Home
You Are Here: Home » News » Tamil Nadu » Coimbatore (Page 3)

கோவை மாவட்டம் வால்பாறை பிரதான சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை பிரதான சாலையில் அரசு பேருந்து மோதியதில் மின்கம்பம் சாய்ந்தது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறைக்கு கோவையில் இருந்து அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. பேருந்தை சசிக்குமார் என்பவர் ஓட்டினார். பொள்ளாச்சி சாலையில் உள்ள அய்யர்பாடி தபால்நிலையம் அருகே பேருந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக பேருந்து சாலையோர மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் ...

Read more

மேட்டுப்பாளையம் அருகே விளை நிலங்களில் காட்டுயானைகள் புகுந்து நாசப்படுத்தியது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானைகள் இரவில் விளை நிலங்களில் புகுந்து தென்னை மற்றும் வாழைகளை நாசப்படுத்தியது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள கிட்டாம்பாளையம், குறும்பனூர், தாசம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களின் அருகே தென்னை மற்றும் வாழைத்தோட்டங்களில் புகுந்த காட்டு யானைகள், தென்னை மற்றும் வாழைகளை மிதி்த்து துவம்சம் செய்தன. இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ள விவசாயிகள் க ...

Read more

கோவையில் சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அதிகாரி வீட்டில் சோதனை

கோவையில் சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அதிகாரி வீட்டில், மத்திய புலாய்வுத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் பிரபாகர். இவர் சுங்கம் மற்றும் கலால் வரித்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணியும் அதே துறையில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். கோவை பாரதி பூங்கா பகுதியில் உள்ள இவர் ...

Read more

கோவையில் நேரு கல்வி குழுமம் சார்பில் – விமான கண்காட்சி மற்றும் உணவு திருவிழா

கோவையில் நேரு கல்வி குழுமம் சார்பில் நடைபெற்று வரும் விமான கண்காட்சி மற்றும் உணவு திருவிழாவில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். கோவையில் நேற்று தொடங்கிய விமான கண்காட்சி மற்றும் உணவு திருவிழா வரும் 27ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் பறக்கும் நிலையில் இயங்கக்கூடிய 10க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்ட ...

Read more

அதிமுக, திமுகவினரிடையே கைகலப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக கூறி அதிமுக, திமுகவினரிடையே கைகலப்பு ஏற்பட்டது‌. கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்று‌ம் அக்கட்சி தொண்டர்கள் எம்.பி.செல்வராஜ் தலைமையில் நேற்று‌ நள்ளிரவு அங்குள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். அப்போது‌ அவர்கள் தங்கியிருந்த அறைகளில் வைத்து‌ வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக கூறிய திமுகவினர் விடுதி ...

Read more

வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் மனித சங்கிலி பேரணி

வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இணைந்து கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியாக மனித சங்கிலி பேரணி கோவையில் நடத்தப்பட்டது‌. 16-வது மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து மாநிலம் முழுவதும் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பாக, வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி ...

Read more

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

கோவை அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. கோவை குறிச்சி பகுதியில் இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இந்த குடோன் அருகே இருந்த குப்பைகளுக்கு மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர்.. இதில் தீ மளமளவென பரவி அருகில் இருந்த குடோனுக்கு பரவியது. இதனால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட் ...

Read more

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை கண்டுபிடிப்பு

கோவையில் உள்ள ஒரு கிணற்றை தூர்வாரும்போது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை குறிச்சி குளத்தில் அருகே 85 அடி ஆழம் உள்ள கிணற்றை தூர்வாரும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது சுமார் 2 அடி உயரம் உள்ள பூதேவி அம்மன் ஐம்பொன் சிலை கிடைத்தது. இதனை கண்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்து, அச்சிலையை கோ ...

Read more

கஞ்சா தர மறு‌த்த நபர் கொலை – 5 பேர் கைது

கோவை மாவட்டத்தில், கஞ்சா தர மறு‌த்த நபரை, 5 பேர் கொலை செய்து‌ள்ளது‌ அம்பலமாகியுள்ளது‌. கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த அப்பாஸ் என்பவர் பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே உள்ள பெருமாள்செட்டி டாஸ்மாக் கடையின் முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து‌ கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், நல்லூர் பகுதியில் கொலையாளிகள் பது ...

Read more

மேட்டுப்பாளையத்தில் கன மழை – 6 வயது குழந்தை பலி

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கன மழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 15 பேர் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன 6 வயது குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டது‌. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விடிய, விடிய இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில்‌, கோத்தகிரி மலையில் இருந்து வந்த காட்டாற்று வெள்ளம் ராமசாமி நகர்‌ இந்திராநகர் ஆகிய பகுதிகளில் சூழ்ந்தது‌. இதில், பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top