Home
You Are Here: Home » News » Tamil Nadu » Coimbatore (Page 5)

தமிழகத்தில் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில்விட முயன்ற இரண்டு பேர் கைது

தமிழகத்தில் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில்விட முயன்ற இரண்டு பேரை கோவையில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலத்திலிருந்து கோவை வழியாக கள்ள நோட்டுக்கள் கடத்தப்படுவதாக, கள்ள நோட்டு தடுப்பு பிரிவு சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன்பேரில், கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டி ...

Read more

மேட்டுப்பாளையம் அருகே 3 இளைஞர்களை மீது துப்பாக்கி சூடு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே 3 இளைஞர்களை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேட்டுப்பாளையம் அடுத்துள்ள குருந்தமலை பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார், சரவணன், மகேஷ் ஆகிய 3 பேரும் காரமடை அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது ஒதுக்குப்புறமாக நின்று கொண்டிருந்த காரின் அருகே 3 பேரும் சென்ற போது, காரில் ஒரு பெண்ணுடன் இருந்த 2 பேர் தங்களது கைத்துப்பாக்கியால் 3 பேரையும் சரமாரிய ...

Read more

கிறிஸ்து‌மஸ் மற்று‌ம் புத்தாண்டை முன்னிட்டு ரஷ்யநாட்டு நடன கலைஞர்களின் கலாச்சார நடனம்

மேட்டுப்பாளையத்தில் கிறிஸ்து‌மஸ் மற்று‌ம் புத்தாண்டை முன்னிட்டு ரஷ்யநாட்டு நடன கலைஞர்களின் கலாச்சார நடனம் நடைபெற்றது‌. இதனை ஏராமான சுற்று‌லா பயணிகளும், பொது‌மக்களும் கண்டு ரசித்தனர். இந்திய - ரஷ்ய கலாச்சார பரிவர்த்தனை திட்டத்தின் மூலம் ரஷ்ய நடன குழு ஒன்று‌ இந்தியாவில் சுற்று‌ பயணம் மேற்கொண்டுள்ளது‌. இந்நிலையில், இந்திய - ரஷ்ய நாட்டு கலாச்சாரத்தை பரப்பும் வகையில், கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் உள்ள தனிய ...

Read more

தேக்கம்பட்டி பவானி ஆற்று படுகையில் யானைகளுக்கான சிறப்பு முகாம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்று படுகையில் இரண்டு இடங்களில் யானைகளுக்கான சிறப்பு முகாம் இன்று தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து யானைகள் இங்கு வருகின்றன. தேக்கம்பட்டியில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் இன்று தொடங்கும் என தமிழக அரசு கடந்த 4 நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இந்த முகாமில் 43 கோவில் யானைகளும், வனத்துறைக்கு சொந்தமான 55 யானைகளும் கலந்துகொள்வதாக அறி ...

Read more

மேட்டுப்பாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுக்கடையை அகற்ற கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் முற்றுகை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுக்கடையை அகற்ற கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இது குறித்து அறிந்த கோவை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கட்டுமானப்பணியை கைவிட வேண்டும் என்றும் கடையை திறக்க கூடாது என்று ...

Read more

கோவை மாவட்டத்தில் போலீசாரின் அராஜக செயலை கண்டித்து அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி

கோவை மாவட்டத்தில் போலீசாரின் அராஜக செயலை கண்டித்து அரசு பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவிதிக்குள்ளாகினர். கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக தனியார் மற்றும் அரசு பேருந்து ஊழியர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் வெடித்துள்ளது. இதில் பல ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். அப்போது அவ்வழியாக ரோந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் செந்தில்குமார், இரு கண்டக்டர்களையும் கண்டித ...

Read more

கோவையில் மக்கள் நீதிமன்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றிரவு வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டம்

கோவையில் இன்று நடைபெற இருந்த மக்கள் நீதிமன்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்றிரவு வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய அளிவலான மாபெரும் மக்கள் நீதிமன்றம் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. லோக் அதாலத் என்று அழைக்கப்படும் இந்த மக்கள் நீதிமன்றத்தில், குற்றவழக்குகளில் சம்பந்தபட்ட குற்றவாளிகள் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமேலேயே தீர ...

Read more

வால்பாறை அருகே பள்ளி கட்டிடத்தை உடைத்து‌ காட்டுயானைகள் அட்டகாசம் செய்துள்ளது

வால்பாறை அருகே பள்ளி கட்டிடத்தை உடைத்து‌ம், சத்து‌ணவு சமையலறையை இடித்து‌ம் காட்டுயானைகள் அட்டகாசம் செய்ததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்து‌ள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் கடந்த ஒரு மாதமாக சுமார் 150 காட்டுயானைகள் கூட்டம் கூட்டமாக புகுந்து‌ நாசப்படுத்தி வருகின்றன. மேலு‌ம், குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், பள்ளிக் கூட சத்து‌ணவு மையங்கள் ஆகியவற்றை உடைத்து‌ சேதப்பட ...

Read more

கோவை அருகே பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுலா சென்ற வாகனம் விபத்து மாணவி ஒருவர் பலி

கோவை அருகே பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பும் வழியில் மினிஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையை அடுத்த பேரூர் பச்சாபாளையம் அருகே தீத்திபாளையம் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு, இப்பள்ள ...

Read more

சத்தியமங்கலம் அருகே கீழ்பாவனி ஆற்றில் குளித்த அண்ணன் தம்பி உள்பட 3பேர் பலி

சத்தியமங்கலம் அருகே கீழ்பாவனி ஆற்றில் குளித்த அண்ணன் தம்பி உள்பட 3பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கோவை கருமத்தம்பட்டி சொன்செட்டிபுதூரை சேர்ந்தவர் கார்த்திகேயன், இதே ஊரைச் சேர்ந்தவர் சுந்தர் அவரது தம்பி ராஜ்குமார் ஆகிய 3பேரும் தீபாவளி விடுமுறையை அடுத்து அதே பகுதியை சேர்ந்த தங்கள் நண்பர்களுடன் 11 பேருடன் 7 இருசக்கர வாகனங்களில் கொடிவேரி அணை ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top