கோவிலில் குண்டம் திருவிழா

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர். அதிகாலை 3 மணியளவில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. இதில் ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாது அதன் சுற்று வட்டார மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் 15 நாட்கள் விரதம் இருந்து கு ...

Read more

கார் மோதி 10ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, பாதிரியார்கள் ஓட்டி வந்த கார் மோதி, 10ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், கார் மற்றும் பேருந்துகளை கல்வீசி தாக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுதது, அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தாளவாடியில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில், பாதிரியார்கள் டேவிட், லூர்துராஜ் ஆகியோர் கார் ஓட்டிப் பழகிக் கொண்டிருந்தனர். அப்போது, மைதானத்தில் நடந்து சென்று க ...

Read more

யானை தாக்கி விவசாயி பலி

சத்தியமங்கலம் கடம்பூர் வனப்பகுதியில் விவசாயி ஒருவரை யானைக் கூட்டம் மிதித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சத்தியமங்கலம் கடம்பூர் வனப்பகுதி இருட்டிப்பாளையம் பெரியதொட்டியைச் சேர்ந்த ரங்கசாமி என்ற விவசாயியின் நிலத்தில் யானைக்கூட்டம் ஒன்று புகுந்தது. அவர் தன்னுடைய நிலத்தில் மக்காச்சோளம்‌, ராகி, குச்சிக்கிழங்கு ஆகியவற்றை பயிரிட்டிருந்தார்‍.யானைக்கூட்டம் நிலத்தில் புகுந்ததை கண்டதும் ...

Read more

தே.மு.தி.க போராட்ட அறிவிப்பு

காவிரி ஆற்றில் தோல் மற்றும் சாயக் கழிவுகளை கலப்பதை தடுக்காவிட்டால் தேமுதிக தடுக்கும் போராட்டத்தில் ஈடுபடும் என்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வி.சி.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடையன்காட்டுவலசு அரசு மேல்நிலைப்பள்ளியில் 14லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய சுகாதார வளாகத்தை அவர் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி ...

Read more

கூட்டுறவு பணியாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தம்

தொடக்க‌ கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க ஊழியர்கள் 16 அம்ச கோரிக்கைக‌ளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு வ.உ.சி பூங்காவில் இதையொட்டி‌ கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்து 30 ரேஷ‌ன் கடை ஊழியர்களும், நூற்று 57 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்களும் கலந்து கொண்டனர். இதனால் அங்குள்ள அனைத்து ரேஷன் கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஓய்வூதியம் மற்றும் மருத ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top