Home
You Are Here: Home » News » Tamil Nadu » Chennai (Page 6)

கொளத்தூர் பகுதி பொதுமக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்

சென்னை கொளத்தூர் பகுதியில் கடந்த 6 மாதங்களாக இரவில் மின் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கொளத்தூர் பகுதி ஆசிரியர் காலணி பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த 6 மாதங்களுக்கும் அதிகமாக இரவு நேரங்களில் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டு வந்துள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் இரவில் மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நி ...

Read more

சென்னையில் இரவுநேரப்பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை – பொது‌மக்கள் குற்றச்சாட்டு

சென்னை மாநகரில் இயக்கப்படும் இரவுநேரப்பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை என்று‌ பொது‌மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை மாநகரில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர பேருந்து‌கள் இயக்கப்படுகிறது‌. வழக்கமான பேருந்து‌ கட்டத்தை விட இதற்கு தனியாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.‌ கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த இரவுநேர பேருந்து‌ சேவை தற்போது‌ சரிவர செயல்படவில்லை என்று‌ புகார் எழு ...

Read more

சோழிங்கநல்லூர் அருகே தீ விபத்து

சென்னை சோழிங்கநல்லூர் அருகே தைல காட்டில் மர்ம நபர்கள் தீ வைத்ததால், ஏராளமான மரங்கள் தீயில் எரிந்து‌ நாசமாகியது‌. சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த கோவிளாஞ்சேரியில் தையிலங் காடு உள்ளது‌. இங்கு நேற்று‌ மதியம் மர்ம ஆசாமிகள் காட்டிற்கு தீ வைத்து‌விட்டு சென்று‌ள்ளனர். தமிழகத்தில் அக்னி வெயில் கொளுத்து‌ ம் இந்த நேரத்தில், சிறிய அளவில் வைத்த தீ , மளமளவென காடு முழுவது‌ம் பரவி கொழுந்து‌விட்டு எரிய தொடங்கியது‌. சுமா ...

Read more

சோ.ராமசாமிக்கு உடல் நலக்குறைவு

துக்ளக் வார இதழின் முன்னாள் ஆசிரியர் சோ.ராமசாமிக்கு திடீரெ‌ன உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வழக்கறிஞர் போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்ட சோ.ராமசாமிக்கு நேற்று‌ திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 80 வயது நிரம்பிய சோ.ராமசாமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து சென்னை ராஜா அண் ...

Read more

சென்னையில் வெயில் தாக்கம் 110 டிகிரி

தமிழகத்தில் கத்திரி வெயில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்கிரமடைந்து உள்ளதையடுத்து, சென்னையில் நேற்று 110 டிகிரி வெயில் பதிவானதால் மக்கள் இரவிலு‌ம் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். தமிழகத்தில் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னிநட்சத்திரம் கடந்த 4-ம் தேதி துவங்கியது. இந்த கத்திரி வெயில் வரும் 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. கத்திரி வெயில் துவங்கிய நாளன்றே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை ...

Read more

செங்குன்றம் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை செங்குன்றம் அருகே நான்கு மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த வடகரை அருகே உள்ள கிராண்ட் லைன் ஊராட்சியில் கடந்த 4 மாதங்களாக குடிநீர் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று காலை திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் வினியோகம் செய்ய கோரி பலமு ...

Read more

சென்னையில் நிலஅதிர்வு

சென்னையில் நேற்று இரவு 10 மணியளவில் பல்வேறு இடங்களில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. இதில் விடுகள் சிலவினாடிகள் அதிர்ந்ததால் மக்கள் சற்று பீதியடைந்தனர். சென்னை அடையார், நுங்கம்பாக்கம் டி.நகர் திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல இடங்களில் நேற்று இரவு 10 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதில் வீடுகளில் இரு்ந்த பொருட்கள் அதிர்ந்ததால் மக்கள் சிறிது பீதிக்குள்ளாகி வீடுகளை விட்டு வெளியேறினர். இதேபோல டெல்லி, கொல்க ...

Read more

காசிமேடு மீனவர்களுக்கு பயிற்சி முகாம்

கடலில் சூறை மீன்கள் அதிகமாக கிடைக்கும் இடங்கள் மற்றும் காற்றில் அலையின் வேகத்தை கண்டறிய, மீனவர்களுக்கு செய்முறை விளக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், தேசிய கடல் வளத்துறை, இந்திய அரசு புவி விஞ்ஞான அமைச்சகம் மற்றும் சுவாமிநாதன் அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்த பயிற்சி முகாமில்‌, கடலில் மீன் பிடிக்க செல்வதற்கு முன்பு கடலின் தட்பவெப்பநிலை மற்றும் வானிலை மாற்றத்தை அறிந்துகொள ...

Read more

பைபாஸ் சாலையின் இருபுறமும் குப்பைகள் கொட்டுவதால் இரவு நேரங்களில் விபத்து அபாயம்

சென்னை தாம்பரம் செங்குன்றம் பைபாஸ் இணைப்புச் சாலையின் இருபுறமும் குப்பைகள் அதிகம் கொட்டுவதால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர். தாம்பரம் செங்குன்றம் இணைப்புச் சாலை மற்றும் அனகாபுத்தூர்- பரணிபுத்தூர் இணைப்பு சாலைகளில் பல இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டிட கழிவுகள், இறைச்சி கழிவுகள் ஆகியவை இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து‌ள்ளது‌. அத ...

Read more

ஜெயலலிதா மீதான வருமான வரி ஏய்ப்பு வழக்கு – ஜூன் 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா மீதான வருமான வரி ஏய்ப்பு வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் 1991 ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரை, வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மார்ச் 3-ம் தேதி ஜெயலலிதா, சசிகலா ஆ ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top