Home
You Are Here: Home » News » Tamil Nadu » Coimbatore (Page 2)

தனியார் பள்ளியை பெற்றோர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பினர் முற்றுகை

பொள்ளாச்சியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி, தனியார் பள்ளியை பெற்றோர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பினர் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள தனியார் பள்ளியில், மாணவர் சேர்க்கைக்காக பெற்றோர்கள் நேற்று கட்டணம் செலுத்த சென்றனர். அப்போது, பெற்றோர்களிடம் இருந்து 12 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு, 4 ஆயிரத்தி 100 ரூபாய்க்கு மட்டுமே பள்ளி நிர்வாகம் ரசீத ...

Read more

தனியார் பொறியியல் கல்லூரியை மூட வலியுறு‌த்தி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு‌

கோவை அருகே 6 மாதங்களாக வகுப்புகள் நடைபெறாத தனியார் பொறியியல் கல்லூரியை மூட வலியுறு‌த்தி மாணவர்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு‌ அளித்தனர். கோவையை அடுத்த ஆலாந்து‌றை பகுதியில் தனியாருக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி ஒன்று‌ செயல்பட்டு வருகிறது‌. 800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று‌ வரும் இக்கல்லூரியில் அடிப்படை வசதிகள் மற்று‌ம் ஆசிரியர்கள் பற்றாகுறை பிரச்சனை இருந்து‌ வந்து‌ள்ளது‌. இதனால் மாணவர்கள் ...

Read more

கோவையில் போலி கையெழுத்திட்டு 32 லட்சம் ரூபாய் மோசடி

கோவையில் ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியரின் வங்கி கணக்கில் போலியாக கையெழுத்திட்டு 32 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை அடுத்த தூடியலூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கணக்கு உள்ளது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது வங்கி கணக் ...

Read more

கோவையில் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வந்தத 49 பள்ளிகள் மூடுமாறு உத்தரவு

கோவை மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வந்த 49 தனியார் பள்ளிகளை உடனடியாக மூடுமாறு மாவட்ட தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோவையில் அங்கீகாரம் பெறாமல் 49 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் இயங்கி வந்தது. இதையடுத்து அந்த பள்ளிகள் அங்கீகாரம் பெற கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த பள்ளிகளின் நிர்வாகம் இதுவரை அனுமதி பெறவில்லை. இதையடுத்து அந்த 49 பள்ளிகளையும் மூட மாவட்ட தொடக்கக் கல்வி ...

Read more

4 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற 16 பேர் கைது

கோவையில் உள்நாட்டு சரக்கு முனையத்தில் வைக்கப்பட்டிருந்த 4 கோடி ரூபாய் மதிப்பிலான 6 டன் செம்மரக்கட்டைகளை கொள்ளையடித்த 16 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த ஜனவரி மாதம் தூத்துக்குடி வழியாக வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த 9டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, இருகூர் பகுதியில் உள்ள உள்நாட்டு சரக்கு முனையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி லாரியில் வந்த மர்மந ...

Read more

ஆசிய தடகள போட்டி – முதன் முறையாக தமிழக மாணவன் தேர்வு

பாங்காக்கில் இம்மாதம் நடைபெற உள்ள இளையோர் ஆசிய தடகள போட்டியில் தமிழகத்திலிருந்து முதன் முறையாக கோவையை சேர்ந்த மாணவன் தேர்வாகியுள்ளார். கோவை கணபதி பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் மித்ரவருண் கடந்த 5 ஆண்டுகளாக வட்டு எறிதல் பயிற்சி பெற்று வருகிறான். தேசிய அளவில் வெள்ளி மற்றும் தங்க பதக்கங்களை பெற்றுள்ள மாணவன் மித்ரவருண், வருகிற 21 மற்றும் 22ம் தேதி பாங்காக்கில் நடைபெற உள்ள இளையோர் ஆசிய தடகள போட்டியில் ...

Read more

காப்பீடு நிறுவனம் நடத்தி 5 லட்ச ரூபாய் மோசடி

கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் காப்பீடு நிறுவனம் நடத்தி 5 லட்ச ரூபாய் மோசடி செய்த கனரா வங்கி மேலாளர் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சிங்காநல்லூர் பகுதியில் உள்ள சாய்பாபா காலனியை சேர்ந்த நாகராஜ் என்பவர் தனியார் உயிர்காப்பீட்டு நிறுவனத்தில் கடந்த 2007-ம் ஆண்டு 5 லட்ச ரூபாயை செலுத்தியுள்ளார். 5 வருட காலத்தில் முதலீட்டு பணம் இரட்டிப்பாக வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், வாக்களித்த ...

Read more

வால்பாறை அருகே இடிமின்னலுடன் பலத்த மழை

கோவை மாவட்டம் வால்பாறை அருகே இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. பலத்த சூறாவளிக் காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் போக்குவரத்து 4 மணி நேரம் பாதிக்கப்பட்டது. வால்பாறையில் நேற்று மதியம் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது பலத்த சூறாவளிக்காற்று வீசியதில் முடீஸ் சாலையில் சோலையார் எஸ்டேட் பகுதியில் 10க்கும் மேற்பட்ட மரங்கள் சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்தன. இதனால் 4மணி நேரத்துக்கும் மேல் போ ...

Read more

மேட்டுப்பாளையம் அருகே குடிநீர் வழங்கப்படாததால் கிராமமக்கள் நூதன போராட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே முறையாக குடிநீர் வழங்கப்படாததால், கிராமமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அதிகாரி மற்றும் ஊராட்சிமன்ற தலைவரை சிறை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிக்கத்தாம்பாளயைம் ஊராட்சிக்குட்பட்ட 11 மற்றும் 12வது வார்டு பகுதி்களில், கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டு எழுந்தது. இதில் ஊராட்சி நிர்வாகம் மெத ...

Read more

கோவை மாவட்டம் வால்பாறை பிரதான சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

கோவை மாவட்டம் வால்பாறை பிரதான சாலையில் அரசு பேருந்து மோதியதில் மின்கம்பம் சாய்ந்தது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறைக்கு கோவையில் இருந்து அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. பேருந்தை சசிக்குமார் என்பவர் ஓட்டினார். பொள்ளாச்சி சாலையில் உள்ள அய்யர்பாடி தபால்நிலையம் அருகே பேருந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக பேருந்து சாலையோர மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top