Home
You Are Here: Home » News » Tamil Nadu » Thiruvallur (Page 5)

விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாமகவினரின் வன்முறை

விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாமகவினரின் வன்முறை காரணமாக அரசு பேருந்துகள் சேவை குறைக்கப்பட்டுள்ளதால் வெளியூர் செல்லும் பயணிகள் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரிதவித்தனர். மரக்காணம் பகுதியில் நடந்த கலவரம் பற்றி சிபிஐ விசாரணை நடத்த கோரி தடையை மீறி நேற்று விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது கட்சியின் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு எதிர ...

Read more

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

தேமுதிக எம்எல்ஏக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக சார்பில் தமிழகத்தின் உள்ள அனைத்து‌ மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்பட்ட மாபெரும் கண்டன பொது கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தேமுதிக எம்எல்ஏக்கள் விசி,சந்திரகுமார், பார்த்தசாரதி, அனகை முருகேசன், நல்லதம்பி, அருள்செல்வன், செந்தில்குமார் ஆகிய 6 பேரை பழிவாங்கும் நடவடிக்கையாக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக அரசு சஸ்பெண்ட் செ ...

Read more

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

தமிழ்நாடு சட்டசபையில் ஒரு வருட காலத்திற்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஜெயலலிதாவின் அராஜக போக்கை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் கடும் கொந்தளிப்போடு உள்ளனர். மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல் எதிர்கட்சியினரை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டு வரும் ஜெயலிலதாவின ...

Read more

குப்பை அள்ளும் லாரி உரிமையாளர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து, ரத்த கையெழுத்து இயக்கம்

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி குப்பை அள்ளும் லாரி உரிமையாளர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து, ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக மணல் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அச்சங்கத்தின் தலைவர் கத்திப்பாரா ஜனார்த்தனன்‌, கையெழுத்து இயக்க போராட்டத்தை வருகிற திங்கட்கிழமை சென்னை கிண்டியில் துவங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். குப்பை குளங்கள் மற்றும் மணல ...

Read more

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது

நாகை மாவட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்ட பேரணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பாதைகளை தங்கள் கைகளில் ஏந்தியவாறு ஏராளமான ஊர்வலமாக சென்றனர். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் காயப்பட்டிணத்தில் உள்ள தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. டெல்லி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப ...

Read more

திருவள்ளூர் அருகே 7 வயது சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

திருவள்ளூர் அருகே 7 வயது சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்த முதியவர் மீது தக்கநடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை. மாப்பேடு அடுத்த பன்னூர் அந்தோணியார்புரத்தை சேர்ந்த எத்திராஜ்தான் இந்தக்கொடுமையை செய்தவர். இவரின் வீட்டருகே வசித்து வரும் இம்மானுவேல்-மேரி பிரியா தம்பதியரின் மகள் மற்றும் அவரது உறவினர்களின் சிறுமிகள் எத்திராஜின் வீட்டில் சென்று விளையாடுவது வழக்கம். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இமானுவல ...

Read more

திருவள்ளூர் அரசு மணல் குவாரியை மூடவலியுறுத்தி கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே அரசு மணல் குவாரியை மூடவலியுறுத்தி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை அருகே பேரிடிவாக்கம் கிராமத்தில் அரசு மணல் குவாரி நடைபெற்று வருகிறது. இக்குவாரியில் அரசு நிர்ணயித்த அளவுக்கு அதிகமாக மணல் கொள்ளையடிப்பதாக கூறி கிராம மக்கள் குவாரியை முற்றுகையிட்டனர். மாவட்ட ஆட்சியர் குவாரியில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக ...

Read more

மாணவ, மாணவிகளுக்கான குத்து‌ச்சண்டைப்போட்டி

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான குத்து‌ச்சண்டைப்போட்டியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். 2012-2013-ம் ஆண்டிற்கான 55-வது‌ குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டிருந்தது‌. அதன்படி, தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் மற்று‌ம் திருவள்ளூர் மாவட்ட கல்வித்து‌றை சார்பில் மாவட்ட விளையாட்டரங்கில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான குத்து‌ச்ச ...

Read more

விலைவாசியை குறைப்பதாக மத்திய அரசு நாடகம்

அந்நிய முதலீட்டுக்கு அனுமதியளித்து அதன் மூலம் விலைவாசி குறையும் என மத்திய அரசு கபட நாடகம் ஆடுவதாக தமிழ்நாடு வணிகர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கும்பகோணத்தில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் வெள்ளையன்‌, மக்கள் விரோத போக்கை கடைப்பிடிப்பதை மத்திய அரசு வழக்கமாகக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்‍. விலைவாசியை குறைப்பதற்கு ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்றார்‍. பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைப்பத ...

Read more

டெங்கு நோய் தாக்கி மாணவன் உயிரிழப்பு

பொன்னேரியில் டெங்கு நோய் தாக்கி பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளோடை கிராமத்தில் பாடி என்பவர் வசித்து வருகிறார். பத்தாம் வகுப்பு படித்த இவரது மகன் ரமேசுக்கு திடீரென காய்ச்சல் வந்துள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது, அவருக்கு டெங்கு காய்ச்சல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராமேஷ் சென்னை மர ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top