Home
You Are Here: Home » News » Tamil Nadu » Cuddalore (Page 3)

காட்டுமன்னார் கோவில் வேகமாக பரவிவரும் மர்ம காய்ச்சல்

காட்டுமன்னார் கோவில் அருகே வேகமாக பரவிவரும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை 3பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காட்டுமன்னார் கோவில் அருகே கீழக்கடம்பூர் கிராமத்தில் டெங்கு உள்ளிட்ட மர்மகாய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த 3வயது சிறுமி கிருத்திகா, மஞ்சுளா மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் சிகிச்சை பலனின்ற ...

Read more

குளிர்பானம் குடித்த 8 வயது சிறுமி பலி 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை

நெய்வேலி அருகே பிரபல கம்பெனி பெயரில் விற்கப்பட்ட குளிர்பானத்தை அருந்திய 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலு‌ம் 3 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது‌. கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்துள்ள சோப்ளாநத்தம் கிராத்தை சேர்ந்தவர் அஞ்சாபுலி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது குழந்தைகள் 4 பேருக்கும் பிரபல கம்பெனி பெயரில் விற்கப்பட்ட குளிர்பானத்தை அங்குள்ள கடையில் வாங்க ...

Read more

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு,சிறைப்பிடிக்கப்படுவது ஏற்புடையதல்ல – ஜி.கே.வாசன்

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு, சிறைப்பிடிக்கப்படுவது ஏற்புடையதல்ல, என இலங்கை அரசுக்கு, மத்திய கப்பல்போக்குவரத்துதுறை அமைச்சர் ஜி.கே.வாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடலூரில் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தி்த்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும், வலைகளை அறுத்து சேதப்படுத்தி கைது செய்வதும் வேதனைக்குரியது கண்டிக்கத்தக்கது என்றார். இந்த பிரச்சனையில் இலங ...

Read more

கடலூர் தென்பென்னை ஆற்றங்கரையில் ஆற்றுத் திருவிழா

கடலூர் தென்பென்னை ஆற்றங்கரையில் நேற்று‌ நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தவாரியிட்டு சாமி தரிசனம் செய்தனர். கடலூர் தென்பென்னை ஆற்றங்கரையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆற்றுத்திருவிழா நடைபெற்றது. இதில் கடலூரில் அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏராளமான சாமிகள், டிராக்டர் மற்றும் மாட்டுவண்டிகளில் அலங்கரித்து கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி செய்யப்பட்டன. இதேபோல மூதாதயர்களுக்கு ...

Read more

கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து மோதி இரண்டு பேர் உடல் நசுங்கி பலி

கம்பம் கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இரண்டு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கூடலூர் மஞ்சக்குளத்தை சேர்ந்தவர் மாயி. இளநீர் வியாபாரியான இவரும், கூலி வேலை செய்து வரும் பெண் ஒருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்‍. அப்போது அவர்கள் பின்னால் வேகமாக வந்த தனியார் பேரூந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சம்பவ ...

Read more

பரங்கிப்பேட்டை பகுதியில் முகத்துவாரம் ஆழப்படுத்தப்படுத்தப்படாததால் மீனவர்கள் அவதி

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக முகத்துவாரம் ஆழப்படுத்தப்படுத்தப்படாததால் தூர்ந்து போயுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்லமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. பரங்கிப்பேட்டை பகுதியில் 30க்கும் மேற்பட்ட மீனவர் கிராமங்கள் உள்ளன. இவர்களின் வாழ்வாதாரம் மீன்பிடி தொழிலேயாகும். எனவே பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் பகுதில் கடல் முகத்துவாரம் ஆழப்படுத்துவதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணி ...

Read more

10 ஆயிரம் பேரை நிரந்தர ஊழியராக்குவதற்கான பட்டியல் என்.எல்.சி. நிர்வாகம் வெளியிடு

ஒப்பந்த தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 10 ஆயிரம் பேரை நிரந்தர ஊழியராக்குவதற்கான பணி மூப்பு பட்டியலை நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது. என்.எல்.சி.நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்டகாலமாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ...

Read more

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன திருவிழாவில் பல்லாயிரக்கண்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் மிகவும் விசேஷமானது ஆகும். இந்த திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது. முக்கிய திருவிழாவான ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜரும், சிவகாமசுந்தரி தேவியாரும் ஆயிரங ...

Read more

சிதம்பரம் தில்லை காளி கோவிலில் தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்

சிதம்பரம் தில்லை காளி கோவிலில் தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் சாமி தரிசனம் செய்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் தமது மனைவி திருமதி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் குடும்பத்தினருடன் சிதம்பரம் தில்லை காளியம்மன் ஆலயத்திற்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள உக்கிர காளியம்மன் சந்நதிக்கு சென்று கேப்டன் விஜ ...

Read more

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன தேர்திருவிழா

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற தேர்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு நடைபெற்ற தேர்திருவிழாவில், நடராஜமூர்த்தி, ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவ மூ ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top