Home
You Are Here: Home » News » Tamil Nadu » Dindigul (Page 3)

திண்டுக்கல் மாவட்டத்தில் காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டத்தில் காரில் கடத்தி வரப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்‍. திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வடமதுரை காவல் துறையினர்‌ வாகன சேதனையில் ஈடுபட்டிருந்தனர்‍. அப்போது திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த காரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனை செய்தனர்‍. சோதனையில் அந்த காருக்குள் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 150 கி ...

Read more

திண்டுக்கல் மாவட்டத்தில் தக்காளி விலை வீழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம், வடமதுரை ஆகிய பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். இங்குள்ள அய்யலூர் சந்தையில் ஏலம் விடப்படும் தக்காளிகள் திருச்சி, தஞ்சை, கும்பகோணம், சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப ...

Read more

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே கஞ்சா கடத்தியவர்கள் கைது

திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 12 கிலோ கஞ்சா கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர், ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ஈரோட்டில் இருந்து திண்டுக்கல்லுக்கு ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் துறையினர் திண்டுக்கல் ரெயில் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ரெயில ...

Read more

முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய ஆளுமை திறனை இழந்து விட்டடார் – தமிழருவி மணியன்

மாநிலங்களவை தேர்தல் வேட்பாளரை அறிவிப்பதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய ஆளுமை திறனை இழந்து விட்டதாக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்‍. திண்டுக்கல் மாவட்டத்தில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியன்‌, மாநிலங்களவை தேர்தலுக்கு தங்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் ஒருவரை ...

Read more

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூன்றரை கோடி ரூபாய்

தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மூன்றரை கோடி ரூபாயை எட்டியுள்ளது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து‌ பகுதிகளிலிருந்து‌ம் ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வருகை புரிந்து‌ சுவாமி தரிசனம் செய்து‌ சென்றனர். பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனை செலு‌த்து‌ம் விதமாக மலை மீது‌ம், மலை அடிவாரத்தில் உள்ள உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் போன்றவற்றை க ...

Read more

திண்டுக்கலில் முதன் முறையாக குதிரை ரேக்ளா பந்தையம் நடைபெற்றது

திண்டுக்கலில் முதன் முறையாக குதிரை வளர்ப்போர் சங்கம் சார்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தையத்தில் உறையூரை சேர்ந்த குதிரை முதல் இடத்தை பிடித்தது. திண்டுக்கல் அருகே சிறுமலை பிரிவு பாதையில் முதன் முறையாக இந்த பந்தையம் நடைபெற்றது. நத்தம் சாலையில் உள்ள சிறுமலை பிரிவில் இருந்து சிறுமலை அடிவாரம் வரை 12 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டியில் திண்டுக்கல்‌, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 14 ரேக்ளா ...

Read more

பல்வேறு அரசியல் கட்சிகளின் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேமுதிகவில் இணைந்தனர்

திமுக, அதிமுக மற்றும் அரசியல் கட்சிகளின் உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் அக்கட்சியிலிருந்து விலகி தேமுதிகவில் இணைந்தனர். திண்டுக்கல் மேற்கு மாவட்ட சார்பில் தேமுதிக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் எஸ்ஆர்கே பாலசுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை நிலைய செயலாளரும், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான ப. பார்த்தசாரதி சிறப்பு விருந்தினாக பங்கேற்று, உளுந்தூர்பேட்டை மாந ...

Read more

கொடைக்கானலில் பீன்ஸ் விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் மகிழச்சி

கொடைக்கானலில் பீன்ஸ் விளைச்சல் அமோகமாக நடைபெற்று வருவதால் விவசாயிகள் மகிழச்சியடைந்துள்ளனர். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் காரட், பீன்ஸ், காளிபிளவர், முட்டைகோஸ், பீட்ரூர், பட்டர் பீன்ஸ் போன்றவற்றை பயிரிடப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் வெளிசந்தை மற்றும் வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பீன்ஸ் விளைச்சல் அங்கு அமோகமாக நடைபெற் ...

Read more

பழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு – பூம்புகார் கண்காட்சி

பூம்புகார் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு நிறுவனமான, தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் கைவினைப்பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை, பழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு துவங்கப்பட்டுள்ளது. பழனியில் தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு மலை அடிவாரப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கைவினைப்பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையை, பழனி சுகாதார பணிகள் துணை இயக்குநர் வரதராஜன் துவக்கி வைத்தார். ...

Read more

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் பலி

பழனிக்கு பாதயாத்திரை சென்ற ஊட்டி பக்தர்கள் மீது தனியார் பேருந்து மோதியது. இதில் 2பேர் பலியாகினர். இருவர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பழனி தண்டாயுதபாணி கோவிலில் நடைபெற உள்ள தைப்பூச திருவிழாவில் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து பாதயாத்திரையாக நடந்து செல்கின்றனர். இதில் இரவு நேரத்தில் பக்தர்கள் சாலை விபத்தில் சிக்கி பலியாவது தொடர்ந்து நடந்து வருகிற ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top