Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dindigul (Page 5)

நிலக்கோட்டை அருகே பழமையான ஆலமரம் கோவில் கடைகள் மீது சாய்ந்ததில் இரண்டு பேர் பலி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பழமையான ஆலமரம் கடை மீது சாய்ந்ததில் பெண் ஒருவர் உள்பட இரண்டு பேர் பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் பிரசி்த்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள கடைகளுக்கு நேற்று வழக்கம்போல பக்தர்கள் வந்து பொருட்களை வாங்கினர். அப்போது இங்குள்ள 200 ஆண்டுகால பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று திடீரென்று ...

Read more

கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

தொடர் விடுமுறையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகல் நேரத்தில் வெப்பம் குறைந்து குளுமையான சூழல் நிலவுகிறது. இரவில் மிதமான பனியுடன் கூடிய சில்லென்ற சூழல் நிலவுவதாலும், இந்த இதமான தட்பவெப்ப நிலையை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர். பில்லர்ராக், பசுமைப்பள்ளதாக்கு, படகுக்குழாம், செட் ...

Read more

திண்டுக்கல் டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியி்ல் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

திண்டுக்கல்லில் நடைபெற்ற டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியி்ல் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் சென்னை அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. திண்டுக்கல் மாவட்ட டேக்வாண்டோ சங்கம்சார்பில் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் கடந்த 4 நாட்களாக நடந்து வந்தது. இதி்ல் 2400 வீரர்களும் வீராங்கனைகளும் கலந்துகொண்டு விளையாடினர். 3 பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டிகள் 16 சுற்றுகளாக ...

Read more

அதிமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே அதிமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில கழக பொருளாளர் ஏ.ஆர். இளங்கோவன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் ஆணைக்கிணங்க ஆளும் அதிமுக அரசின் மக்கள் விரோதபோக்கு, கூட்டுறவுசங்க தேர்தல் முறைகேடுகள் மற்றும் தொடர்ந்து பொய் வழக்குகள் போடுவது ஆகியவற்றை கண்டித்து த ...

Read more

திண்டுக்கல்லில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது.

திண்டுக்கல்லில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக கடும் வெயிலில் அவதிப்பட்டு வந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த மழைக்காலத்தில் மழை பெய்யவில்லை. இதனால் அங்கு வறட்சி நிலவி வருகிறது. இதனால் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையி் கடந்த சில நாட்களாக வெயில் அனலாக தகித்து மக்களை வாட்டியது. இதனால் பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று பிற்பகல் திடீரென்ற ...

Read more

கொடைக்கானலில் வரும் 19ம் தேதி கோடை விழா தொடங்குகிறது.

கொடைக்கானலில் வரும் 19ம் தேதி கோடை விழா தொடங்குகிறது. இதையொட்டி அங்கு நடைபெறும் மலர்க் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு வண்ண மலர்கள் இடம்பெறுகின்றன. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் சீசன் தொடங்கிவிட்டது. இதையடு்த்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. மேலும் தற்போது கொடைக்கானலில் சாரல்மழை பெய்வதால் சீசன் ஜோராக உள்ளது. நாடுமுழுவதும் இருந் ...

Read more

தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Delete தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பல்வேறு துறைகளுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதமும் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில் தமிழகத்தில் தஞ்சை, திண்டுக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இது தவிர ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தபட ...

Read more

திண்டுக்கல் கடும் வெயில் காரணமாக மாம்பிஞ்சுகள் உதிர்வதால் விவசாயிகள் கவலை அடைந்து‌ள்ளனர்

திண்டுக்கல் அருகே கடும் வெயில் காரணமாக மாமரத்தில் இருந்து‌ மாம்பிஞ்சுகள் உதிர்வதால் இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் மிகவும் குறைவாக இருக்கும் என்று‌ விவசாயிகள் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம்,சாணார்பட்டி,கோபால்பட்டி,போன்ற பகுதிகளில் பல்வேறு‌ வகையான மாமரங்கள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. தற்போது‌ இப்பகுதியில் வெயில் கடுமையாக சுட்டெரிக்கிறது‌. நிலத்தடி நீரும் மிகவும் குறைந்து‌ விட்டது‌.கடும் வறட்சி க ...

Read more

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பில் தமிழகத்தின் உள்ள அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தேமுதிக எம்எல்ஏக்கள் விசி,சந்திரகுமார், பார்த்தசாரதி, அனகை முருகேசன், நல்லதம்பி, அருள்செல்வன், செந்தில்குமார் ஆகிய 6 பேரை பழிவாங்கும் நடவடிக்கையாக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக அரசு சஸ்பெண்ட் செ ...

Read more

திண்டுக்கல் வெடிகுண்டு வீசி தாக்குதல் பத்திரிக்கையாளர்கள் உட்பட 9 பேர் காயம்

திண்டுக்கல்லில் தந்தையை கொன்றவரை பழிவாங்க, வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் உட்பட 9 பேர் காயமடைந்தனர் திண்டுக்கல் கரட்டழகன்பட்டியை சேர்ந்த பெரியசாமியின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒன்றிய கவுன்சிலர் முத்துபாண்டி, வழக்கு விசாரணைக்காக திண்டுக்கல் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிவிட்டு காரில் திரும்பினார்‍. அப்போது, அங்கு மறைந்திருந்த சிலர் முத்துபாண்டியின் கா ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top