Home
You Are Here: Home » News » Tamil Nadu » Coimbatore (Page 4)

ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் முற்றுகை – பா.ஜ.க. தொண்டர்கள் மீது தடியடி

கோவையில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க. தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் பா.ஜ.க அலுவலகத்தை ஆம் ஆத்மி கட்சியினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதை கண்டித்து கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் முன்பு பாஜகவினர் குவிந்தனர். இதனிடையே கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன ...

Read more

விசைத்தறி தொழிலாளர்கள் 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

ஊதிய உயர்வு தொடர்பாக கோவையில் நடைபெற்ற விசைத்தறி உரிமையாளர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து, வரும் 21ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கும், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் ...

Read more

ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் நிறுவன கண்காணிப்பாளரை கொலை செய்து கொள்ளை

ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் நிறுவன கண்காணிப்பாளரை கொலை செய்து, 4 சவரன் தங்கநகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கணபதி அருகே உள்ள ஐஸ்வர்யா கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெயா. இவர் பிஸ்என்எல் நிறுவனத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் நேற்று இவர் தனியாக இருந்தபோது, வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள் ஜெயாவின் கழுத்தை அறுத்து கொலை ச ...

Read more

கோவை மாவட்ட ஆட்சியரிடம் கேபிள் ஆப்ரேட்டர்கள் புகார்

கேபிள் ஆப்ரேட்டர்களின் சுதந்திரத்தையும் உரிமையையும் தமிழக அரசு பறிப்பதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியரிடம் கேபிள் ஆப்ரேட்டர்கள் புகார் அளித்துள்ளனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 100-க்கும் மேற்பட்ட அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள்‌, ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்கிடம் மனு அளித்தனர். அரசு கேபிளை உபயோகிக்கும் சந்தாதாரர்களுக்கு அரசே கட்டண ரசீது வழங்க முடிவு செய்துள்ளதாகவும்‌, இது தங்களின் உரிமைகளை பற ...

Read more

யானைகள் லாரியில் ஏறமறுப்பு

மேட்டுப்பாளையம் அருகே நடைபெற்று வந்த யானைகள் புத்துணர்வு முகாம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து முகாமில் பங்கேற்ற யானைகளை லாரியில் ஏற்றி அனுப்ப முயன்றபோது அவை மிரண்டு லாரியில் ஏறமறுத்து அடம்பிடித்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய யானைகள் முகாம் நேற்று முடிவடைந்தது. 48 நாட்கள் நடந்த இந்த முகாமின் நிறைவு விழா ...

Read more

தொண்டாமுத்தூர் அருகே 5 ஆடுகளை சிறுத்தைப்புலி அடித்து கொன்றது

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 5 ஆடுகளை சிறுத்தைப்புலி அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்குள்ள ஜாகீர்நாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். விவசாயியான இவர் அப்பகுதியில் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இதனிடையே இன்று அதிகாலை பட்டிக்குள் நுழைந்த சிறுத்தைப் புலி ஒன்று, அங்கிருந்த 5 ஆடுகளை அடித்து கொன்றது. அப்போது வெளியே வந் ...

Read more

கோவையில் லஞ்சம் வாங்கிய சட்டப் பிரிவு கண்காணிப்பாளர் கைது

கோவையில் அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியரிடம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சட்டப் பிரிவு கண்காணிப்பாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர்‍. கோவையில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஊழியராக இருப்பவர் இஸ்மாயில். இவரிடம் கோப்பை முடிப்பதற்காக, போக்குவரத்தக் கழக சட்டப்பிரிவு கண்காணிப்பாளர் சண்முக சுந்தரம்‌, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த இஸ்மாயில் லஞ்ச ஒழிப்பு கா ...

Read more

தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்கள் போராட்டம்

தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறு‌த்தி தொழிற்சங்கம் மற்று‌ம் தொழிற்சங்கங்களை சாராத தொழிலாளர்கள் ஐந்தாவது‌ நாளாக இன்று‌ம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய பஞ்சாலை கழகத்தின் கீழ் தமிழகத்தில் 7 ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில், கோவையில் 5 பஞ்சாலைகள் உள்ளன. இந்த பஞ்சாலைகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கான புத ...

Read more

தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை – பார்த்தசாரதி எம்எல்ஏ

உளுந்தூர்பேட்டையில் நடைபெறவுள்ள மாநில மாநாடு குறித்து‌, தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் அவர்களின் ஆணைப்படி, மாநிலத்தின் பல பகுதிகளில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கோவை தேமுதிக மாநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கழக தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி எம்எல்ஏ, கலந்து‌ கொண்டு கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் தமிழ் ...

Read more

தவறான அறு‌வை சிகிச்சையால் கால்களையும் இழந்த பெண் – மாவட்ட ஆட்சியரிடம் மனு

தவறான அறு‌வை சிகிச்சையால், இரண்டு கால்களையும் இழந்த பெண் மருத்து‌வர் மீது‌நடவடிக்கை எடுக்க வலியுறு‌த்தி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பெண் மனு ‌அளித்து‌ள்ளார். கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவரின் மனைவி சுதா, கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனை தொடர்பாக, கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்து‌வமனையை நாடியுள்ளார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற கர்ப்பப்பை அறு‌வை சிகிச்சை ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top