Home
You Are Here: Home » News » Tamil Nadu » Chennai (Page 4)

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் சந்திப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை, சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை கழகத்தில் இன்று (23.12.2015) காலை 11 மணியளவில் மக்கள் நல கூட்டியக்கத் தலைவர்கள் திரு.வைகோ, திரு.ஜி.இராமகிருஷ்ணன், திரு.முத்தரசன், திரு.தொல்.திருமாவளவன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக  சந்தித்தனர். ...

Read more

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மீலாது நபி வாழ்த்துச்செய்தி

அன்பு, அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை உலகிற்கு போதித்த அண்ணல் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளே, மீலாது நபி திருநாளாக போற்றப்படுகிறது. உலகம் செழித்திடவும், மானுடம் தழைத்திடவும், அமைதியும், ஒற்றுமையும், நட்புணர்வும் மக்களிடத்தில் ஏற்படவேண்டுமென்பதே  நபிகளின் அருட்போதனையாகும். வாழ்க்கையின் அறநெறிகளை மனித சமுதாயத்திற்கு உருவாக்கிக் கொடுத்த, அண்ணலின் பிறந்தநாளை கொண்டாடும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரின் வாழ்விலும் மகி ...

Read more

கிறிஸ்துமஸ் பெருவிழா குறித்து தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிக்கை

பகைவர் இடத்திலும் அன்பு செலுத்தி, நம்மை வெறுப்பவர்களுக்கு உதவி செய்து, புறம்பேசுவோரை வாழ்த்திடவேண்டுமென போதித்து, தன் உயிரை மக்களுக்காக தியாகம் செய்தவர் இயேசு பிரான் ஆவார். அவருடைய மார்க்கத்தை கடைபிடிக்கும் கிறிஸ்துவ மக்கள், அவர் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள். சாதி, மதம் என்ற பேதம் இல்லாத நிலையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, தேமுதிக தலைமை கழகத்திலும் மற்றும் அனைத ...

Read more

பத்திரிக்கைச்செய்தி

சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை கழகத்தில், கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை, இன்று (18.12.2015) காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திரு.குமரி.அனந்தன் அவர்கள் நேரில் சந்தித்து, “நமது இலக்கு மதுவிலக்கு” என்ற லட்சியத்தோடு சென்னை முதல் கன்னியாகுமரி வரை, டிசம்பர் 25ஆம் தேதி முதல் நடைபயணம் மேற்கொள்ளவிருக்கும் தனது முயற்சிக்கு ஆதரவு கோரினார். ...

Read more

சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் மின் தடை – பொதுமக்கள் அவதி

சென்னையில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் மின் தடை நிலவியதால் கடும் அவதி அடைந்த பொதுமக்கள் மின்சார வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மதுரவாயல், நெற்குன்றம், கோயம்பேடு, வளசரவாக்கம், போரூர், காரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் மின் தடை ஏற்பட்டது. இதனால், இரவில் உறங்கி கொண்டிருந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். நீண்ட நேரமாகியும் மின்சாரம் மீண்டும் வழங்கப்படாதத ...

Read more

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இருதயம் 13 நிமிடத்தில் கொண்டு செல்லப்பட்டு இளம் பெண்ணுக்கு பொருத்தப்பட்டது

சென்னையில் மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட இதயத்தை கடும் முயற்சிக்கு பிறகு கல்லூரி மாணவிக்கு வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட இதயம் மற்றொருவருக்கு 4 மணி நேரத்திற்குள் பொருத்தப்பட வேண்டும் என்பதால், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து அடையாறு மலர் மருத்துவமனைக்கு எவ்வித தாமதமும் இன்றி இதயம் எடுத்த செல்ல திட்டமிடப்பட்டது. இதனை அடுத்து, ...

Read more

தங்கம் விலை உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரேநாளில் சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்துள்ளது. வர்த்தகம் தொடங்கி‌ய உடன் தங்கம் ஒரு கிராம் 29 ரூபாய் வரை உயர்ந்து, சவரனுக்கு 232 ‌ரூபாய் ஏற்றம் கண்டது. இதனால் சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 20 ஆயிரத்து 984 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 2 ஆயிரத்து 623 ரூபாயாக உள்ளது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு 31 ரூபாய் உயர்ந்து 2 ஆயிரத்து 805 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. இதனா ...

Read more

ஒட்டிவாக்கம் கல்குவாரியை தடைசெய்யப்பட்ட பகுதி என அறிவிக்க பொது‌மக்கள் கோரிக்கை

சென்னை மேடவாக்கத்தை அடுத்த ஒட்டிவாக்கம் கல்குவாரி நீர்தேக்கம் உயிர்பலி வாங்கி வருவதால் இப்பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதி என அறிவிக்க பொது‌மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சோழிங்கநல்லூரை அடுத்த ஒட்டிவாக்கம் கல்குவாரி நீர்த்தேக்கத்தில் இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பள்ளிக்கல்லூரி மாணவர்கள் குளிப்பதற்காக வருகின்றனர். ஆனால், இந்த நீர்த்தேக்கத்தில் குளிக்கும்போது நீரில் மூழ்கி பலியாகும் நிலை ஏற்படுகிறது. ...

Read more

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை

சென்னை மற்று‌ம் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால், இதனிடையே, சென்னையின் பல இடங்களில் நள்ளிரவில் ஏற்பட்ட மின்வெட்டு, தற்போது‌ வரை திரும்பி வரவில்லை என்று ‌கூறப்படுகிறது‌. திடீர் மழையால் வெப்பம் தணிந்திருந்தாலு‌ம், மின்வெட்டு ஏற்பட்டதால், பொது‌மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, மேற்கு தெ ...

Read more

ஆங்கில வழி கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து‌ உண்ணாவிரத போராட்டம்

ஆங்கில வழிகல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து‌ காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஆனந்தன் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தமிழ் மொழியை பயிற்று‌ மொழியாக கொண்டுள்ள அனைத்து‌ பள்ளிகளிலு‌ம் ஒன்றாம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை தமிழை தவிர அனைத்து‌ பாடங்களும் ஆங்கில வழி கல்வியை கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து‌ இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். காமராஜர் ஆட்சிகாலத்தில் அனைத்து‌ ...

Read more

© Captain Media Pvt Ltd

Scroll to top