Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore (Page 6)

கடலூரில் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா

கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள ராமலிங்க சுவாமி சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது. வடலூரில் அமைந்துள்ள ராமலிங்க அடிகளார் சத்திய ஞான சபையில் 142 ஆண்டுகளாக தொடந்து கொண்டாடப்படும் தைபூசத் திருவிழா கோலாகலமாக துவங்கி உள்ளது. துவக்க விழாவில் ராமலிங்க அடிகளாரின் திரு அருட்பா பாடல்களின் பின்னணியில் கொடியேற்றம் நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ...

Read more

கடலூரில் சூரிய ஒளி மூலம் மின்சக்தி தயாரிக்கும் திட்டம்

கடலூர் மாவட்டம், நெய்வேலி இரண்டாம் அனல்மின் நிலைய விரிவாக்கத்தில் முதல் மற்றும் 2-வது உற்பத்தி பிரிவில் இந்த ஆண்டு மின் உற்பத்தி தொடங்கும் என அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் குடியரசு தினவிழா நடைபெற்றது. இதில் அந்நிறுவனத்திள் தலைவர் சுரேந்திர மோகன் பங்கேற்று தேசிய கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனையடு்த்து அவர் பேசுகையில், நெய்வேலி இரண்டாம் ...

Read more

கடலூரில் பா.ம.க – அ.தி.மு.கவினர் மோதல்

கடலூரில் அதிமுக மற்றும் பாமக இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. கடலுரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அதிமுகவினர் டாகடர் ராமதாஸை பற்றி தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டிருந்த பாமகவினர் அதிமுகவினர் மீது கல் வீசியும் செருப்பு வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்‍. பதிலுக்கு அ.தி.மு.கவினர் மீது பா.ம.கவினரும் தாக்குதலில் இறங்கினர். அப்போது ...

Read more

கடலூர் மாவட்டத்தில் மதாசுக்கு தடை

கடலூர் மாவட்டத்திற்குள் நுழைய பா.ம.க நிறுவனர் ராமதாசுக்கு இரண்டு மாதங்களுக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட ஆட்சியர் கிர்லோஸ்கமார் பிறப்பித்துள்ள உத்தரவில், ராமதாசின் அண்மைக்கால நடவடிக்கைகள் ஜாதி மோதலுக்கு வழி வகுக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து அமைதி நீடிக்க வேண்டும் என்பதற்காக ராமதாஸ், வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு ஆகியோர் இரண்டு மாதங்களுக்கு கடலூர் மாவட்டத்திற்குள் ...

Read more

கடலூரில் பெரியநாயகி அன்னை திருவிழா துவக்கம் – 11ம் நாள் விழா முடிவில் ஆடம்பர தேர்பவனி

கடலூர் மாவட்டம் மங்கலப்பேட்டையை அடுத்த கோணான்குப்பம் புனித பெரிய நாயகி அன்னை திருத்தலத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருத்தலம் வீரமாமுனிவரால் கட்டப்பட்டதாகும். தமிழக கிறிஸ்தவர்களிடையே விரும்பி ஆராதிக்கப்படும் திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். இத்திருத்தலத்தில் திருவிழாவை காண வெளி மாவட்டங்களில் இருந்தும்‌, வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையின் ஆசிர் ...

Read more

போனஸ் வழங்காததால் அண்ணாமலை பல்கலைகழக ஊழியர்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு அறிவித்த தீபாவளி மற்றும் பொங்கல் போனஸ் வழங்கப்படாததை கண்டித்து அண்ணாமலை பல்கலைகழக ஊழியர்கள் பொங்கலை கறுப்பு தினமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்‍. சிதம்பரம்‌, அண்ணாமலை பல்கலைகழகத்தில் பணிபுரியும் சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு அரசு அறிவித்த தீபாவளி மற்றும் பொங்கல் போனஸ் இரண்டும் இதுவரை தரப்படவில்லை என கூறப்படுகிறது. நிர்வாகத்திடம் இதுபற்றி கேட்டதற்கு நிதிநிலை சிக்கலை காரண ...

Read more

செங்கம் அருகே மஞ்சள் விளைச்சல் குறைவு

கடலூர் மாவட்டத்தில் மின் பற்றாக்குறை காரணமாக மணிலா பயிர் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடலூர் சுற்று வட்டாரத்தில் பல ஏக்கர்களில் மணிலா பயிரை விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். மின் பற்றாக்குறையால் போதிய தண்ணீர் இல்லாததால் மணிலா பயிர் விளைச்சல் குறைந்துள்ளது. மணிலா பயிர் விதை மூட்டை 3ஆயிரத்து 300 ரூபாய் வரை விற்கிறது. ஆயிரக்கணக்கில் செலவு செய்து மணிலா பயிரை பயிரிட்ட விவசாயிகள் தற் ...

Read more

மண்பானை செய்யும் பணி தீவிரம் – அரசு உதவிட தொழிலாளர்கள் கோரிக்கை

பொங்கல் பண்டிகைக்காக விருத்தாசலம் அருகே மண்பாண்டங்கள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை அறுவடை திருநாளாக கிராமப்புறங்களில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை முன்னிட்டு விருத்தாசலம் அருகே உள்ள கொடுக்கூர், சேவூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்பானைகள், மண் சட்டிகள், அடுப்புகள் போன்ற மண்பாண்டங்களை செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்ப ...

Read more

கெடிலம் ஆற்றில் கழிவுநீர் கலந்தது

கடலூர் பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் சர்க்கரை ஆலையின் கழிவுநீர் கலப்பதால் மக்கள் கவலையும்‌, அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்‍. மாவட்டத்தின் புண்ணிய நதி என்று ஆன்மிகத்தில் வலியுறுத்தப்படும் கெடிலம் நதியால் 5ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்தது.ஆனால் தற்போது ஆற்றில் நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலையின் கழிவுநீர் கலப்பதால் அதன் தன்மை சீரழிந்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ம ...

Read more

சிதம்பரத்தில் மூப்பனார் மற்றும் ஜி.கே.வாசன் பெயரில் இயங்கும் பாசறைகளுக்கு, இளைஞர் காங்கிரசார் எதிர்ப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், மூப்பனார் மற்றும் ஜி.கே.வாசன் பெயரில் இயங்கும் பாசறைகளுக்கு, இளைஞர் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், கோஷ்டி மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாசறை சார்பில் வெளியிடப்படும் விளம்பர பேனர்களில் மூப்பனார் மற்றும வாசன் படங்கள் மட்டும் இடம்பெறுவதாகவும், சோனியா மற்றும் ராகுல்காந்தி படங்கள புறக்கணிக்கப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது.. மேற்கண்ட பெயர்களில் செயல்படும் பாசறை ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top