Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore (Page 4)

கடலூரில் பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது‌

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, கடலூரில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது‌. கடலூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தினர் பங்கேற்றனர். அப்போது‌, பாபர் மசூதி இருந்த நிலத்தை இஸ்லாமியர்களிடம் ஒப்படைக்க வேண்டும், பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளை கைது‌ செய்ய வேண்டும், வழக்குகளை உச்சநீதிமன்றம் விரைவுபடுத்த வேண்ட ...

Read more

கடலூர் காங்கிரஸ் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து பேருந்து கண்ணாடிகள் உடைப்பு

கடலூரில் காங்கிரஸ் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் பேருந்து கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த காமராஜ் மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக இருந்து வந்தார். இவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் கடலூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பெரிய காட்டுபாளையம் ஜங்ஷன் பகுதியில், மர்மநபர்கள் அவர ...

Read more

வீராணம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து 45 அடியை தாண்டியது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் பகுதியில் பெய்த தொடர் மழையால் வீராணம் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 45 அடியை தாண்டியது. காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரியின் கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரியின் மூலம் 48 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அதிக தண்ணீர் வரும் காலங்களில் ஏரியின் பாதுகாப்பு கருதி மதகை திறந்து விடுவார்கள். 45 புள்ளி ஐந்து‌ பூஜ்ஜியம் அடி நீர் மட்டும் தேக்க ...

Read more

திட்டக்குடி அருகே, பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ விபத்து பொதுமக்கள் சாலை மறியல்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ விபத்துக்குள்ளானதால் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியதால் காவல்துறை மீது பொதுமக்கள் கல்வீச்சு என அந்த பகுதியே போர்க்களமானது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஆவட்டி கூட்டுரோடு அருகே பள்ளி மாணவர்கள் மற்‌றும் ஆசிரியைகள் சென்ற ஷேர் ஆட்டோ மீது கா‌ர் மோதியது. இதில் ஆட்டோவில் சென்றவர்கள் பலத்த காயமடைந்தனர் ...

Read more

கடலூர் கெடிலம் ஆற்றை அழிவில் இருந்து‌ காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்

தாயை விட உயர்வானதாக கருதப்படுவது ‌தண்ணீர். அப்படிப்பட்ட தண்ணீர் ஓடக்கூடிய ஆறு‌களில் கழிவுகளை கொட்டுவதை, ஒரு ஆங்கிலேயன் நமக்கு பழக்கப்படுத்திவிட்டான். அவன் செய்த பாவம் அவனோடு போகாமல், நம்மையும் தொடர்ந்து‌ விடாமல் தொற்று‌க் கொண்டுள்ளது‌. அது‌குறித்த ஒரு சிறு‌செய்தி தொகுப்பினை இப்போது‌ பார்ப்போம். சென்னையில் ஓடும் கூவம் ஆறு ‌என்றால், அனைவரும் மூக்கை மூடிக்கொண்டு செல்வது‌தான் நமக்கு நினைவுக்கு வரும். ...

Read more

என்.எல்.சி தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறு‌த்தம்

என்.எல்.சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்க எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறு‌த்தத்தில் ஈடுபட உள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நெய்வேலி என்.எல்.சி. நிறுவன 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்‍. தொழிற்சங்கத்தினரும் கடந்த 5 நாட்களாக வாயிற்கூட்டம், ஆர ...

Read more

என்எல்சி பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்க முடிவு அனைத்து‌ தொழிற்சங்கத்தினரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

நெய்வேலி என்எல்சி பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து‌ தொழிற்சங்கத்தினரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அரசு பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்யப்போவதாக கடந்த மாதம் அறிவித்தது. ஆனால் இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம் ...

Read more

விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாமகவினரின் வன்முறை

விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாமகவினரின் வன்முறை காரணமாக அரசு பேருந்துகள் சேவை குறைக்கப்பட்டுள்ளதால் வெளியூர் செல்லும் பயணிகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரிதவித்தனர். மரக்காணம் பகுதியில் நடந்த கலவரம் பற்றி சிபிஐ விசாரணை நடத்த கோரி தடையை மீறி நேற்று விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது கட்சியின் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு எதிர ...

Read more

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த முடிவு, ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதற்கு அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தை அரசே ஏற்று நடத்த வழிவகை செய்யும் மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை உயர் கல்விதுறை அமைச்சர் பழனியப்பன் தாக்கல் செய்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அண்ணாமலை பல்கலைக் கழக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பட்டாசு வெடித்தும், இன ...

Read more

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறித்துவ தேவாலயங்களில் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறித்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்‍.

சென்னை சாந்தோம் கிறித்துவ தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்ச்சியில் ஏராளமான கிறித்தவர்கள் கலந்து கொண்டனர்‍. கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி பிரார்த்தனை பாடல்களை அவர்கள் பாடினர்‍. மக்களின் பாவத்தை போக்குவதற்காக மரித்த இயேசு கிறிஸ்து மக்களின் நன்மைக்காக மீண்டும் உயிர்த்தெழுந்த நாள்தான் ஈஸ்டர் தினம்‍. இந்த நாள் மகிழ்ச்சிக்குரிய நாளாக கிறிஸ்தவர்ள் கொண்டாடி வருகினறனர்‍. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஈஸ்டரை முன ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top