Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dindigul (Page 7)

திண்டுக்கல்லில் மாநில அளவிலான டென்னிஸ்

திண்டுக்கல்லில் பதினாறு வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகள் துவங்கியுள்ளன. திண்டுக்கல் யூனியன் கிளப் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை, கரூர், கோவை, ஈரோடு, சேலம்‌, புதுச்சேரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிலிருந்து மாணவ மாணவிகள் கலந்து கொள்கின்றனர்‍. வரும் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப்போட்டியில் 16 வயதுக்குட்பட்ட சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ...

Read more

வாலிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் அருகே வாலிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. திண்டுக்கல்லில் தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்த பலவேந்திரன் கடந்த 2011 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்‍.இது தொடர்பாக பலவேந்திரனின் நண்பர்கள் மருதுபாண்டி, கதிரேசன்‌,விக்னேஷ் என்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்‍.இந்த கொலை சம்பவம் தொடர்பாக திண்டுக்க ...

Read more

திண்டுக்கலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் – வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை

திண்டுக்கல் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயம் செய்து கடும் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 25ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்த ...

Read more

பழனியில் தைப்பூசத் திருவிழா தொடங்கியது

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனி மலை கோயிலில் நடைபெறும் தைப்பூசத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பழனி மலை அடிவாரத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் இன்று தைப்பூச திருவிழா தொடங்கியது. கொடியேற்றம் முடிந்தவுடன், இரவில் ரத ஊர்வலம் நடைபெற உள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத் ...

Read more

நாப்கின் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து

திண்டுக்கல் அருகே தனியார் நிறுவனம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பாலானது. திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துறை பகுதியில் இயங்கிவரும் தனியார் நாப்கின் தயாரிப்பு நிறுவனத்தில் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் சேமிப்புகிடங்குப்பகுதியில் திடீரென தீப்பற்றியுள்ளது. மளமளவென நிறுவனத்தின் அனைத்து இடங்களுக்கும் தீ வேகமாகப் பரவியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத ...

Read more

கோழிக்குஞ்சுகளை ஏற்றிச் சென்ற லாரியில் தீ

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே, கோழிக்குஞ்சுகளை ஏற்றிச் சென்ற லாரியில் தீப்பிடித்து, 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் பலியாகின. கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு குஞ்சுகளை ஏற்றிச் சென்ற லாரி, பழனியை அடுத்த தாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென லாரியில் தீபிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் லாரியை, சாலை ஓரத்தில் நிறுத்தினார். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் ...

Read more

ஒட்டன்சத்திரத்தில் தேமுதிக பொங்கல் விழாவில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

திண்டுக்கல் மேற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றியங்களில் பொங்கல் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க, தொப்பம்பட்டி ஒன்றியத்தில் குங்குமனூரில் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கும, ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் அம்பிளிக்கையில் 200 க்கும் மேற்பட்டவர்களுக்கும் பச்சரிசி, மண்டைவெல்லம்‌, மஞ்சள்‌, உலர் திராட்ச ...

Read more

திண்டுக்கல்லில் பணிகள் நடைபெறவில்லை – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ குற்றச்சாட்டு

தமிழக சட்டசபையில் திண்டுக்கல் தொகுதிக்கு நிறைவேற்றப்படுவதாக உறுதிமொழி அளிக்கப்பட்ட எந்த பணிகளும் நடைபெறவி்ல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி குற்றஞ்சாட்டி உள்ளார். திண்டுக்கல்லில் பேசிய அவர், 2007 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை சட்டசபையில் திண்டுக்கல் தொகுதிக்காக வைக்கப்பட்ட கோரிக்கைகளில் நிறைவேற்றப்படுவதாக உறுதிமொழி அளிக்கப்பட்ட பணிகளில் ஓருரி பணிகளை தவிர எந்த பணிகளும் நடைபெற ...

Read more

மாநில அளவிலான கால்பந்து போட்டி

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான பைக்கா கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் திருவள்ளூர் அணியும், பெண்கள் பிரிவில் சேலம் அணியும் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. திண்டுக்கல்லில் மாநில அளவிலான பைக்கா கால்பந்து போட்டி, பளுதூக்குதல் மற்றும் ஜூடோ போட்டிகள் நடைபெற்றது. கால்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் திருவள்ளூர் அணியும், பெண்கள் பிரிவில் சேலம் அணியும் வெற்றி பெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக விளையாட ...

Read more

கத்திமுனையில் மிரட்டி துணிகரம் கொள்ளையர்கள் கைவரிசை

திண்டுக்கல் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் மிரட்டி 25 சவரன் நகை மற்றும் 14 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ம.மு. கோவிலூர் கிராமத்தில் வசிப்பவர் பாலசுப்பிரமணியன். இவர் கிராம நிர்வாக அலுவராக பணிபுரிந்து வருகிறார். அதிகாலை பாலசுப்பிரமணியன் வேலைக் சென்ற பின்னர், இவரது மனைவி சாந்தி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top